search icon
என் மலர்tooltip icon
    < Back
    Vimanam
    Vimanam

    விமானம்

    இயக்குனர்: சிவ பிரசாத் யானாலா
    எடிட்டர்:மார்த்தாண்டன் கே.வெங்கடேஷ்
    ஒளிப்பதிவாளர்:விவேக் கலேபு
    இசை:சரண் அர்ஜுன்
    வெளியீட்டு தேதி:2023-06-09
    ஓ.டி.டி தேதி:2023-06-30
    Points:109

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை286354
    Point9415
    கரு

    தனது குழந்தையின் ஆசைக்காக போராடும் ஏழை தந்தையின் கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் கால்களை இழந்த தகப்பனாக தனது மகன் துருவனை வளர்த்து வருகிறார் சமுத்திரகனி. துருவன் எப்படியாவது ஒரு பைலட்டாக்கி விட வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறான்.ஆனால் துருவனுக்கு புற்றுநோய் இருப்பது தெரியவருகிறது.துருவன் சில காலமே உயிருடன் இருப்பான் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    தனது மகன் இறப்பதற்கு முன்பு ஒருமுறையாவது விமானத்தில் பயணிக்க வைத்து அவனது ஆசையை நிறைவேற்றி விட வேண்டும் என்று சமுத்திரகனி நினைக்கிறார்.ஏழைக்குடும்பத்தில் வாழ்க்கையை நடத்தி வரும் சமுத்திரகனி தனது மகனின் ஆசையை நிறைவேற்ற போராடுகிறார். மகனுக்காக சிறுசிறு வேலைகளை செய்து கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்க்க முயற்சிக்கிறார். இதனிடையே சமூத்திரகனியின் வாழ்க்கையில் பல பிரச்சினை குறுக்கே வருகிறது.

    இறுதியில் தனது மகனின் ஆசையை சமுத்திரகனி நிறைவேற்றினாரா? குழந்தையின் கனவு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    கால்களை இழந்த ஏழை தந்தையாக சமுத்திரகனி அற்புதமாக நடித்துள்ளார். தனது குழந்தையின் ஆசையை நிறைவேற்ற போராடும் இடங்களில் கண்கலங்க வைத்துள்ளார்.

    குழந்தையாக நடித்திருக்கும் துருவன் நடிப்பில் கைத்தட்டல் பெறுகிறார். படத்தில் தோன்றும் மீரா ஜாஸ்மின், அனசுயா பரத்வாஜ், ராகுல் ராமகிருஷ்ணா, தன்ராஜ், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரின் நடிப்பு திரைக்கதைக்கு பெரிதும் உதவியுள்ளது.

    இயக்கம்

    மகனுக்கும் தந்தைக்கும் உள்ள உணர்வுகளை அழகாக பதிவு செய்ய முயற்சித்துள்ளார் இயக்குனர் சிவா பிரசாத் யென்னாலா. தந்தைபடும் கஷ்டங்களை புரிந்துக் கொண்டு அவருக்காக தனது ஆசையை கைவிட நினைக்கும் இடங்களை இயக்குனர் அழகாக வடிவமைத்துள்ளார். கதையில் விறுவிறுப்பு இல்லாததால் சற்று சோர்வு ஏற்படுகிறது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    இசை

    சரண் அர்ஜுனின் இசை ஓகே.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் விவேக் கலேபு அவருடைய பணியை சரியாக செய்துள்ளார்.

    படத்தொகுப்பு

    மார்த்தண்ட் கே வெங்கடேஷ் படத்தொகுப்பு அருமை.

    புரொடக்‌ஷன்

    ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் ’விமானம்’ படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×