என் மலர்


கொலை தூரம்
- 0
- 0
- 1
வாரம் | 1 |
---|---|
தரவரிசை | 467 |
Point | 8 |
துபாயில் வேலைப் பார்ப்பவனின் மனைவி அவனை ஏமாற்றுகிறாள் அவளை பழிவாங்கும் பற்றிய கதை
கதைக்களம்
குடும்பத்தின் பண சூழ்நிலைக்காரணமாக கதாநாயகன் யுவன் பிரபாகரன் பல வருடங்களாக துபாயில் பணிப்புறிகிறார். பின் அவர் குடும்பத்தின் பணத்தேவையை பூர்த்தி செய்துவிட்டு சொந்த ஊருக்கே திரும்புகிறார். அதன் பிறகு அவருக்கு திருமணம் நடக்கிறது. திருமணம் ஆகிய சில நாட்களிலேயே மனைவியின் மீது சந்தேகம் வருகிறது. அதனால் மனைவியை கொலை செய்கிறார் யுவன்.
துபாயில் யுவனுக்கு 4 நண்பர்கள் உள்ளனர். அவர்களின் மனைவிகளும் இவ்வாறு தவறான தொடர்பில் உள்ளதாக தெரிய வருகிறது யுவனுக்கு. தன்னுடைய மனைவியைப் போல் தன் நண்பர்களின் மனைவிமார்களும் பிறத்தேவைகளுக்காக கணவனை ஏமாற்றுவதால் யுவனுக்கு கோபம் வருகிறது. அனைவரையும் கொலை செய்ய முடிவு செய்கிறார். இதற்கடுத்து என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.
நடிகர்கள்
அறிமுக நடிகரான யுவன் பிரபாகரன் மற்றும் சமந்து நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் . யுவன் அனைத்து காட்சிகளுக்கு ஒரே மாதிரியான முக பாவனை வைத்து இருப்பது பார்வையாளர்களுக்கு சலிப்பை தட்டுகிறது. போண்டா மணி, மற்றும் சீரியலில் நமக்கு பரிட்சையமான முகங்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர் அவர்களுக்கான பங்கை நன்றாக செய்துள்ளனர்.
இயக்கம்
இக்காலத்திற்கு ஏற்றார்போல மாடர்ன் கதைக்களத்தை எடுப்பதாக நினைத்து சொதப்பி இருக்கிறார் இயக்குனர் பிரபு. படத்தை காட்சி படுத்துவதிலும் , நடிகர்கள் நடிக வைப்பதிலும் இயக்குனர் சரியான பணியை மேற்கொள்ளவில்லை. படத்தின் திரைக்கதையும் , காட்சி அமைப்பும் கிலோ என்ன விலை என்று கேட்பதுப்போல் இயக்கி இருக்கிறார். பார்வையாளர்களுக்கு முதல் கொஞ்சம் நேரத்திலேயே சலிப்பை தட்டுகிறது.
ஒளிப்பதிவு
படத்தின் ஒளிப்பதிவில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம் செந்தில்.
இசை
இந்திரஜித்தின் இசை கதைக்களத்திற்கு பலவீனம்
தயாரிப்பு
கொலை தூரம் படத்தை பிரபாகரன் தயாரித்துள்ளார்.