என் மலர்
தி மார்வெல்ஸ்
- 0
- 0
- 0
வாரம் | 1 | 2 | 3 |
---|---|---|---|
தரவரிசை | 193 | 152 | 115 |
Point | 257 | 490 | 84 |
அழிக்க நினைக்கும் பெண்ணை தடுக்க நினைக்கும் பெண்கள் குறித்த கதை.
கதைக்களம்
ஹாலா என்ற கிரகம் அழியும் தருவாயில் உள்ளது. இதற்கு காரணமானவர்களை பழிவாங்க துடிக்கும் டெர்-பானுக்கு குவான்டம் பேண்ட் கிடைக்கிறது. அதன் இன்னொரு ஜோடி, பூமியில் இருக்கிறது. இந்த பேண்டில் இருந்து வெளிப்படும் சக்தியால், கேப்டன் மார்வெல், மோனிகா மற்றும் மிஸ் மார்வெல் ஆகியோர் ஒருவர் இடத்துக்கு மற்றொருவர் இடமாறுகின்றனர்.
இந்த மூன்று சூப்பர் ஹீரோக்களும் இணைந்து டெர்-பானை தடுத்தார்களா? அவர்களது பிரச்சனை தீர்ந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கமலா கான், கரோல் டென்வர்ஸ், மோனிகா ஆகியோரின் கூட்டணி ரசிக்க வைக்கிறது. இவர்கள் இடம் மாறும் காட்சிகள் சிறப்பு. படம் முழுக்க நம் கவனத்தை ஈர்த்து பாராட்டை பெறுகிறார் இமான் வெள்ளானி. டீன் ஏஜ் பெண்ணுக்கு உரிய அவரது குறும்பும், துறுதுறுப்பும் ரசிக்க வைக்கிறது. கேப்டன் மார்வெலை நேரில் காணும்போது அவர் கொடுக்கும் வியப்பான ரியாக்ஷன்கள் சிறப்பு.
கேப்டன் மார்வலாக வரும் ப்ரீ லார்சன், மோனிகாவாக வரும் டியோனா பாரிஸ், சாமுவேல் ஜாக்சன், ஸாவே ஆஷ்டன், ஸெனோபியா ஷ்ரோஃப், மோகன் கபூர் ஆகியோர் நேர்த்தியான நடிப்பை கொடுத்துள்ளனர்.
இயக்கம்
இயக்குனர் நியா டகோஸ்டா, மார்வெல் படங்களுக்கே உரிய வழக்கமான கலர்ஃபுல்லான கதையை இயக்கியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் படத்திற்கு மேலும் விறுவிறுப்பை கூட்டியுள்ளது. கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பு. ஆக்ஷன் காட்சிகளில் செலுத்திய கவனத்தை எமோஷனல் காட்சிகளிலும் செலுத்தியிருக்கலாம்.
இசை
லாரா கார்ப்மேனின் பின்னணி இசை படத்துக்கு உதவியுள்ளது.
ஒளிப்பதிவு
ஷீன் பாபிட் ஒளிப்பதிவு சிறப்பு
படத்தொகுப்பு
கேட்ரின் ஹெட்ஸ்ட்ரோம் மற்றும் இவான் ஷிஃப் படத்தொகுப்பு கவர்கிறது.
புரொடக்ஷன்
மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் ‘தி மார்வெல்ஸ்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.