என் மலர்


கெழப்பய
- 1
- 1
- 1
வாரம் | 1 | 2 | 3 |
---|---|---|---|
தரவரிசை | 410 | 365 | 189 |
Point | 21 | 21 | 12 |
நேர்மையான முதியவர் குறித்த கதை
கதைக்களம்
செக்யூரிட்டி வேலை பார்க்கும் 65 வயது முதியவரான கதிரேசன் சைக்கிளில் சாலையில் சென்றுகொண்டிருக்கிறார். இவருக்கு பின்னால் ஒரு பெண் உட்பட நான்கு பேர் கொண்ட கும்பல் காரில் வருகிறார்கள். இவர்களுக்கு வழி விடாமல் கதிரேசன் செல்கிறார்.
தங்களுக்கு வழிவிட மறுக்கும் முதியவர் கதிரேசனின் செயல் அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. காரை நிறுத்திவிட்டு அவரிடம் சென்று பேசுகிறார்கள். ஆனால் அவரோ, அவர்களிடம் பேசாமல் தொடர்ந்து வழிவிட மறுக்கிறார். இதனால் கதிரேசனை அந்த கும்பல் தாக்குகிறது. அப்போதும் வழிவிட மறுக்கிறார்.
இறுதியில் முதியவர் கதிரேசன் அந்த காருக்கு வழிவிட மறுக்க காரணம் என்ன? கதிரேசனை தாண்டி காரை எடுத்து சென்றார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
முதியவர் கதாபாத்திரத்தில் வரும் கதிரேசன் யதார்த்தமாக நடித்து இருக்கிறார். முதல் பாதி பேசாமல் நடித்து கவனிக்க வைத்து இருக்கிறார். இரண்டாம் பாதியில் ஆங்காங்கே சிரிப்பையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறார். முழு கதையும் தன்னை சுற்றியே பயணிக்கிறது என்பதை கொஞ்சம் புரிந்து நடித்து இருக்கலாம். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
சிறிய கதையை வைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் யாழ் குணசேகரன். இயக்குனரின் புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள். ஆனால், ஒரே இடத்தில் காட்சிகள் நகர்வதால் சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கதாபாத்திரங்களை இன்னும் நடிக்க வைத்து இருக்கலாம்.
இசை
கேபியின் பின்னணி இசை ஒரு சில இடத்தில் சிறப்பாகவும், ஒரு சில இடத்தில் இரைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது.
ஒளிப்பதிவு
அஜீத்குமார் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
படத்தொகுப்பு
கே.என். ராஜேஷ் படத்தொகுப்பு கவனிக்க வைத்துள்ளது.
புரொடக்ஷன்
சீசன் சினிமா தயாரிப்பில் ‘கெழப்பய' திரைப்படம் வெளியாகியுள்ளது.