என் மலர்


க்ரேவன்: தி ஹண்டர்
- 0
- 0
- 1
வாரம் | 1 | 2 |
---|---|---|
தரவரிசை | 386 | 329 |
Point | 32 | 48 |
விலங்குகளை காப்பாற்றும் ஒரு சூப்பர் ஹியூமனினின் கதை
கதைக்களம்
கதாநாயகனான ஆரோன் டெய்லர் வேட்டையாடும் குடும்பத்தை சார்ந்தவர். இவரின் தந்தை மிகச் சிறந்த வேட்டையனாக உள்ளார். ஊரில் சமூகத்திற்கு தீங்கு விலைவிக்கும் போதை பொருள் கடத்தலிலும் ஈடுப்பட்டு வருகிறார். உயிர்கள் மேல் எந்த ஒரு கருணையும் காட்டாத ஒரு நபராக இவரது தந்தை இருக்கிறார். இதனால் ஆரோனுக்கு அவரது தந்தையை பிடிக்காமல் போகிறது. ஆரோன் டெய்லருக்கு ஒரு தம்பி இருக்கிறார். ஆரோனுக்கு தனி சூப்பர் பவர் இருக்கிறது ஒருவகையான வசியம் செய்யும் திறனாக அதை வெளிப்படுத்துகின்றனர். ஒரு நாள் இவர்கள் காட்டுக்குள் ஸ்கார் எனப்படும் சிங்கத்தை வேட்டையாட செல்கின்றனர்.
அப்போது ஆரோன் டெய்லரை மிகவும் கொடுமையாக அந்த சிங்கம் தாக்குகிறது. பிறகு அதில் பயங்கரமாக காயம் பட்டு ஒரு வழியாக தப்பித்து வருகிறார். அப்போது இவரை கதாநாயகி அரியானா ஒருவகை மருந்து கொடுத்து காப்பாற்றுகிறார். அதை குடித்த பிறகு ஆரோனுக்கு பல சூப்பர் பவர்களை பெறுகிறார்.
மறுபக்கம் விலங்குகளை பணத்திற்காக கொலை செய்யும் கும்பல் இருக்கிறது. அந்த கும்பலின் முழு பட்டியலும் ஆரோனிற்கு கிடைக்கிறது. இந்த பட்டியலில் இருக்கும் ஒவ்வொரு ஆட்களையும் தேடி சென்று கொலை செய்கிறார் ஆரோன். இதனை தெரிந்துக் கொண்ட எதிரி கும்பல் ஆரோனின் தம்பியை கடத்தி வைத்துக் கொண்டு மிரட்டுகின்றனர். இப்பொழுது எப்படி ஆரோன் அவரது தம்பியை காப்பாற்றினார்? விலங்குகளை அழிக்கும் கும்பலை அழித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதாநாயகனான ஆரோன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் அட்டகாசம் செய்துள்ளார். கதாநாயகியான அரியான கொடுத்த வேலையை அழகாக செய்துள்ளார். வழக்கம் போல் ரஸ்ஸல் கிரவ் அவரது அனுபவ நடிப்பை கொடுத்து பார்வையாளர்கள் மனதில் எளிதில் பதிகிறார். வில்லனான அலெசாண்டரோ நிவோலா மற்றும் கிறிஸ்டோபர் அபாட் அவர்களின் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.
இயக்கம்
மனிதன் அவனின் தேவைக்காகவும் பணத்திற்காகவும் விலங்குகளை வேட்டையாடுகிறான் அது தவறு என முயற்சிக்கும் நோக்கில் கதைக்களத்தை அமைத்துள்ளார் இயக்குனர் சாந்தோர். வழக்கமான கதையாக இருந்தாலும் அதில் இந்த சூப்பர் ஹியூமன்ஸ் மற்றும் சூப்பர் பவர்களை வைத்து வித்தியாசமாக கையாள முயற்சி செய்துள்ளார். திரைப்படத்தில் வரும் ஆக்சன் காட்சிகளும் கிளைமாக்ஸ் காட்சிகள் மிகவும் சுவாரசியமாக படமாக்கியுள்ளனர். திரைப்படத்தின் பிற காட்சிகளில் எல்லாம் நிறைய வசங்களை பேசிக்கொண்டே இருக்கின்றனர் அது பார்ப்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. காட்சியமைப்பில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம்.
ஒளிப்பதிவு
பென் டேவிஸ் அருமையான் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். ஆக்சன் காட்சிகளில் மிரட்டியுள்ளார்.
இசை
பெஞ்டமின் உடௌய பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்.
தயாரிப்பு
சோனி பிக்சர்ஸ் எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.