என் மலர்
ரெட் சாண்டல் வுட்
- 0
- 0
- 0
வாரம் | 1 | 2 |
---|---|---|
தரவரிசை | 258 | 249 |
Point | 122 | 124 |
செம்மர கடத்தலில் மாட்டிக் கொண்டவர்கள் குறித்த கதை.
கதைக்களம்
நாயகன் வெற்றி சென்னையில் வசித்து வருகிறார். இவரது நண்பர் விஸ்வநாத் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறார். எவ்வளவு முயற்சி செய்தும் வேலை கிடைக்காததால் அவரது தந்தை உறவினர் வீட்டிற்கு விஸ்வநாத்தை அனுப்பி வைக்கிறார். ஒரு நாள் விஸ்வநாத் காணாமல் போகவே அவரது உறவினர் விஸ்வநாத்தின் தந்தைக்கு போன் செய்து அவர் செம்மர கடத்தலுக்கு சென்று விட்டதாக கூறுகிறார்.
இது ஒருபுறம் போய்கொண்டிருக்க. விஸ்வநாத்தின் அப்பாவிற்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இதனால் சந்தேகம் ஏற்பட்ட வெற்றி இதனை துருப்பு சீட்டாக வைத்து கொண்டு நண்பனை தேடிச் செல்கிறார். அங்கு பார்த்தால் இதுபோன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் இந்த செம்மர கடத்தலில் மாட்டிக் கொண்டிருப்பது தெரிய வருகிறது.
இறுதியில் வெற்றி தன் நண்பனை மீட்டாரா? தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எப்படி செம்மர கடத்தலில் மாட்டிக் கொண்டார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிக்கும் வெற்றி இப்படத்திலும் தேவையான நடிப்பை கொடுத்து கவர்ந்துள்ளார். நண்பனை தேடி செல்வது, செம்மர கடத்தலில் மாட்டிக் கொண்டவர்களை மீட்டெடுப்பது என கதாபாத்திரத்தின் விறுவிறுப்பை கூட்டியுள்ளார்.
நண்பனாக வரும் விஸ்வநாத், நாயகன் வெற்றிக்கு பக்க பலமாக இருக்கிறார். கதாநாயகியான தியா மையூரி குறைந்த நேரமே திரையில் தோன்றினாலும் அழகான நடிப்பால் கவர்கிறார். வில்லனாக வரும் ‘கே.ஜி.எப்’ ராம் மிரள வைத்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இயக்குனர்
2015-ல் செம்மரம் வெட்ட போனதாகச் சொல்லி திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் குரு ராமானுஜம். தேவையான காட்சிகளை மட்டும் கொடுத்து படத்தை சிம்பிளாக ரசிக்கும் படியாக அமைத்துள்ளார். என்னதான் ரசிக்கும் படியாக இருந்தாலும் அடுத்து என்ன நடக்க போகிறது என்ற விறுவிறுப்பு இல்லாமல் இருப்பது சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இசை
சாம் சி.எஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.
ஒளிப்பதிவு
சுரேஷ் பாலா ஒளிப்பதிவில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.
படத்தொகுப்பு
ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு ஓகே.
புரொடக்ஷன்
ஜே.என்.சினிமாஸ் ‘ரெட் சாண்டல் வுட்’ படத்தை தயாரித்துள்ளது.