என் மலர்


தண்டேல்
- 0
- 0
- 1
வாரம் | 1 | 2 |
---|---|---|
தரவரிசை | 108 | 129 |
Point | 773 | 771 |
மீனவரான நாக சைதன்யா பாகிஸ்தான் அராசாங்கத்திடம் மாட்டிக்கொண்ட கதை.
கதைக்களம்
மீன் பிடி தொழில் செய்து வருகிறார் நாயகன் நாக சைதன்யா. சாய் பல்லவியும் நாக சைதன்யாவும் காதலித்து வருகின்றனர். மீனவ குழுக்கு தண்டேலாக {தலைவனாக} இருக்கும் நாக சைதன்யா, தன்னுடைய மீனவ குழுவுடன் குஜராத்திற்கு சென்று காண்டிராக்ட் அடிப்படையில் 9 மாதம் மீன் பிடி தொழிலை செய்து வருகின்றார்.
ஆனால், வெறும் 3 மாத காலம் மட்டுமே மீன் பிடி செய்து சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். இந்த சூழ்நிலையில் ஊரில் ஒருவர் கடலுக்கு சென்ற போது எதிர்ப்பாராத விதமாக இறந்து விடுகிறார். இதனால் நாக சைதன்யாவையும் கடலுக்கு போக வேண்டாம் என கூறுகிறார் சாய் பல்லவி. ஆனால் சாய் பல்லவியின் சொல்லை கேட்காமல் நாக சைதன்யா கடலுக்கு செல்கிறார். அங்கு ஒரு பெரும் புயலில் மாட்டிக்கொண்ட அவர் தெரியாமல் பாகிஸ்தான் கடல் பகுதிற்குள் சென்று விடுகிறார். இதனால் பாகிஸ்தான் கடற்படை இவர்களை சிறைப்பிடிக்கிறது.
இறுதியில் பாகிஸ்தான் அரசாங்கத்திடமிருந்து நாக சைதன்யா தப்பித்து இந்தியா வந்தாரா? சாய் பல்லவியை கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
மீனவராக நடித்து இருக்கும் நாக சைதன்யா மீனவர் கதாப்பாத்திரமாகவே உருமாறியுள்ளார். அவரின் உடல் மொழி மற்றும் பேச்சு மொழி என தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ரொமான்சிலும், தேச பற்றுக்காக போராடும் காட்சிகளில் பார்வையாளர்களின் மனதில் பதிந்து விடுகிறார்.
சாய் பல்லவி மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காதலனுக்காக ஏங்குவது, காதலனை பிரிந்து இருக்கும் காட்சிகளில் ஸ்கோர் செய்துள்ளார். மற்ற நடிகர்களான ஆடுகளம் நரேன் , பப்லூ, கருணாகரன் மற்றும் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.
இயக்கம்
காதலையும் தேச பற்றியும் மையமாக வைத்து கதையை இயக்கியுள்ளார் இயக்குனர் சந்தூ மொண்டேடி. பல இடங்களில் நமக்கு ரோஜா திரைப்படத்தை நியாபகம் படுத்துகிறது. படத்தின் முதல் பாதி இவர்களின் காதல் காட்சியாகவே நகர்வதால் பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. இரண்டாம் பாதியின் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். அதுபோல், சில லாஜிக் மீறல்களை தவிர்த்து இருக்கலாம்.
இசை
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் அமைந்த பாடல்கள் கேட்கும் ரகம். படத்தின் பின்னணி இசை ரசிக்கும்படி அமைந்துள்ளது.
ஒளிப்பதிவு
ஷம்தத்- இன் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
தயாரிப்பு
கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.