search icon
என் மலர்tooltip icon
    < Back
    Rangoli
    Rangoli

    ரங்கோலி

    இயக்குனர்: வாலி மோகன் தாஸ்
    எடிட்டர்:ஆர்.சத்தியநாராயணன்
    ஒளிப்பதிவாளர்:ஐ.மருத நாயகம்
    இசை:கே.எஸ். சுந்தரமூர்த்தி
    வெளியீட்டு தேதி:2023-09-01
    Points:180

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை278280
    Point9981
    கரு

    பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை சுற்றி அமைந்துள்ள கதை ரங்கோலி.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    நடுத்தர குடும்பத்தில் பிறந்த மாணவன் ஹமரேஷ் கார்பரேஷன் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை முருகதாஸ் சலவை தொழிலாளியாக இருக்கிறார்.

    நடிகர் உதயா மற்றும் இயக்குனர் விஜய் அவர்களின் சகோதரியின் மகனான ஹமரேஷ் பள்ளியில் நடக்கும் பிரச்சினைகளில் அதிகம் தலையிடுவதால் பள்ளியை மாற்றினாள் மகன் குணம் மாறிவிடும் என்று எண்ணி தந்தை முருகதாஸ் அவரை அதிகம் செலவு செய்து சி.பி.எஸ்.சி. பள்ளியில் சேர்க்கிறார். கார்பரேஷன் பள்ளியில் நன்றாக படித்த மாணவனுக்கு சி.பி.எஸ்.சி பாடம் கடினமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அங்குள்ள மாணவர்கள் ஹமரேஷை லோக்கல் இடத்தில் இருந்து வந்தவன் என்று கேலி செய்து அவனிடம் பழக மறுக்கின்றனர்.

    இது ஒருபக்கம் சென்று கொண்டிருக்க மாணவன் ஹமரேஷ் நாயகி பிரார்த்தனாவை காதலிக்கிறார். இதனை தெரிந்து கொண்ட மாணவர்கள் ஹமரேஷ் மீது இருக்கும் கோபத்தால் பள்ளி பாத்ரூமில் இவர்கள் இருவரும் காதலிப்பதாக எழுதி வைத்துவிடுகின்றனர்.

    இது பெரும் பிரச்சினையாக வெடிக்கிறது. இதனால் பள்ளியில் இருந்து மாணவன் ஹமரேஷை நீக்கும் அளவிற்கு நிர்வாகம் சென்றுவிடுகிறது. இறுதியில் ஹமரேஷ் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டாரா? இந்த பிரச்சினையால் பெற்றோர்கள் என்ன கஷ்டத்தை அனுபவித்தனர் என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    குடும்பத்தின் வற்புறுத்தலால் ஒரு பள்ளியில் இருந்து வேறொரு பள்ளிக்கு செல்லும் மாணவன் என்ன கஷ்டப்படுவான் என்பதை தன் நடிப்பின் மூலம் மிகவும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார் கதாநாயகன் ஹமரேஷ். காதல், எமோஷன் என நடிப்பில் அசத்தியுள்ளார்.

    அப்பாவாக வரும் முருகதாஸ் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்துள்ளார். அம்மாவாக வருபவர் இளம் வயதில் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். மிகவும் சுலபமாக சென்னை பெண்ணாகவே நடித்து பாராட்டை பெற்றுள்ளார். தன் மகனுக்காக கஷ்டப்படும் இடங்களில் கவர்ந்துள்ளார். நாயகியாக வரும் பிரார்த்தனா அளவான நடிப்பை கொடுத்து ரசிக்க வைத்துள்ளார்.

    இயக்குனர்

    கல்வி செலவிற்காக நடுத்தர குடும்பங்கள் படும் கஷ்டங்களை விளக்க முயற்சித்துள்ளார் இயக்குனர் வாலி மோகன்தாஸ். கதாபாத்திரங்களிடையே தேவையான அளவிற்கு வேலை வாங்கியுள்ளார். படம் முழுவது வீடு, பள்ளி என்று காட்சிப்படுத்தியிருப்பது சற்று சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இசை

    கே.எஸ். சுந்தர மூர்த்தி இசையில் பாடல்கள் சுமார் ரகம்.

    ஒளிப்பதிவு

    படத்திற்கு தேவையான ஒளிப்பதிவை கொடுத்துள்ளார் மருதநாயகம்.

    படத்தொகுப்பு

    சத்யநாராயணன் படத்தொகுப்பு அருமை.

    புரொடக்‌ஷன்

    கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ’ரங்கோலி’ வண்ணம் சற்று குறைவாக உள்ளது.


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×