என் மலர்
< Back
விருபாக்ஷா
இயக்குனர்: கார்த்திக் வர்மா தண்டு
எடிட்டர்:நவின் நூலி
ஒளிப்பதிவாளர்:ஷாம்தத் சைனுதீன்
இசை:பி.அஜனீஷ் லோக்நாத்
வெளியீட்டு தேதி:2023-04-21
ஓ.டி.டி தேதி:2023-05-21
நடிகர்கள்
- 0
- 0
- 0
Points:144
வாரம் | 1 | 2 |
---|---|---|
தரவரிசை | 323 | 272 |
Point | 47 | 97 |
கரு
ஒரு பிரச்சனையால் கிராமத்தில் போடும் கட்டுப்பாட்டிலிருந்து வெளியே வர முயற்சிக்கும் கதாநாயகன்.
விமர்சனம்
கதைக்களம்
திடீரென கிராமத்தில் மர்மமான முறையில் குழந்தைகள் இறக்கிறார்கள், இதற்கு காரணம் ஊருக்குள் புதிதாக குடியேறி மந்திர தந்திர ஆராய்ச்சிகள் செய்யும் கமல் காமராஜ்தான் என்று ஊர்மக்கள் கருதிகின்றனர். இதனால் அவரை மனைவியோடு சேர்த்து எரித்துக் கொல்கின்றனர்.
இறந்த தம்பதியரின் மகன் அனாதை ஆசிரமத்தில் சேர்க்கப்படுகிறான்.பல வருடங்கள் கடந்த பிறகு அந்த கிராமத்தில் நடக்கும் திருவிழாவுக்காக சாய்தரம் தேஜ் வருகிறார். அதன்பின்னர் ஊர் தலைவரின் மகள் சம்யுக்தா மீது சாய்தரமுக்கு காதல் மலர்கிறது. அப்போது ஒருவர் கோயில் கருவறைக்குள் ரத்தம் கக்கி இறந்து விடுகிறார்.
இதனால் கோயிலின் புனித தன்மையை காக்க எட்டு நாட்களுக்கு உள்ளூர் மக்கள் வெளியூர் செல்லவும், வெளியூர் மக்கள் உள்ளூர் வரவும் பூசாரி தடைபோடுகிறார்.அதன்பிறகு சிலர் மர்மமான முறையில் இறக்க, சம்யுக்தாவையும் ஊர் மக்களையும் ஆபத்து சூழ்கிறது.
இறுதியில் தொடர் மரணங்களுக்கு என்ன காரணம்? சம்யுக்தாவை சாய்தரம் தேஜ்ஜால் காப்பாற்ற முடிந்ததா? என்பது மீதிக்கதை.
நடிகர்கள்
ஆக்ஷன், சென்டிமென்ட், காதல் காட்சிகளில் இயல்பான யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுகிறார் சாய்தரம் தேஜ். சம்யுக்தா முதல் பாதியில் அப்பாவி பெண்ணாகவும், இரண்டாவது பாதியில் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுகிறார்.ஊர் தலைவராக வரும் ராஜீவ் கனக்கலா, மருத்துவராக வரும் பிரம்மாஜி, அகோரியாக வரும் அஜய், சுனில், பூசாரியாக வரும் சாய் சந்த், பைரவாவாக வரும் ரவிகிருஷ்ணா என படத்தில் தோன்றும் பல கதாப்பாத்திரங்கள் அவர்களின் பணியை சரியாக செய்துள்ளனர்.
இயக்கம்
ரசிகர்களை முழுக்க திகிலில் ஆழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் படத்தை இயக்கி ரசிகர்களை கவர்ந்துள்ளார் இயக்குனர் கார்த்திக் வர்மா. கிளைமாக்சில் உருகி உருகி பேசும் காதல் வசனங்கள் நெருடலாக இருந்தாலும் படத்தை பெரிதாக பாதிக்கவில்லை.
இசை
திகில் கலந்த கதைக்கு அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை சிறப்பு.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் சம்ஹத் சைனுதீனின் ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய உழைப்பு தெரிகிறது.
படத்தொகுப்பு
நவீன் நூலி படத்தொகுப்பு அருமை.
புரொடக்ஷன்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்தாரா மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து ‘விருபாக்ஷா' திரைப்படத்தை தயாரித்துள்ளது.
வீடியோக்கள்
உங்கள் மதிப்பீடு
இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
×
X