என் மலர்
ஷாட் பூட் திரி
- 0
- 0
- 0
வாரம் | 1 | 2 | 3 |
---|---|---|---|
தரவரிசை | 280 | 236 | 136 |
Point | 97 | 147 | 48 |
நாய்க்கும் சிறுவனுக்கும் இடையேயான பாசத்தை விளக்கும் கதை.
ஷாட் பூட் திரி
கதைக்களம்
சினேகா, வெங்கட்பிரபு தம்பதியருக்கு ஒரே மகன் கைலாஷ். சிறுவன் கைலாஷுக்கு தம்பி, தங்கை இல்லாதது வருத்தம். தன்னுடன் எப்போதும் இருக்க நாய் ஒன்று வேண்டும் என்று பெற்றோரிடம் கேட்கிறார் கைலாஷ். இதற்கு சினேகா மறுக்கிறார். இருப்பினும், நண்பர்கள் பூவையார், பிரணிதி, வேதாந்த் ஆகியோர் கைலாஷுக்கு நாயை பரிசாக அளிக்கிறார்கள்.
நாயை வெறுக்கும் சினேகா ஒரு கட்டத்தில் வளர்க்க சம்மதம் தெரிவிக்கிறார். ஒரு நாள் அந்த நாய் திடீரென காணாமல் போகிறது. நாயை தேடி நண்பர்கள் 4 பேரும் பெற்றோருக்கு தெரியாமல் செல்கின்றனர்.
இறுதியில் சிறுவர்கள் நான்கு பேரும் நாயை கண்டு பிடித்தார்களா? இல்லையா? நாய் எங்கு சென்றது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
திருமணத்திற்கு பின் ஒரு ‘கறார்’ அம்மாவாக சினேகா நடிப்பில் வித்தியாசம் காட்டியுள்ளார். சினேகாவின் கணவராக வரும் வெங்கட் பிரபு, பொறுப்பான தந்தையாக மனதில் பதிகிறார். ஆட்டோ டிரைவராக யோகிபாபு வரும் காட்சிகள் கலகலப்பூட்டுகின்றன. வில்லனாக வரும் சாய் தீனா ஒரு சில இடங்களில் ரசிக்க வைத்திருக்கிறார்.
நாயைத்தேடி பரிதாபத்துடன் ஏங்கி வீதி வீதியாக செல்லும் 4 குழந்தைகளின் யதார்த்த நடிப்பு பாராட்ட வைக்கிறது. காணாமல் போன நாயை நினைத்து 4 குழந்தைகளும் உருகி அழும் காட்சிகள் கை தட்ட வைக்கிறது. குடியிருப்பில் இருந்து தவறுதலாக வெளியே வந்து அங்குமிங்கும் நாய் ஓடி செல்லும் காட்சிகள் பரிதாபத்தை வரவழைக்கிறது.
இயக்கம்
காணாமல் போன நாயை தேடும் சிறுவர்கள் என்ற கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அருணாசலம் வைத்யநாதன். முற்றிலும் குழந்தைகளுக்காக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். படத்தின் முதல் பாதியில் கதையின் வேகம் மெதுவாக நகர்கிறது. வழக்கமான கதை என்றாலும் கொஞ்சம் ரசிக்கும் படி இயக்கி இருக்கிறார்.
இசை
ராஜேஷ் வைத்யாவின் இசை ரசிக்க வைக்கிறது.
ஒளிப்பதிவு
சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
படத்தொகுப்பு
பரத் விக்ரமன் படத்தொகுப்பு கதையுடன் பயணிக்க வைத்துள்ளது.
புரொடக்ஷன்
யூனிவர்ஸ் கிரியேஷன்ஸ் ‘ஷாட் பூட் திரி' திரைப்படத்தை தயாரித்துள்ளது.