என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
- எஸ்.பி.பி.சரண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
- குரல் உணர்வுப்பூர்வமாக இருக்காது.
ஏ.ஐ. தொழில் நுட்பம் சினிமா துறையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொழில் நுட்பத்தில் மறைந்த நடிகர்களை மீண்டும் நடிக்க வைக்கவும், மறைந்த பாடகர்கள் குரலை பயன்படுத்தி பாடல்களை உருவாக்கவும் முடிகிறது.
விஜய்யின் 'தி கோட்' படத்தில் மறைந்த பாடகி பவதாரிணி குரலில் பாடல் இடம்பெற்றது. ரஜினிகாந்தின் 'லால் சலாம்' படத்தில் மறைந்த பாடகர்கள் பம்பா பாக்யா, ஷாகில் ஆகியோரின் குரலில் பாடல்களை ஏ.ஆர்.ரகுமான் உருவாக்கி இருந்தார்.
'வேட்டையன்' படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடலில் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் குரலை பயன்படுத்தி இருந்தனர். இந்த நிலையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலை ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் பயன்படுத்த அவரது மகனும் பாடகருமான எஸ்.பி.பி.சரண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எஸ்.பி.பி.சரண் கூறும்போது, "ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலம் எனது தந்தை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலை பயன்படுத்த அனுமதி கேட்டு பலர் என்னிடம் பேசி வருகிறார்கள்.
ஆனால் நான் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டேன். ஏ.ஐ. மூலம் அவரது குரலை கேட்க எங்களுக்கு விருப்பம் இல்லை. ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் பயன்படுத்தும் குரல் உணர்வுப்பூர்வமாக இருக்காது'' என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் ராம் சரண் நடித்துள்ளார்.
- இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ராம் சரண் கடைசியாக ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக தமிழின் முன்னணி இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் ராம் சரண் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.
இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளைத் திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார்.
கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" மற்றும் 'ரா மச்சா மச்சா' பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இத்திரைப்படத்தின் 3வது சிங்கிளான 'லைரானா' பாடல் நாளை வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. தமன் இசையில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு விவேக் வரிகள் எழுதியுள்ளார்.
இத்திரைப்படம் பொங்கலை முன்னிட்டு அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
The most beautiful song from #GameChanger will be out tomorrow ❤️#NaanaaHyraanaa | #Lyraanaa | #JaanaHairaanSa ?@AlwaysRamCharan @shankarshanmugh @MusicThaman @singer_karthik @shreyaghoshal @SVC_official @ZeeStudios_ @saregamaglobal pic.twitter.com/kZdLdzNIy6
— Kiara Advani (@advani_kiara) November 27, 2024
- மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
- கெனிஷா பிரான்சிஸ் குறித்து பரவிய செய்திகளுக்கு ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார்.
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக அறிவித்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
இதற்கு பதில் அளித்த ஜெயம் ரவியின் மனைவி, "விவாகரத்து செய்யத்தில் எனக்கு விருப்பம் இல்லை என்றும் தனிப்பட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறேன்'' என்று தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, ஜெயம் ரவியும் பாடகி கெனிஷா பிரான்சிசும், நெருக்கமாக பழகுவதாகவும் இதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளார் என்றும் வலைத்தளத்தில் தகவல் பரவியது. ஆனால் கெனிஷா பிரான்சிஸ் குறித்து பரவிய செய்திகளுக்கு ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார்.
விவாகரத்து வழக்கில் சமரச தீர்வு மையத்தின் மூலமாக பேச இருவருக்கும் குடும்ப நலநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி சமரச பேச்சு வார்த்தைக்கு இன்று நேரில் ஆஜராகினர். பின்னர் இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 7ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர்.
- நீதிமன்றத்தின் கதவுகள் அடைக்கப்பட்டு இருவரிடமும் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது.
