search icon
என் மலர்tooltip icon
    < Back
    மேக்ஸ் திரைவிமர்சனம்  | Max Review in Tamil
    மேக்ஸ் திரைவிமர்சனம்  | Max Review in Tamil

    மேக்ஸ்

    இயக்குனர்: விஜய் கார்த்திகேயா
    எடிட்டர்:எஸ் ஆர் கணேஷ் பாபு
    இசை:பி.அஜனீஷ் லோக்நாத்
    வெளியீட்டு தேதி:2024-12-27
    Points:140

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை262347
    Point12020
    கரு

    ஓர் இரவில் காவல் நிலையத்தில் நடக்கும் பிரச்சனையை மையமாக வைத்து கதை அமைந்துள்ளது.

    விமர்சனம்

    கதைக்களம்

    நேர்மையான காவல் அதிகாரியாக இருக்கிறார் கதாநாயகனான சுதீப் கிச்சா. இவர் நேர்மையால் இருப்பதாலே இவருக்கு பல பிரச்சனைகள் வருகிறது. இதனால் இவருக்கு அடிக்கடி டிரான்ஸ்ஃபர் செய்யப்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. அப்படி சென்னையில் உள்ள ஊருக்கு ஒத்துக்குப்புறமாக இருக்கும் ஒரு காவல் நிலையத்திற்கு மாற்ற செய்யப்படுகிறார். பதவி ஏற்க இருக்கும் நாளுக்கு முந்தைய நாள் காவல் நிலையத்திற்கு வரும் வழியில் இரு மந்திரியின் மகன்கள் இரவு ரோந்து பணியில் இருக்கும் பெண் காவல் அதிகாரிடம் தவறாக நடக்க முயற்சி செய்கின்றனர். இதை பார்த்த சுதீப் அவர்களை போட்டு அடித்து துவைத்து லாக்கப்பில் அடைக்கிறார். இவர்களை லாக்கப்பில் அடைத்து வைப்பதை எண்ணி பிற காவல் அதிகாரிகள் அச்சமடைகின்றனர்.

    மந்திரிகளின் மகன்கள் சிறையில் இருக்கும் செய்தியை கேட்டு மந்திரியின் அடியாட்கள் குழு குழுவாக காவல் நிலையத்திற்கு படையெடுக்கின்றனர். இதனால் அங்குள்ள காவல் அதிகாரிகளுக்கும் உயிர் ஆபத்து ஏற்படுகிறது.

    இச்சூழல் நிலவ அந்த இரண்டு இளைஞர்கள் மர்மமான முறையில் இறக்கின்றனர். சுதீப் அந்த இறந்த இளைஞர்களின் உடலை அப்புறப்படுத்துகிறார். இதனால் சுதீப்பிற்கு என்னென்ன பிரச்சனைகள் வந்தது? அந்த 2 இளைஞர்கள் எப்படி இறந்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    சுதீப் கிச்சா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளில் ஸ்கோர் செய்துள்ளார். வில்லன்களுக்காக உளவு பார்க்கும் கிரைம் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமாரின் கதாபாத்திர வடிவமைப்பும், அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பும் படத்தின் திருப்பங்களுக்கு கைகொடுத்திருக்கிறது.

    வில்லனாக நடித்திருக்கும் சுனில், பெண் காவலர்களாக நடித்திருக்கும் சம்யுக்தா ஹார்னட், சுக்ருத்வாக்லே, அமைச்சராக நடித்திருக்கும் சரத் லோகிதஸ்வா, வம்சி கிருஷ்ணா, ஆடுகளம் நரேன், இளவரசு, சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் உக்ரம் மஞ்சு என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைவரும், ஏதோ ஒரு திருப்பங்கள் மூலம் ரசிகர்களை கவர்வதோடு, திரைக்கதையில் முக்கிய இடம் பிடித்து விடுகிறார்கள்.

    இயக்கம்

    ஓர் ஒரவில் காவல் நிலையத்தில் நடக்கும் பிரச்சனையை மையமாக வைத்து இயக்கியுள்ளார் இயக்குனர் விஜய் கார்த்திக்கேயா. படத்தின் வேகமான திரைக்கதை திரைப்படத்திற்கு பெரிய பலம். விறுவிறுவென காட்சியமைப்பு பார்வையாளர்களை மிகவும் என்கேசிங்காக வைத்துள்ளது மிகவும் சிறப்பு. படம் தொடங்கிய 20 நிமிடங்களுக்குப் பிறகு ஒவ்வொரு காட்சிகளையும் திருப்பங்கள் நிறைந்தவையாக நகர்த்திச் செல்லும் இயக்குநர், அடுத்தது என்ன நடக்கும்? என்ற பதற்றத்தை பார்வையாளர்களிடம் கடத்தியிருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம்.

    இசை

    இசையமைப்பாளர் பி.அஜனீஷ் லோக்நாத் இசையில் பின்னணி இசை கேட்கும் ரகம். ஆக்‌ஷன் காட்சியின் போது வரும் பிஜிஎம் ரசிக்கும்படி உள்ளது.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் சேகர் சந்திரா ஒரு இரவில் நடக்கும் ஆக்‌ஷன் மாஸ் கதையில் இருக்கும் உணர்ச்சிப்பூர்வமான விசயங்களை பார்வையாளர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.

    தயாரிப்பு

    V Creations & Kichcha Creations நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×