என் மலர்
தி கார்ஃபீல்ட் மூவி
- 0
- 0
- 1
வாரம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
---|---|---|---|---|---|---|
தரவரிசை | 202 | 206 | 124 | 83 | 84 | 59 |
Point | 229 | 228 | 68 | 42 | 6 | 6 |
சோம்பேறி பூனை எப்படி அதற்கு ஏற்பட்ட ஆபத்தில் இருந்து மீண்டது பற்றிய கதை
கதைக்களம்
கதாநாயகனான கார்ஃபீல்ட் பூனை சிறுவயது இருக்கும் பொழுது அவரது அப்பா அவனை ஒரு இடத்தில் விட்டுவிட்டு மீண்டும் நான் வந்து கூட்டி செல்கிறேன் என்று கூறிவிட்டு செல்கிறார் ஆனால் அவர் திரும்பி வரவே இல்லை, அதனால் கார்ஃபீல்ட் பசியால் பக்கத்தில் இருக்கும் பீட்சா கடைக்கு செல்கிறது அங்கு அப்பொழுது சாப்பிட வந்த ஒருவன் கார்ஃபீல்டை எடுத்துக் கொண்டு அவனது வீட்டில் வளர்க்கிறான். அதன் பிறகு கார்ஃபில்டுக்கு துணையாக மற்றொரு நாய் குட்டியையும் வளர்க்கிறான், இருவரும் மிக நண்பர்களாக வீட்டை சுற்றிக் கொண்டு லூட்டி அடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ராஜ வாழ்க்கை என்றால் அது கார்ல்ஃபீல்டின் வாழ்க்கைதான். நினைத்ததை சாப்பிட்டுவிட்டு உறங்கிக் கொண்டு , ஜாலியாகவும் அதே சமயம் மிக சோம்பேறி பூனையாக இருக்கிறது. இப்படி சுற்றிக் கொண்டு இருக்கும் நிலையில் ஒருநாள் மற்றொரு ரவுடி பூனை கேங் படை கார்ஃபீல்டையும் அந்த நாய்யையும் கடத்திக் கொண்டு செல்கின்றன. அப்பொழுது சிறுவயதில் இவனை விட்டுச் சென்ற கார்ஃபீல்டின் அப்பா மகனை காப்பாற்ற வருகிறார். காப்பாற்ற வந்த இடத்தில் அவரும் மாட்டிக்கொள்கிறார். அந்த கேங்கஸ்டர் பூனைப் படை தலைவி அவர்களை ஊரில் உள்ள பெரிய பால் கிடங்கில் பெரிய அளவு பாலை திருடிக் கொண்டு வந்தால் தான் விடுவிப்பேன் என கண்டிஷன் போடுகிறது. மகனும் அப்பாவும் இந்த மிஷனை வெற்றிகரமாக முடித்தார்களா இல்லையா? ஏன் அந்த பூனைப் படை கார்ஃபீல்டை கடத்தியது? அப்பா பூனை ஏன் கார்ஃபீல்டை இத்தனை வருடம் காண வரவில்லை? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கார்ஃபீல்ட் பூனைக்குட்டிக்கு கிறிஸ் ப்ராட் குரல் கொடுத்து இருக்கிறார். வழக்கம் போல் அவருக்கே உரிய தனி நகைச்சுவை பேச்சினால் இப்படத்திலும் அவரது பணியை சிறப்பாக செய்துள்ளார். மற்ற கதாப்பாத்திரத்திற்கு பின்னணி குரல் கொடுத்தவர்கள் அவர்களின் வேலை சிறப்பாக மேற்கொண்டுள்ளனர்.
இயக்கம்
மார்க் டிண்டலின் வழக்கம் போல் நகைச்சுவை நிறைந்த ஒரு கதைக்களத்தை தேர்தெடுத்துள்ளார். பழைய பாகத்தை ஒப்பிடும் பொழுது இந்த பாகம் சற்று தொய்வாகதான் உள்ளது. கார்ஃபீல்ட், மற்றும் அவரது தந்தை , கேங்க்ஸ்டர் கதாப்பாத்திரத்தை நகைச்சுவையாகவும் திறம்பட வடிவமைத்துள்ளார். படத்தின் அனிமேஷன் பணிகள் மிகவும் தத்ரூபமாக செய்துள்ளனர்.
தயாரிப்பு
சோனி பிக்சர்ஸ் 'தி கார்ஃபீல்ட் மூவி' திரைப்படத்தை தயாரித்துள்ளது.