இயக்குநர் கஸ்தூரிராஜாவின் இளைய மகன் நடிகர் தனுஷுக்கும், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு லிங்கா , யாத்ரா என இரு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு ஐஸ்வர்யா திரைப்படங்களை இயக்கி வந்தார். மேலும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருவரும் கவனம் பெற்றனர். இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரியப்போவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர்.
இருவரும் பரஸ்பரத்துடன் பிரிவதாக அறிக்கை வெளியிட்டனர். இதனால் ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா மற்றும் தனுஷை சமாதானம் செய்யும் முயற்சிகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர்.
இதனை தொடர்ந்து, இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன்பு கடந்த 3-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கின் விசாரணை நவம்பர் 21-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
அப்போது இருவரும் ஆஜராகினர். அப்போது நீதிமன்றத்தின் கதவுகள் அடைக்கப்பட்டு இருவரிடமும் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிமன்ற விசாரணையில் தெரிவித்தனர். இதனை தொடர்ந்த இந்த வழக்கின் தீர்ப்பு நவம்பர் 27-ந்தேதி வழங்கப்படும் என குடும்ப நல நீதிமன்றம் அறிவித்தது.
அதன்படி, விவாகரத்து மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. தீர்ப்பில் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.
- யுவனின் சங்கர் ராஜா 'ஸ்வீட் ஹார்ட்' என்ற திரைப்படத்தை தயாரிக்கிறார்.
- இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இசைக்கு உலகம் முழுவதும் பல ரசிகர்கள் உள்ளன. தற்பொழுது விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இசையமைப்பது மட்டுமல்லாமல் அவர் படங்களை தயாரித்தும் வருகிறார்.
இதற்கு முன் ஹரிஷ் கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல் மற்றும் ஹை ஆன் லவ் என்ற படங்களை தயாரித்தார். இந்த இரண்டு படமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி இயக்கத்தில் மாமனிதன் திரைப்படத்தை தயாரித்தார்.
தற்பொழுது யுவனின் YSR பிலிம்ஸ் நிறுவனம் ஸ்வீட் ஹார்ட் என்ற திரைப்படத்தை தயாரிக்க உள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனரான ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்க ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில், ரியோ ராஜ் நடிக்கும் ஸ்வீட் ஹார்ட் படத்தின் போஸ்டரை நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படமும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
Wishing my dear brother @thisisysr on his next production through @YSRfilms titled #Sweetheart. A new-age romance drama starring the young and energetic @rio_raj and @gopikaramesh_ A Film by @SwineethSukumar A @thisisysr Musical#Yuvan183 #SweetHeartFirstLook @YSRfilms… pic.twitter.com/Tm1VZ0TL7M
— Silambarasan TR (@SilambarasanTR_) November 27, 2024
- மிஸ் யூ என்ற காதல் கதைக்களத்தை மையமாக கொண்டு இருக்கும் படத்தில் சித்தார்த் நடித்துள்ளார்.
- மிஸ் யூதிரைப்படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
கடந்த ஆண்டு சித்தார்த் நடிப்பில் எஸ்.யு அருண்குமார் இயக்கத்தில் வெளியான சித்தா திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. நடிகர் சித்தார்த்துக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருந்தது.
இந்தியன் 2 திரைப்படத்தை தொடர்ந்து மிஸ் யூ என்ற காதல் கதைக்களத்தை மையமாக கொண்டு இருக்கும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்ட் ப்ரொடக்ஷன் தயாரிக்க ராஜ்சேகர் இயக்கியுள்ளார். ராஜசேகர் இதற்கு முன் ஜீவா நடிப்பில் வெளியான களத்தில் சந்திப்போம் திரைப்படத்தை இயக்கியவராவார். இப்படத்தில் ஆஷிகா ரங்கனாத் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், அரசு விடுத்துள்ள புயல் எச்சரிக்கை காரணமாக 'மிஸ் யூ' திரைப்பட வெளியீட்டை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
மேலும் 'மிஸ் யூ' படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தெலங்கானாவில் நடிகர் சித்தார்த்துக்கும், நடிகை அதிதி ராவ் ஹைதரியும் திருமணம் செய்துகொண்டனர்.
