என் மலர்


கொஞ்சம் பேசினால் என்ன
- 0
- 0
- 1
வாரம் | 1 | 2 |
---|---|---|
தரவரிசை | 365 | 366 |
Point | 41 | 21 |
லாக் டவுனில் ஏற்பட்ட விர்சுவல் காதலை பற்றிய கதை
கதைக்களம்
படத்தின் கதைக்களம் கொரோனா காலக்கட்டத்தில் நடைப்பெறுகிறது. பப்ஜி கேமின் மூலம் கதாநாயகியான கீர்த்தி பாண்டியனை கதாநாயகனான வினோத் கிஷன் சந்திக்கிறார். ஆனால் கீர்த்தி பாண்டியன் வினோத் தங்கையின் கிளாஸ்மேட் என வினோத்துக்கு தெரியாது.
கீர்த்தி பாண்டியன் ஒரு பேஷன் டிசைனராக பணியாற்றுகிறார். வினோத் ஒரு படம் வரையும் ஆர்டிஸ்டாக இருக்கிறார். வேலையின் காரணமாக கீர்த்தி , வினோதின் உதவியை நாடுகிறார். அதற்காக வினோதை இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொள்கிறார் கீர்த்தி. அதற்கு பிறகு ஆரம்பமான நட்பு பின் நாட்களில் காதலாக மலருகிறது. தினமும் ஃபோன், வீடியோ கால், மெசெஜ்கள் நாட்கள் நகர்கிறது.
இச்சூழலில் வினோத்தின் நெருங்கிய நண்பனின் காதலில் விரிசல் ஏற்படுகிறது. இதனால் வினோத் தன்னுடைய காதலிலும் இதுப்போல எதிர்காலத்தில் நடக்கக்கூடும் என நினைத்து கீர்த்தி பாண்டியனிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பேசுவதை நிறுத்திக் கொள்கிறார். இதுவே அவர்களுக்குள் ஒரு சண்டையாக உருவாகிறது. இவர்களின் காதல் கை கூடியதா? பள்ளி பருவத்தில் இருந்தே வினோத்தை தெரியும் என கீர்த்தி கூறினாளா? இருவரும் நேரில் சந்தித்தனரா? என்பதே படத்தின் மீதிக் கதை.
நடிகர்கள்
வினோத் கிஷன் அவரது பங்கை சிறப்பாக செய்துள்ளார். கீர்த்தி பாண்டியன் துறுதுறுவென நடித்து பார்வையாளர்களின் மனதில் எளிதில் பதிகிறார். விஜே ஆஷிக் கொடுத்த வேலையை செய்துள்ளார்.
இயக்கம்
லாக்டவுனில் ஏற்படும் காதலை மையமாக எடுத்து இருக்கிறார் இயக்குனர் கிரி மர்ஃபி. முதல் சில காட்சிகள் சுவாரசியமாக இருந்தாலும் அந்த சுவாரசியம் படிப்படியாக குறைகிறது. கதை ஒர் இடத்தில் நின்று அடுத்த கட்டத்திற்கு நகர மறுக்கிறது. பெரும்பாலான காட்சிகள் வீட்டில் நடப்பதால் பார்வையாளர்களுக்கு சலிப்பை தட்டுகிறது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். குறும்படமாக எடுக்கும் கதையை முழுநீள படமாக எடுத்தது படத்தின் பலவீனம்.
இசை
தீபன் சக்கரவர்த்தியின் இசை கேட்கும் ரகம், பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
ஒளிப்பதிவு
லெனின் ஒளிப்பதிவில் மிரட்டியுள்ளார். கதாநாயகன் காட்சிக்கு ஒரு கலர் டோனும், கதாநாயகி காட்சிகளுக்கு ஒரு விதமான கலர் டோனும் செட் செய்து மிக அழகாக ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரு வீட்டை எப்படி எல்லாம் அழகாக காட்சி படுத்த முடியுமோ அதற்காக முயற்சியை செய்துள்ளார் லெனின்.
தயாரிப்பு
சமீர் பாரத் ராம் சார்பாக சூப்பர் டாக்கீஸ் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.