என் மலர்
குய்கோ
- 0
- 0
- 0
வாரம் | 1 |
---|---|
தரவரிசை | 137 |
Point | 467 |
துபாயில் இருக்கும் இளைஞன் குறித்த கதை.
கதைக்களம்
எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் இருக்கும் ஊரில் யோகிபாபு வாழ்த்து வருகிறார். இவர் உள்ளூரிலேயே ஒரு பெண்ணை காதலிக்கிறார். யோகிபாபு மாடு மேய்ப்பதால் பெண் வீட்டார் பெண் கொடுக்க மறுக்கிறார்கள். இதனால் யோகிபாபு துபாய்க்கு வேலைக்கு செல்கிறார். அங்கு ராஜாவின் ஒட்டகத்தை மேய்வராக இருப்பதால் செல்வ செழிப்பாக இருக்கிறார்.
ஒருநாள் யோகிபாபுவின் அம்மா இறந்துவிடுகிறார். யோகிபாபு வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகும் என்பதால் பிணத்தை ஐஸ் பெட்டியில் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. அப்போது ஊருக்கு செல்ல பணம் வேண்டும் என்பதால் விதார்த் பணத்தை வாங்கிக் கொண்டு ஐஸ் பெட்டியை எடுத்து செல்கிறார்.
ஐஸ் பெட்டியை கொண்டு வைக்கும் பொழுது மின்சாரம் இல்லாமல் போகவே ஊர் மக்கள் விதார்த்தை மின் கம்பத்தில் ஏறி சரி செய்ய சொல்கிறார்கள். விதார்த்தும் வேறு வழியின்றி மின் கம்பத்தில் ஏறி சரி செய்து கொடுக்கிறார். அப்போது ஊர் தலைவர் நீ சென்றதும் மின்சாரம் சென்றுவிட்டால் ஊரில் பிரச்சனை ஏற்படும் அதனால் இங்கே இருந்து எல்லாம் முடிந்த பிறகு கிளம்பு என்று சொல்கிறார்.
இறுதியில் யோகிபாபு துபாயில் இருந்து வந்தாரா? விதார்த் தான் நினைத்த படி ஊருக்கு சென்றாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
யோகிபாபு தன் வழக்கமான காமெடி நடிப்பால் கவர்ந்திருக்கிறார். படம் முழுவதும் தன் தோளில் சுமந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து வரும் பொழுது கெத்து காண்பிப்பது. தாயை நினைத்து உருகுவது என எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெறுகிறார். விதார்த் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார்.
இயக்கம்
படத்தில் காமெடியை திணிக்காமல் எதார்த்தமாக இயக்கியுள்ளார் இயக்குனர் அருள் செழியன். இரண்டாம் பாதி முழுவதும் சிரிப்பலையுடன் நகர்கிறது. இறந்தவர்களை வீர மரணம் என குறிப்பிடுவது காவல் துறையை விமர்சிப்பது என பல விஷயங்களை வசனங்கள் மூலம் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
இசை
அந்தோணி தாசன் இசை ரசிக்க வைத்துள்ளது.
ஒளிப்பதிவு
ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு கதையுடன் நம்மையும் பயணிக்க வைத்துள்ளார்.
படத்தொகுப்பு
ராம் பாண்டியன் படத்தொகுப்பு அருமை.
புரொடக்ஷன்
ஏ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனம் ‘குய்கோ’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.