என் மலர்
குடும்பஸ்தன்
- 0
- 1
- 1
வாரம் | 1 |
---|---|
தரவரிசை | 40 |
Point | 2529 |
ஒரு நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் நகைச்சுவை கதையாக அமைந்துள்ளது.
கதைக்களம்
மணிகண்டன் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இவர் பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலைப் பார்த்து வருகிறார். கதாநாயகியான சான்வி மேகனாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார். மணிகண்டனுக்கு பிரிண்டிங் பிரஸ்ஸில் இருந்து வேலையை இழக்கிறார். இதனால் குடும்பத்தை நடத்த கடன் வாங்குகிறார். வேலை இழந்ததை தன் குடும்பத்திற்கு தெரியாமல் வேறு வேலையை தேடுகிறார். ஒரு பக்கம் கடன் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வேலையும் கிடைக்கவில்லை. குடும்ப சூழ்நிலையும் பணம் நெருக்கடி கொடுக்க மணிகண்டன் அதற்கு அடுத்து என்ன செய்தார்? வேலை அவருக்கு கிடைத்ததா? பணப் பிரச்சனையில் இருந்து மீண்டாரா? என்பதை படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நடிகர் மணிகண்டன் ஒரு குடும்பஸ்தனாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பணம் இல்லாமல் தவிப்பது, மனைவியுடன் காதல் குறும்பில் இருப்பது, வேலை இல்லாமல் அலைவது என ஒரு மக்களின் பிரதிநிதியாக இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் சான்வி மேக்னா, புதுவரவு என்ற தடம் தெரியாமல் புகுந்து விளையாடியிருக்கிறார்.
மணிகண்டன் ஒரு பக்கம் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார் என்றால். மறுபக்கம் குரு சோமசுந்தரம் பணம் தான் முக்கியம் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பார்வையாளர்கள் மனதில் பதிகிறார். அவர் வரும் காட்சிகள் அனைத்தும் திரையரங்குகளில் சிரிப்பலையால் நிரம்புகிறது.
நாயகனின் அக்காவாக நடித்திருக்கும் நிவேதிதா ராஜப்பன், மணிகண்டனின் முதலாளியாக நடித்திருக்கும் இயக்குநர் பாலாஜி சக்திவேல், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், அனிருத் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் அவர்களின் கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.
இயக்கம்
குடும்பத்திற்காக ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு ஆண் மகனின் கதையை மிகவும் நகைச்சுவையாக இயக்கியுள்ளார் ராஜேஷ்வர் காளிசாமி. பலர் கடந்து வந்த வாழ்க்கை, பலர் கடக்க முயற்சித்திக் கொண்டிருக்கும் வாழ்க்கை, என பார்வையாளர்களை படத்துடன் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில் காட்சிகளை வடிவமைத்து அனைவரும் ரசிக்கும்படி காட்சிகளை அமைத்தது படத்தின் ப்ளஸ். படத்தின் இரண்டாம் பாதியின் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். படத்தில் பல இடத்தில் நகைச்சுவை காட்சிகள் வொர்க் அவுட் ஆகியுள்ளது. குரு சோமசுந்தரத்தின் காட்சிகள் படத்தின் பெரிய பலமாக அமைந்துள்ளது.
இசை
இசையமைப்பாளர் வைசாக் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் சுஜித் என். சுப்பிரமணியம் மிக அழகாகவும் நேர்த்தியாகவும். மிக அலட்டல் இல்லாமல் கதைக்கேற்ப ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
தயாரிப்பு
Cinemakaaran தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
Super