என் மலர்


குழந்தைகள் முன்னேற்றக் கழகம்
- 0
- 0
- 1
வாரம் | 1 |
---|---|
தரவரிசை | 219 |
Point | 212 |
தமிழக போட்டி அரசியலை சிறுவர்களின் மூலம் நகைச்சுவையாக சொல்லும் கதை
கதைக்களம்
அரசியல் வாதியான யோகி பாபுவுக்கு இரண்டு மனைவிகள். இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டு மகன்களும் ஒரே பள்ளியில் படிப்பதுடன் அங்கு நடைபெறும் மாணவர் பேரவை தலைவர் தேர்தலில் யோகி பாபு முதல் மனைவிக்கு பிறந்த போட்டியிடுகிறார். அவரை தோற்கடிக்க இரண்டாவது மனைவியின் மகள் அத்வைத் திட்டமிடுகிறார். முடிவில் வென்றது யார்? என்பதே நகைச்சுவையுடன் வெளியான மீதி கதை.
நடிகர்கள்
ஒரு காலகட்டத்தில் நகைச்சுவை காட்சிகளில் வரலாறு படைத்த செந்திலும் இன்றைய காலகட்டத்தில் நகைச்சுவையில் கலக்கி வரும் யோகி பாபுவும் இணைந்து படத்தில் நடித்திருக்கும் காட்சிகள் கலகலப்பை ஏற்படுத்துகின்றன. யோகி பாபு மகன்களாக வரும் சிறுவர்கள் இதய வர்மன். அத்வைத் ஆகியோர் நடிப்பு வயதுக்கு தகுந்தாற்போல் இல்லாமல் இயல்பாக அமைந்துள்ளது. மறைந்த மயில்சாமி மற்றும் சித்ராலட்சுமணன், சுப்பு பஞ்சு வைகா ரோஸ்,ஆகியோரின் நடிப்பு ரசிக்க வைக்கின்றன.
இயக்கம்
தமிழக போட்டி அரசியல், குடும்ப அரசியல் ஆகியவற்றை குழந்தைகள் அரசியலாக நகைச்சுவை யோடும் கலகலப்போடும் கொடுத்துள்ளார் மறைந்த இயக்குனர் சங்கர் தயாள். இயக்குநரின் அரசியல் நையாண்டிகள் காட்சிகள் மூலம் புரிந்தாலும், அதில் இருந்த நகைச்சுவை தான் பெரிதாக எடுபடவில்லை. குறிப்பாக யோகி பாபுவை படம் முழுவதும் வருவது போல் காட்டுவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்திருக்கிறது. அவரை ஒட்ட வைத்த காட்சிகள் அப்பட்டமாக தெரிகிறது.
சிறுவர்களிடம் வேலை வாங்கிய விதம் மற்றும் பள்ளி மாணவர் தலைவர் தேர்தல் மூலம் அவர்களுக்கிடையே ஏற்படும் போட்டி, அதில் நடக்கும் சதி, ஏமாற்றம், அதை தொடர்ந்து இரண்டு சிறுவர்களின் அரசியல் எதிர்காலம் ஆகியவற்றை நகைச்சுவையாக சொல்லி பார்வையாளர்களை சிரிக்க வைத்து விடுகிறார் இயக்குநர் என்.சங்கர் தயாள்.
இசை
சாதகப் பறவைகளின் இசை கவனிக்க வைக்கிறது.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் ஜெ.லக்ஷ்மண் குமாரின் ஒளிப்பதிவிலும் குறையில்லை.
தயாரிப்பு
Meenakshi Amman Movies நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.