என் மலர்
வெப்பம் குளிர் மழை
- 0
- 0
- 1
வாரம் | 1 | 2 |
---|---|---|
தரவரிசை | 293 | 263 |
Point | 83 | 107 |
பிள்ளைப் பேறு இல்லாத தம்பதிகளின் அவஸ்தையைப் பற்றி கூறும் கதை
கதைக்களம்
நாயகன் திரவ் {பெத்த பெருமாள்} சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் கிராமத்தை சேர்ந்தவர். இவர் மனைவி இஸ்மத் பானு {பாண்டி}. இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் வீட்டில் உள்ளவர்களும், ஊர்காரர்களும் அந்த தம்பதியை விமர்சிக்கிறார்கள். இஸ்மத் பானுக்கு குறை என்று முத்திரை குத்துகின்றனர். பின் கதாநாயகனை வேறு திருமணம் செய்துக்கொள்ளுமாரு வற்புறுத்துகின்றனர்.
கதாநாயகனை ஆம்பளை இல்லை என கேலி செய்கின்றனர். வேறு கல்யாணம் செய்வதற்கு வற்புருத்துகின்றனர். கதாநாயகி கதாநாயகனை மருத்துவமனைக்கு அழைத்து யாரிடம் பிரச்சனை இருக்கிறது என தெரிந்துக் கொள்ள அழைத்து செல்ல நினைக்கிறாள். அதற்கடுத்து என்ன நடந்தது? யாரிடம் பிரச்சனை இருந்தது? குழந்தை பெற்றார்களா? ஊர் இவர்களை என்ன செய்தது? என்பதே மீதி கதை.
இயக்கம்
படத்தின் இயக்குனரான பாஸ்கல் வேதமுத்து குழந்தையின்மை பிரச்சனையையும் அதன் தீர்வையும் உணர்த்தும் கதைக்களத்தை தேர்வு செய்து இருக்கிறார்.
படத்தின் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். படத்தின் முதல் பாதியில் கதை நகர்வே இல்லை. கதாநாயகன் ஊருக்கு செல்வதும் வருவது என்று கதையே இல்லாமல் சலிப்பு தட்டுகிறது.
நடிகர்கள்
கதாநாயகனாக நடித்திருக்கும் திரவ் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இஸ்மத் பானு திறம்பட நடித்துள்ளார். குழந்தையில்லாத தம்பதியின் வாழ்க்கையை மிக தத்ரூபமாக் பிரதிபளித்து இருக்கிறார்கள். எம்.எஸ் பாஸ்கர் அவருக்கே உரிய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஒளிப்பதிவு
சிவகங்கை மாவட்டத்தின் அழகை மிக அழகாக ப்ரித்வி ராஜேந்திரன் அவரின் ஒளிப்பதிவில் காட்டியுள்ளார்.
இசை
ஷங்கர் ரங்கராஜன் இசையில் பாடல்களை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
படத்தொகுப்பு
படத்தொகுப்பை திரவ் சிறப்பாக செய்துள்ளார்.
தயாரிப்பு
வெப்பம் குளிர் மழை படத்தை திரவ் தயாரித்துள்ளார்.