- திருமணத்திற்கு பின்பு சித்தார்த்துக்கும், அதிதி ராவும் சேர்ந்து போட்டோசூட் எடுத்துள்ளனர்.
நடிகர் சித்தார்த்துக்கும், நடிகை அதிதி ராவ் ஹைதரிக்கும் இன்று தெலங்கானாவில் உள்ள வனபர்த்தியில் திருமணம் நடைபெற்றது.
இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல் வெளியானது.
பின்னர் தங்களது திருமண புகைப்படங்களை அதிதி ராவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அப்புகைப்படங்கள் அப்போது இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் திருமணத்திற்கு பின்பு சித்தார்த்துக்கும், அதிதி ராவும் சேர்ந்து போட்டோசூட் எடுத்துள்ளனர். அந்த புகைப்படங்களை அதிதி ராவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அஜித் குமார் ரேசிங் என்ற கார் பந்தய கம்பனியை நடிகர் அஜித்குமார் தொடங்கியுள்ளார்.
- ரேசிங் பந்தய அணியின் காரை நடிகர் அஜித்குமார் அறிமுகப்படுத்தினார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்ஸ் எனும் நிறுவனத்தை துவங்கி, பைக் ரைடிங் ஆர்வலர்களுக்கு வணிக நோக்கில் ரைடிங் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது.
இதுதவிர அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் கார் ரேசிங் பந்தயத்தில் கலந்து கொள்ள போவதாக அஜித் குமார் அறிவித்து 'அஜித் குமார் ரேசிங்'-ஐ துவங்கினார். அந்த வகையில், துபாய் ஆட்டோடிரோம் பந்தய களத்தில் நடிகர் அஜித் குமார் போர்ஷே ஜிடி 3 கப் காரை டெஸ்டிங் செய்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் சிறு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. மேலும், ரேசிங் பயிற்சி வீடியோவை அஜித் குமாரின் மனைவி ஷாலினி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், தனது ரேசிங் பந்தய அணியின் காரை நடிகர் அஜித்குமார் அறிமுகப்படுத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த காரில் அஜித்குமார் ரேசிங் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை லோகோவும் அந்த காரில் பதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
Ajith sir car revealed for 24HSeries. | #AK #Ajith #Ajithkumar | #VidaaMuyarchi | #GoodBadUgly | #AjithKumarRacing | #24HSeries | pic.twitter.com/82xyeqJSkU
— Ajith (@ajithFC) November 27, 2024
- முதல்முறையாக தனது காதலை கீர்த்தி சுரேஷ் உறுதி செய்துள்ளார்.
- வருங்கால கணவர் ஆண்டனியுடன் இருக்கும் புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார்.
தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். தமிழ் தெலுங்கில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தியில் தெறி படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இப்படி பிசியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் விரைவில் துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
15 ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்களின் திருமணத்திற்கும் இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர் என்றும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் முதல்முறையாக தனது காதலை கீர்த்தி சுரேஷ் உறுதி செய்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வருங்கால கணவர் ஆண்டனியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "எங்களது 15 வருட காதல் இன்னும் தொடர்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
15 years and counting ♾️?It has always been.. AntoNY x KEerthy ( Iykyk) ?❤️ pic.twitter.com/eFDFUU4APz
— Keerthy Suresh (@KeerthyOfficial) November 27, 2024
- கடந்த சில வாரங்களுக்கு முன்பு சூர்யா 45' பட அறிவிப்பு தொடர்பான முதல் போஸ்டரும் வெளியாகியது.
- முதற்கட்ட படப்பிடிப்பை 35 நாட்கள் கோவையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களுடன் ஓடி கொண்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கி விட்டார். நடிகர் சூர்யாவின் 45-வது படம் தொடர்பான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது.
