என் மலர்
தமிழ்க்குடிமகன்
- 0
- 0
- 0
வாரம் | 1 | 2 | 3 |
---|---|---|---|
தரவரிசை | 214 | 230 | 184 |
Point | 194 | 160 | 8 |
குலத் தொழிலை விட நினைப்பவர்க்கு ஏற்படும் பிரச்சினை குறித்த கதை.
கதைக்களம்
ஆதிக்கச்சாதியினர் நிரம்பியிருக்கும் கிராமத்தில் இறந்தவர்களுக்கு இறுதிக் காரியம் செய்யும் ஒரே குடும்பமாக சேரனின் குடும்பம் இருக்கிறது. மனைவி, மகன், அம்மா, தங்கை என வாழும் சேரனுக்கு தனது குலத்தொழிலைச் செய்ய துளியும் விருப்பமில்லை. இவர் அரசு வேலையில் சேர வேண்டும் என்று முயற்சி செய்கிறார். ஆனால், ஆதிக்கச்சாதியினர் அவரை தேர்வு எழுத விடாமல் தடுக்கின்றனர்.
இந்த நிலையில் ஊர்த்தலைவர் லாலின் மகனுக்கும், சேரனின் தங்கைக்கும் காதல் வருகிறது. அந்தக் காதலில் சில பிரச்சினைகள் எழுகிறது. மேலும் லாலின் அப்பா இறந்து போகிறார். அவருக்கு இறுதிக் காரியங்கள் செய்ய சேரன் அழைக்கப்படுகிறார். ஆனால், சேரன் இனி நான் அந்தத் தொழிலைச் செய்வதில்லை எனச் சொல்லுகிறார். இதனால் பிரச்சனை ஏற்படுகிறது.
இறுதியில் சேரன் குலத் தொழிலை மீண்டும் தொடங்கினாரா? சேரனுக்கு ஏற்பட்ட பிரச்சினை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதையின் நாயகனாக நடித்திருக்கும் சேரன், தனக்கே உரிய பாணியில் யதார்த்தமாக நடித்து இருக்கிறார். தன் இன மக்கள் ஒடுக்கப்படுவதையும், முன்னேறவிடாமல் தடுக்க படுவதையும் உணர்வு பூர்வமாக நடிப்பால் கடத்த முயற்சி செய்து இருக்கிறார். நாயகி பிரியா ஜோவிற்கு பெரியதாக வேலை இல்லை.
வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் லால். அருள்தாஸின் நடிப்பும் படத்திற்கு வலிமை சேர்த்துள்ளது. எஸ்.பி.யாக வரும் சுரேஷ் காமாட்சி நடிப்பில் கவர்ந்து இருக்கிறார். படத்தின் முக்கியமான திருப்புமுனை காட்சியில் வருகிறார். வக்கீலாக வரும் எஸ்.ஏ.சந்திரசேகர் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
இயக்குனர்
தன் குல தொழிலை மாற்ற நினைக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரின் வாழ்க்கையை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன். சிறந்த கதையை எடுத்த இயக்குனர், திரைக்கதையில் தெளிவில்லாமல் இயக்கி இருக்கிறார். பெரிய நடிகர்களை வைத்து சரியாக கையாள தவறி இருக்கிறார். காட்சிகளின் தொடர்ச்சி இல்லாமல் திரைக்கதை இருப்பது படத்திற்கு பலவீனம்.
இசை
பின்னணி இசை மற்றும் பாடல்கள் மூலமாக படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்.
ஒளிப்பதிவு
ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
படத்தொகுப்பு
கார்த்திக் ராம் படத்தொகுப்பு பரவாயில்லை.
புரொடக்ஷன்
லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ’தமிழ்க்குடிமகன்’ ஓரளவு வசூல் பெற்றுள்ளது.
சவுண்ட் எபெக்ட்
சேது சவுண்ட் மிக்ஸிங் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.