என் மலர்
சாகுந்தலம்
- 1
- 5
- 1
வாரம் | 1 | 2 | 3 |
---|---|---|---|
தரவரிசை | 230 | 244 | 191 |
Point | 162 | 136 | 5 |
தன்னை மறந்த காதலனை காதலி கரம் பிடித்தாரா என்பதே படத்தின் கதை
சகுந்தலா (சமந்தா), விஸ்வாமித்திர முனிவருக்கும் மேனகாவுக்கும் பிறந்த குழந்தை, கண்வ மகரிஷியின் சொந்த மகளாக ஒரு மடத்தில் வளர்கிறாள். பிறகு ஒரு நாள் அரசன் துஷ்யந்தன் (தேவ் மோகன்) ஊருக்குள் நுழைந்த விலங்குகளைத் துரத்திக்கொண்டு ஆசிரமத்திற்குள் நுழைகிறார்.
அப்போது சமந்தாவின் அழகில் மயங்கும் தேவ் மோகன் அவர் மீது காதல் கொள்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கிறார்கள். பிறகு ஒருநாள் அரண்மனைக்கு செல்ல வேண்டும், விரைவில் வந்து உங்களையும் அழைத்துச் செல்வதாக சமந்தாவிடம் வாக்குறுதி அளித்து விட்டு செல்கிறார் தேவமோகன்.
இதற்கிடையே சமந்தா கருவுறுகிறாள். இதனால் தேவ் மோகனை தேடி அரண்மனைக்கு சென்ற சமந்தாவை நீ யார் என்றே எனக்கு தெரியாது என்று கூறி தேவ் மோகன் அவமானப்படுத்திகிறான். இறுதியில் சமந்தா தன் காதலனை கரம் பிடித்தாரா..? தேவ் மோகன், சமந்தாவை தெரியாது என்று கூறுவதன் காரணம் என்ன..? என்பதே படத்தின் மீதிக்கதை.
மிகவும் சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் சமந்தா. சாகுந்தலையாக அவரது வசனங்களும் நடிப்பும் ரசிகர்களை கவரும் வண்ணம் உள்ளது. தன்னுடைய கதாபாத்திரத்திற்கு தேவையான முழு நடிப்பையும் கொடுத்து அசத்தியிருக்கிறார்.
கதாநாயகனான தேவ் மோகன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பரது வேடத்தில் நடித்திருக்கும் அல்லு அர்ஹா அனைவரையும் கவர்கிறார்.
தற்போதுள்ள தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புராணக் கதையைப் படமாக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் குணசேகர். படம் சுவாரஸ்யமாக இருந்தாலும், படத்தின் இயக்கம் பார்ப்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. பல முக்கிய கதாபாத்திரங்கள் மனதில் பதியவில்லை என்பது ஏமாற்றம். திரைக்கதையை இன்னும் பலப்படுத்தியிருக்கலாம் என்றும் நினைக்கலாம். கிளைமாக்ஸ் காட்சிகள் செயற்கையாக இருப்பது வருத்தம் அளிக்கிறது.
மணி ஷர்மாவின் இசையும், பின்னணி இசையும் பெரிதாக ஈர்க்கவில்லை. சேகர் வி ஜோசப்பின் ஒளிப்பதிவு பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து.
மொத்தத்தில் சாகுந்தலம் - குறைந்த ஈர்ப்பு