என் மலர்
ரேசர்
- 0
- 1
- 0
வாரம் | 1 |
---|---|
தரவரிசை | 399 |
Point | 10 |
தனது கனவுகளை குடும்பத்திற்காக விட்டு கொடுத்து பிறகு அதில் வெற்றி பெற்றாரா என்பது குறித்த கதை.
சிறுவயதில் இருந்தே மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் ஆக வேண்டும் என்ற ஆசையில் வளர்ந்து வருகிறார் அகில் சந்தோஷ். இதற்காக பைக் வாங்க வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்கிறார். குடும்ப சூழலால் அவரின் ஆசை நிறைவேறாமல் போகிறது. வளர்ந்த பிறகு கார் கம்பெனியில் வேலை கிடைக்கிறது. அதனை பயன்படுத்தி கடன் பெற்று பைக் வாங்குகிறார்.
அவர் பைக் வாங்கியதை வீட்டில் சொல்லாமல் நண்பருடைய பைக் என்று சொல்லி வருகிறார். இதனிடையே அவருடைய தந்தை கடன் பிரச்சனையால், அகிலிடம் லோன் எடுத்து கொடுக்குபடி கூறுகிறார். வீட்டிற்கு தெரியாமல் லோன் எடுத்து பைக் வாங்கியதால் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார் அகில்.
மறுபுறம் தெருவில் நடக்கும் சாதாரண மோட்டார் பந்தய போட்டியில் பங்கேற்று பரிசு பெறுகிறார். அடுத்து பெரிய போட்டியில் பங்கேற்க தேர்வாகிறார். சில வீரர்கள் பொறாமையால் அகில் சந்தோசுக்கு பகையாளிகளாக மாறுகிறார்கள். இறுதியில் அகிலின் கனவு நிறைவேறியதா? போட்டியில் வெற்றி பெற்றாரா? இவரின் தந்தையை எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார் அகில் சந்தோஷ். லட்சிய கனவை மனதுக்குள்ளேயே புதைப்பது, அப்பாவின் பாசமான கண்டிப்புக்கு அடங்கி போவது, காதலில் உருகுவது, பைக் ரேசில் அவமானங்களை எதிர்கொள்வது. மருத்துவமனையில் தந்தையை பார்க்க அழுது துடித்து ஓடுவது என்று உணர்வுகளை எதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார்.
படத்தில் சிறிது நேரத்தில் மட்டுமே வந்தாலும் மனதில் பதிகிறார் லாவண்யா. அகிலின் தந்தையாக வரும் சுப்பிரமணியன் அழகாக நடித்துள்ளார். மகன் விருப்பங்களுக்கு எதிராக இருந்தாலும் பாசக்கார தந்தையாக கவனிக்க வைக்கிறார். மேலும் பார்வதி, சரத், நிர்மல், சதீஷ், ஆறுபாலா, அனீஸ், அரவிந்த் உள்ளிட்ட பலரும் அவர்களின் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.
தன் கனவுக்காக போராடும் இளைஞன் குறித்த கதையை தேர்ந்தெடுத்து அதை சரியாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் சாட்ஸ் ரெக்ஸ். லட்சியம், குடும்ப உறவுகள், காதல், மோதல் என பல உணர்வுகளை திரைக்கதையின் மூலம் அழகுப்படுத்தியுள்ளார். படத்தில் நிஜ பைக் ரேஸ் வீரர்களை நடிக்க வைத்து எதார்த்தம் சேர்த்துள்ளார். சில இடங்களில் தொய்வு ஏற்பட்டாலும் பெரிதாக பாதிக்கவில்லை.
பைக் ரேஸ்சிற்கு தேவையான விறுவிறுப்பை காட்சியின் மூலம் காட்டி பாராட்டுக்களை பெறுகிறார் ஒளிப்பதிவாளர் பிரபாகர். பரத் இசையில் பாடல்கள் மனதில் பதியவில்லை என்றாலும் பின்னணி இசை படத்தினுள் பயணிக்க வைக்கிறது.
மொத்ததில் ரேசர் - விறுவிறுப்பு