என் மலர்
சீசா
- 0
- 0
- 1
வாரம் | 1 | 2 |
---|---|---|
தரவரிசை | 329 | 272 |
Point | 52 | 98 |
கொலைக்கு பின்னால் இருக்கும் மர்மத்தை தேடும் போலீஸ் அதிகாரியின் கதை.
கதைக்களம்
நாயகன் நிஷாந்த் ரூசோ, நாயகி பாடினி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். நிஷாந்த் ரூசோவும் மருத்துவமனையில் வேலை செய்யும் மூர்த்தியும் நெருங்கிய நண்பர்கள். ஒருநாள் நிஷாந்த் ரூசோவின் வேலைக்காரர் கொலை செய்யப்படுகிறார். மேலும் நிஷாந்த் ரூசோ, மனைவி பாடினியும் காணாமல் போகிறார்கள்.
கொலைக்கான பின்னணியை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி நட்ராஜ், மாயமான தம்பதியை தேடுகிறார். ஒருநாள் காணாமல் போன நிஷாந்த் ரூசோ மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் திரும்பி வருகிறார்.
இறுதியில் நிஷாந்த் ரூசோவின் மனைவி பாடினி என்ன ஆனாள்? வேலைக்காரரை கொலை செய்தது யார்? நிஷாந்த் ரூசோ மனநிலை பாதிக்கப்பட காரணம் என்ன? இதையெல்லாம் போலீஸ் அதிகாரி நட்டி நட்ராஜ் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் நிஷாந்த் ரூசோ காதல், மனநிலை பாதிக்கப்பட்டவர் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் நடிக்கும் காட்சியில் பரிதாபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் பாடினி, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக கவர்ச்சியில் கவர முயற்சி செய்து இருக்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் நட்டி நட்ராஜ், முழு கதையும் தன் தோளில் தாங்கி நிற்கிறார். கொலையாளியை தேடுவது, பாடினியை தேடுவது, சம்பந்தப்பட்டவர்களை விசாரிப்பது என தன் நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். நிஷாந்த் ரூசோவின் நண்பராக வரும் மூர்த்தி படம் முழுவதும் பயணித்து நடிப்பில் கவனிக்க வைத்து இருக்கிறார். நண்பனை நினைத்து வருந்துவது, அவருக்கு உதவுவது என தன் கதாபாத்திரத்திற்கு நேர்மையாக உழைத்து இருக்கிறார்.
இயக்கம்
கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் குணா சுப்பிரமணியம். ஒரு கொலையில் இருந்து தொடங்கும் கதை, மனநலம் பாதிப்பு, எம்பாமிங், ஆன்லைன் சூதாட்டம், காதல் என திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். மனநலம் பாதிக்கப்பட்டவர்களை விட, சூதாட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆபத்தானவர்கள் என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர். கொலையை யார் செய்திருப்பார் என்று கடைசி வரை சஸ்பென்ஸ் வைத்திருப்பது படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. ஒரு சில லாஜிக் மீறல்களை தவிர்த்து இருக்கலாம்.
இசை
சரண்குமார் இசையில் காதல் பாடலும், ஆன்மீக பாடலும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ஒளிப்பதிவு
பெருமாள் மற்றும் மணிவண்ணனின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
தயாரிப்பு
விடியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.