search icon
என் மலர்tooltip icon
    < Back
    புஷ்பா 2: தி ரூல் திரைவிமர்சனம் | Pushpa 2-The Rule Review in Tamil
    புஷ்பா 2: தி ரூல் திரைவிமர்சனம் | Pushpa 2-The Rule Review in Tamil

    புஷ்பா 2: தி ரூல்

    இயக்குனர்: Sukumar Bandreddi
    எடிட்டர்:நவின் நூலி
    இசை:தேவி ஸ்ரீ பிரசாத்
    வெளியீட்டு தேதி:2024-12-05
    Points:22097

    ட்ரெண்ட்

    வாரம்123
    தரவரிசை6713
    Point6858101815058
    கரு

    புஷ்பா படத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகியுள்ளது.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    செம்மரக்கடத்தலில் மாஃபியாவாக மாறிய அல்லு அர்ஜூன் ஜப்பான் வரை தனது வியாபாரத்தை செய்கிறார். சிண்டிகேட் கடத்தல் கூட்டத்திற்கு தலைவனாக உருமாறியுள்ளார். அல்லு அர்ஜுனுக்கு ஒரு மந்திரி இந்த கடத்தல் தொழிலுக்கு உதவியாக இருக்கிறார். ஒரு நாள் முதலமைச்சரை நேரில் சந்திக்கும் அல்லு அர்ஜூன் ஒரு புகைப்படம் எடுக்க ஆசைப்படுகிறார். ஆனால் முதலமைச்சர் அல்லு அர்ஜூனை அவமானப்படுத்திவிடுகிறார். இதில் ஆத்திரம் கொண்ட அல்லு அர்ஜூன் என்ன செய்கிறார்? தனக்கு ஆதரவாக இருக்கும் மந்திரியை முதலமைச்சர் ஆக்க விரும்புகிறார். இதற்காக 5000 கோடி ரூபாய்-க்கு செம்மர கடத்தலுக்கு வியாபாரம் பேசுகிறார். இதனை தடுக்க காவல் அதிகாரியான ஃபகத் ஃபாசில் ஒரு பக்கம் முயற்சி செய்து வருகிறார். இதற்கு அடுத்து என்ன ஆனது? இந்த வியாபாரத்தை வெற்றிகரமாக முடித்தாரா? இதனால் ஏற்ப்பட்ட பிரச்சனை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    அல்லு அர்ஜூன் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நடனம், ஆக்‌ஷன் என பக்கா கமெர்ஷியல் ஹீராவாக பல இடத்தில் மாஸ் காட்டியுள்ளார். ராஷ்மிகா மந்தனாவிற்கு இப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு பல சீன்களில் கிடைத்துள்ளது அதை அவர் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். ராஷ்மிகா மந்தன்னா மற்றும் அல்லு அர்ஜூன் இடையே நடக்கும் காதல் காட்சிகள் அபாரம்.

    ஃபகத் பாசில் வழக்கம் போல் அட்டகாசம் செய்துள்ளார். அவர் வரும் காட்சிகளில் திரையில் இருந்து கண் எடுக்காமல் பார்வையாளர்களை எங்கேஜ் செய்துள்ளார். திரைப்படத்தில் நடித்த மற்ற நடிகர்கள் கொடுத்த வேலையை உணர்ந்து சிறப்பாக செய்துள்ளனர்.

    இயக்கம்

    இயக்குனர் சுகுமார் இந்திய சினிமாவில் ஒரு பக்காவான கமெர்சியல் திரைப்படத்தை இயக்கியுள்ளார். ரசிகர்கள் மற்றும் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் காட்சிகள் அமைத்தது பாராட்டுக்குறியவை. பல மாஸ் சீன்கள் படத்தில் கைத்தட்டலை பெறுகிறது. குறிப்பாக மால்தீவ்ஸ் டீலிங் , ராஷ்மிகா கிட்சன் , முதலமைச்சரிடம் போட்டோ எடுப்பது என சொல்லிக் கொண்டே போகலாம். படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்வது படத்தின் பெரிய பலம். இரண்டாம் பாதியில் சில எமோஷனல் காட்சிகளை குறைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்.

    இசை

    தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை படத்திற்கு பெரிய பலம். பீலிங்ஸ் மற்றும் கிஸிக் பாடல் திரையரங்கை அதிர வைக்கிறது. சாம் சி எஸ் இன் பின்னணி இசை காட்சிகளை கூடுதல் விறுவிறுப்பை ஏற்றியுள்ளது.

    ஒளிப்பதிவு

    மைர்ஸ்லோ குபா ப்ரோசக் ஒளிப்பதிவு சிறப்பு. ஆக்‌ஷன் காட்சிகளில் திறமையான வேலையை செய்துள்ளார்.

    தயாரிப்பு

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    2024-12-05 16:18:40.0
    vignesh sara

    ×