என் மலர்
மூன்றாம் மனிதன்
- 0
- 0
- 0
வாரம் | 1 | 2 | 3 |
---|---|---|---|
தரவரிசை | 326 | 296 | 170 |
Point | 44 | 57 | 16 |
போலீஸ் அதிகாரியை கொன்றது யார் என்பது குறித்த கதை.
கதைக்களம்
ஒரு போலீஸ் அதிகாரி துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கை பாக்யராஜ் விசாரிக்கிறார். அப்போது போலீஸ் அதிகாரியின் செல்போனை வீட்டு வேலைக்காரியின் கணவன் விற்கிறார். இதை தெரிந்து கொண்ட பாக்யராஜ் அந்த நபரை விசாரிக்கும் போது வீட்டு வேலைக்காரிக்கும் போலீஸ் அதிகாரிக்கும் கள்ளத் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது.
இதையடுத்து பாக்யராஜ் வேலைக்காரியை விசாரணை செய்கிறார். இதன் மூலம் அவருக்கு பல விஷயங்கள் தெரிய வருகிறது. இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் போலீஸ் அதிகாரியின் மனைவியான சோனியா அகர்வால் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்.
இறுதியில் இந்த பிரச்சனைகள் என்ன ஆனது? போலீஸ் அதிகாரியை கொன்றது யார்? எதற்காக கொன்றார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
பாக்யராஜ் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். போலீஸ் அதிகாரியாக நடித்து கவர்ந்திருக்கிறார். சோனியா அகர்வால் தனது வழக்கமான நடிப்பை கொடுத்துள்ளார். வீட்டு வேலைக்காரியின் கணவனாக நடித்திருக்கும் இயக்குனர் ராம் தேவ் நடிப்பில் கவனம் செலுத்தியிருக்கலாம்.
இயக்கம்
கள்ளக்காதலை மையமாக வைத்து கதையை இயக்கியுள்ளார் இயக்குனர் ராம்தேவ். தன் சொந்த கதையை கதையுடன் சொல்லியிருப்பது போல் தோன்றுகிறது. நடிப்பை விட்டு விட்டு திரைக்கதையில் மட்டும் இயக்குனர் கவனம் செலுத்தியிருந்தால் கதை சிறப்பாக வந்திருக்கும்.
இசை
அம்ரிஷ் இசையில் பாடல்கள் ஓகோ. பின்னணி இசையில் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஒளிப்பதிவு
மணிவண்ணன் ஒளிப்பதிவு ஓகே.
படத்தொகுப்பு
துர்காஷ் படத்தொகுப்பில் கவனம் செலுத்தியிருக்கலாம்.
புரொடக்ஷன்
ராம் தேவ் பிக்சர்ஸ் நிறுவனம் ’மூன்றாம் மனிதன்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.