என் மலர்
மத கஜ ராஜா
- 0
- 0
- 1
வாரம் | 1 |
---|---|
தரவரிசை | 97 |
Point | 880 |
நண்பனின் பிரச்சனைகளை சரிசெய்யும் கதாநாயகனின் கதை.
கதைக்களம்
நடிகர் விஷால் கேபிள் டி கம்பெனியை வைத்து நடத்தி வருகிறார். இவர் நடிகை அஞ்சலியை காதலித்து வருகிறார். இவரின் பள்ளி நண்பர்களான சந்தானம், நித்தின் சத்யா மற்றும் சடகோபன் ரமேஷ் ஒரு ஒரு வேலைப்பார்த்து வருகின்றனர். இவர்களின் பள்ளி ஆசிரியரின் மகளுக்கு திருமணத்திற்காக அனைவரும் ஒன்றாக குடும்பத்துடன் கலந்துக் கொள்கின்றனர். இப்படி அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது சந்தானம் மற்றும் அவரது மனைவிக்கு பிரச்சனை இருப்பதி விஷாலுக்கு தெரிந்து அதனை சரி செய்து வைக்கிறார். அதேப்போல் சடகோபன் ரமேஷ் மற்றும் நித்தினிற்கு சோனு சூட் மூலம் பிரச்சனை ஏற்பட்டுள்ளதை தெரிந்துக் கொண்டு அதனை சரி செய்வதற்காக இவர்களுடன் சென்னை வருகிறார். சென்னையில் மிகப்பெரிய அந்தஸ்துடன் இருப்பவர் சோனு சூட். இதற்கு அடுத்து என்ன ஆனது? நண்பர்களுக்கு சோனு சூட் மூலம் என்ன பிரச்சனை? அதனை எப்படி விஷால் சரி செய்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
விஷால் மிகவும் துறுதுறுவென மிக கட்சிதமாக நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் மிகவும் கடினப்பட்டு நடித்துள்ளார். கிளைமாக்ஸ் காட்சிகளில் வரும் 6 பேக் வைத்து சண்டை போடும் காட்சிகள் பார்வையாளர்களை மிரள வைக்கிறது. இதன் மூலம் அவர் இப்படித்திற்காக செய்த உழைப்பை நம்மால் பார்க்க முடிகிறது. படத்தின் அடுத்த கதாநாயகனாக வலம் வருபவர் சந்தானம். அவரின் டைமிங் கவுண்டர் என திரையரங்கை சிரிப்பு அலையில் நிரப்புகிறார்.
அஞ்சலி மற்றும் வரலட்சுமி அவர்களுக்கான கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். கிளாமர் காட்சியில் பார்வையாளர்களை கட்டிப்போடுகின்றனர். மணிவண்ணன், மனோபாலா, ஆர்யா, நித்தின், சடகோபன் ரமேஷ், என அனைவரும் அவரது பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர்.
இயக்கம்
சுந்தர் சி க்கு என இருக்கும் தனி ஸ்டைலில் ஒரு குடும்ப பொழுது போக்கு திரைப்படமாக மத கஜ ராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார். திரைப்படம் உருவாக்கி 12 வருடங்கள் ஆன நிலையிலும் நகைச்சுவை காட்சிகள் , மற்றும் காட்சியமைப்பு புதிதாகவும் மக்களிடம் வொர்க் அவுட் ஆகும் வகையில் எடுத்தது படத்தின் பலம். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியையொட்டி வரும் நகைச்சுவை காட்சி பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது. சந்தானம் வரும் காட்சிகள் அனைத்துமே சிறப்பாக இயக்கியுள்ளார். சில லாஜிக் ஓட்டைகளும் திரைக்கதையில் சில தொய்வு இருந்தாலும் படத்தின் நகைச்சுவை காட்சிகள் அதை சரிக்கட்டிவிடுகிறது.
இசை
விஜய் ஆண்டனியின் இசை ரசிக்கும்படியுள்ளது. பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கிறது.
ஒளிப்பதிவு
ரிச்சர் எம் நாதனின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக அமைந்துள்ளது.
தயாரிப்பு
ஜெமினி பிலிம் சர்கியூட் நிறுவனம் தயாரித்துள்ளது