சூர்யாவின் 45-வது திரைப்படத்தை நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
ஆர்.ஜே.வாக இருந்து 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆர்.ஜே.பாலாஜி. 'மூக்குத்தி அம்மன்', 'வீட்ல விசேஷம்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சூர்யா 45' பட அறிவிப்பு தொடர்பான முதல் போஸ்டரும் வெளியாகியது.
இந்த நிலையில் சூர்யா 45-ன் படப்பிடிப்பு இன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலில் பூஜையுடன் தொடங்கியது.
இதில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி, படத்தின் தயாரிப்பாளர் மற்றும் ஆர்.ஜே.பாலாஜியின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாசாணியம்மன் கோவிலில் சூர்யா மனமுருக வழிபட்டார்.
இந்நிலையில் சூர்யா 45 படத்தின் பூஜை புகைப்படங்களை அப்படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
முதற்கட்ட படப்பிடிப்பை 35 நாட்கள் கோவையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான், ஆர்.ஜே.பாலாஜி காம்போ ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Actor Suriya, RJ Balaji and the crew of #Suriya45 offered prayers at Masaniamman Temple in Anamalai near Pollachi on Wednesday. @TheHinduCinema @Suriya_offl @RJ_Balaji pic.twitter.com/op8wj15CeV
— Wilson Thomas (@wilson__thomas) November 27, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விழாவில் இளையராஜா, வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.
- 2020-ம் ஆண்டு ஆரம்பித்த இந்த படம் தொடர்பான அனுபவங்களை குறித்து பேசினார்.
இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். இதில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். 'விடுதலை 2' திரைப்படம் அடுத்த மாதம் 20-ந் தேதி வெளியாகவுள்ளது.
இதையடுத்து, 'விடுதலை 2' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது. படத்தின் டிரெய்லர் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது.
இந்த விழாவில், இளையராஜா, வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது இயக்குனர் வெற்றி மாறன் பேசுகையில், 2020-ம் ஆண்டு ஆரம்பித்த இந்த படம் தொடர்பான அனுபவங்களை குறித்து பேசினார். இதனை தொடர்ந்து படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து அவர் பேசிக்கொண்டிருக்கையில் அருகில் இருந்த ஒருவர் வெற்றிமாறனிடம் பெயர் சொல்லல என்று கூற அதற்கு வெற்றிமாறன், நான் தான் யார் பெயரையும் சொல்லவில்லை என சொல்லிவிட்டேன். அப்புறம் ஏண்டா... டீம் என்றால் எல்லாரும் தானே... என்று சொல்லி நன்றி சொல்லிவிட்டு வேகமாக தனது இருக்கைக்கு சென்று விட்டார்.
இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
#Vetrimaaran got angry on Stage and wrapped his speech quickly..? pic.twitter.com/KHkJc93uA2
— Laxmi Kanth (@iammoviebuff007) November 26, 2024
- நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்தார்.
- நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நடிகை நயந்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
நடிகை நயன்தாராவின் சினிமா வாழ்க்கை மற்றும் திருமண நிகழ்ச்சிகள் ஆவணப்படமாக உருவாக்கப்பட்டு கடந்த 18-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது.
முன்னதாக ஆவணப்படத்தின் முன்னோட்ட காட்சிகளில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகள் முன் அனுமதி இல்லாமல் இடம் பெற்றுள்ளதாகவும் இதற்கு இழப்பீடாக ரூ.10 கோடி கேட்டும் நடிகர் தனுஷ் நயன்தாராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இதை கண்டித்து தனுஷ் மீது நயன்தாரா பல குற்றச்சாட்டுகளை கூறி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
தனுஷ் எதிர்ப்பை மீறி கடந்த 18-ந்தேதி வெளியான நயன்தாரா ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில் நயன்தாராவுக்கு எதிராக தனுசின் வொண்டர்பார் நிறுவனம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு தொடர்பாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி அப்துல் குத்தூஸ் தள்ளி வைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்