என் மலர்


குற்றப்பின்னணி
- 0
- 0
- 1
வாரம் | 1 | 2 |
---|---|---|
தரவரிசை | 463 | 379 |
Point | 9 | 15 |
கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் பெண்களை தேடி கொலை செய்யும் நாயகன்.
கதைக்களம்
கிராமத்தில் வீடு வீடாக தண்ணீர் கேன் மற்றும் பால் வினியோகம் செய்து வருகிறார் நாயகன் சரவணன். இவர் திடீரென ஒரு பெண்ணை கொடூரமாக கொலை செய்கிறார். அந்த பழியை பைனான்ஸ் தொழில் செய்து வரும் சிவா மீது போடுகிறார்.
கொலை வழக்கில் போலீசார் பைனான்ஸ் சிவாவை தேடி அலைகிறார்கள். அதே சமயம் தொடர்ந்து இன்னொரு பெண்ணையும் அவரது கணவரையும் கொலை செய்கிறார் சரவணன்.
இறுதியில் சரவணன் கொலை செய்வதற்கான காரணம் என்ன? பெண்களை குறி வைத்து கொலை செய்வது ஏன்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சரவணன், முக பாவனைகளில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். கொலை செய்துவிட்டு பால்காரனாக போலீஸ் நிலையத்துக்கு சென்று கொலையை பற்றி ஒன்றும் தெரியாதது போல் விசாரிப்பதும் பெண்களை கொலை செய்வதிலும் கொஞ்சம் யதார்த்தம் தெரிகிறது.
அவரது மனைவியாக வரும் தீபாலி பேசும் வசனங்கள் மற்றும் தாட்சாயினி, கராத்தே ராஜா, சிவா ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறது.
இயக்கம்
கள்ளத் தொடர்பு குடும்பங்களை எவ்வாறு சீரழிக்கும் என்பதை குற்றப் பின்னணியாக கொண்டு படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் இஸ்மாயில். இது போல் நிறைய படங்கள் வந்திருப்பதால், இப்படம் பெரியதாக எடுபடவில்லை. கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்களுக்கு நடிப்பதில் இன்னும் முதிர்ச்சி தேவை. பலரது முகத்தில் கூடுதல் நடிப்பு வெளிப்படையாக தெரிவது பலவீனம்.
இசை
ஜித் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ஒளிப்பதிவு
சங்கர் செல்வராஜின் ஒளிப்பதிவு கவனம் ஈர்க்கிறது.
தயாரிப்பு
பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.