என் மலர்
மின்மினி
- 0
- 0
- 1
வாரம் | 1 | 2 | 3 |
---|---|---|---|
தரவரிசை | 201 | 204 | 200 |
Point | 233 | 232 | 4 |
நண்பனின் ஆசையை நிறைவேற்றும் நண்பர்களின் கதை
கதைக்களம்
ஊட்டியில் உள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் கெளரவ் காளை, சிறந்த கால்பந்தாட்ட வீரராக திகழ்கிறார். கதாநாயகனான பிரவின் அப்பள்ளியில் பாதியில் வந்து சேர்கிறார். அங்கு ஏற்கனவே தனக்கென ஒரு நண்பர்கள் கூட்டத்துடன் இருக்கிறார் கௌரவ் காளை. படிப்பில் ஆர்வம் உடன் இருக்கும் பிரவின் இவரிடம் இருந்து தள்ளியே இருக்கிறார். இவர்கள் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுகிறது. ஒருக்கட்டத்தில் கௌரவ் ,பிரவினிடம் நட்பு வளர்க்க முயற்சி செய்கிறார் ஆனால் பிரவின் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. பள்ளியில் இருந்து சுற்றுலா பயணம் செல்கிறார்கள் அப்பொழுது இவர்கள் சென்ற வாகனம் பெரும் விபத்துக்குள்ளாகிறது. இதில் பலர் படுகாயம் அடைகின்றனர். இந்த விபத்தில் பிரவின் உயிரை காப்பாற்ற கௌரவ் காளை முயற்சி செய்து இறந்து விடுகிறார். அவரது இறப்புக்கு பிறகு அவர் தன்னுடன் நட்பு பாராட்ட விரும்பியதை அறிந்துக்கொள்ளும் பிரவின் கிஷோர், குற்ற உணர்ச்சியில் மூழ்கி, கெளரவ் காளையின் வாழ்க்கையை வாழ தொடங்குகிறார்.
அவரது இதையத்தை நீண்ட நாட்களாக தகுந்த டோனார் கிடைக்காமல் இருக்கும் கதாநாயகியான எஸ்தர்க்கு பொறுத்துகிறார்கள். பின் எஸ்தர் கௌரவ் காளை-க்கு நன்றி சொல்லும் விதமாக அவர் எதிர்கால ஆசைகளை நிறைவேற்றும் எண்ணத்தில் அவர் படித்த அதே பள்ளிக்கூடத்தில் வந்து சேர்கிறார்.
இவர்கள் இருவரும் சேர்ந்து கௌரவ் காளையின் ஆசையான பைக்கில் இமாலய பயணம் செல்ல நினைக்கிறார்கள். வருஷங்கள் உருண்டோடுகிறது கௌரவ் காளையின் ஆசையை நிறைவேற்ற இவர்கள் இமாலயத்திற்கு பயணம் செய்கின்றனர். இந்த பயணம் அவர்களுக்கு என்ன கற்றுக் கொடுத்தது? எஸ்தர்-க்கும் பிரவினுக்கும் என்ன உறவு? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தின் முக்கிய கதாப்பாத்திரமான பிரவின், எஸ்தர் மற்றும் கௌரவ் காளை சிறுவயது பகுதிகளும் சரி, பெரியவர்கள் ஆனதுக்கு பிறகும் சரி, அழகான அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இயக்கம்
வாழ்க்கை பயணத்தில் நாம் எதிர்கொள்ளும் கசப்பான அஞுபவங்களை கடந்து அடுத்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டுமே தவிர, இலக்கே இல்லாமல் பயணிப்பது போல், அதையே நினைத்துக் கொண்டு இருக்க கூடாது, என்ற மெசஜை அமைதியான மற்றும் அழகான பயணத்தின் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஹலிதா ஷமீம், இதனை நீளமான பயணமாக சொல்லியிருப்பது ரசிகர்களை சற்று சோர்வடைய வைக்கிறது.
இசை
ஏ.ஆர் ரஹ்மானின் மகளான கதிஜா ரஹ்மான் இசையமைக்கும் முதல் திரைப்படமாகும் மின்மினி. பாடல்கள் கேட்கும் ரகமாக அமைந்துள்ளது. இவர்கள் பயணம் செய்யும் போது இடம் பெரும் பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது. பின்னணி இசை படத்தின் பலம்.
ஒளிப்பதிவு
இமாலய பயணத்தை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா காட்சிப்படுத்திய விதம் வியக்க வைக்கிறது. அங்கிருக்கும் ஆச்சரியமான விசயங்கள் அனைத்தையும் ரசிகர்களின் பார்வைக்கு கொண்டு வந்து சேர்த்திருப்பதோடு, இமாலயத்திற்கே நம்மலை அழைத்து செல்கிறார். நம்மளும் ஒரு தடவையாவது இந்த அழகை காண வேண்டும் என்ற உணர்வை பார்வையாளர்களிட கடத்திருக்கிறார்.
தயாரிப்பு
மனோஜ் பரமஹம்சா மற்றும் முரளி கிருஷ்ணன் இணைந்து மின்மினி படத்தை தயாரித்துள்ளனர்