என் மலர்


Mr.ஹவுஸ்கீப்பிங்
- 0
- 0
- 1
வாரம் | 1 | 2 | 3 | 4 | 5 |
---|---|---|---|---|---|
தரவரிசை | 111 | 94 | 74 | 86 | 90 |
Point | 739 | 1378 | 559 | 67 | 8 |
90ஸ் கிட்ஸ் காதலையும், தற்போது உள்ள காதலையும் மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம்.
கதைக்களம்
கல்லூரியில் நாயகியை லாஸ்லியா துரத்தித் துரத்திக் காதலிக்கிறார் ஹரி பாஸ்கர். ஆனால், அவரை மதிக்காமல் நிராகரிக்கிறார் லாஸ்லியா. விரக்தியடையும் ஹரி பாஸ்கர், மொத்தக் கல்லூரியின் முன்பும் "இன்னும் நான்கே ஆண்டுகளில் லாஸ்லியாவை விட அழகான பெண்ணைக் காதலித்து, வாழ்க்கையிலும் வெற்றிபெற்றுக் காட்டுவேன்" எனச் சவால்விடுகிறார். இல்லையென்றால் வாழ்நாள் முழுவதும் லாஸ்லியாவின் வீட்டிலேயே வேலைக்காரனாக இருப்பதாகவும் சபதம் எடுக்கிறார்.
அவர் ஜாலியாக இந்தச் சபதத்தை சொன்னாலும், ஒரு கட்டத்தில் உண்மையிலேயே லாஸ்லியாவின் வீட்டில் வேலைக்காரராகச் சேர நேரிடுகிறது. இறுதியில் இருவரும் வாழ்க்கையில் இணைந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஹரி பாஸ்கர், காமெடி, காதல், சென்டிமென்ட், நடனம் என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகியை தூங்க விடாமல் செய்யும் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் லாஸ்லியா அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது உடை, உடல் மொழி, கோபம், பரிதவிப்பு என அனைத்திலும் நிறைவான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
தந்தையாக வரும் இளவரசு அனுபவ நடிப்பையும், தாயாக வரும் உமா பரிதாபத்தையும் கொடுத்து இருக்கிறார்கள். ரயான் அமெரிக்கா மாப்பிள்ளை போல் வந்து சென்றிருக்கிறார். ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார் ஷா ரா.
இயக்கம்
90ஸ் கிட்ஸ் காதலையும், தற்போது உள்ள காதலையும் மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அருண் ரவிச்சந்திரன். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை கலகலப்பாக திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார்.
ஒளிப்பதிவு
குளோத்துங்க வர்மனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
இசை
ஓஷோ வெங்கட்டின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கவனிக்க வைத்து இருக்கிறார்.
தயாரிப்பு
Sri Thenandal Films & Invade மீடியா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.