என் மலர்


எக்ஸ்ட்ரீம்
- 0
- 0
- 1
வாரம் | 1 | 2 |
---|---|---|
தரவரிசை | 396 | 347 |
Point | 28 | 35 |
இளம் பெண் கொலை, அதன் பின்னணியில் உள்ள காரணத்தை சொல்லும் படம்.
கதைக்களம்
புதியதாக கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்படுகிறது. போலீஸ் விசாரணையில் அது இளம் பெண் அபி நட்சத்திரா என்பதை கண்டுபிடிக்கிறார்கள். மேலும் விசாரணையில் அபி நட்சத்திரா கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டுபிடிக்கிறார்கள்.
இறுதியில் அபி நட்சத்திராவை கொலை செய்தது யார்? போலீஸ் அவர்களை பிடித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ராஜ்குமார் நாகராஜ், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவர் பார்ப்பதற்கு சீமான் போல் இருக்கிறார். கோபம், அழுகை, மகள் பாசம் என நடிப்பில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார். இருப்பினும் நடிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் சிறப்பாக இருந்திருக்கும்.
எஸ்.ஐ.யாக நடித்து இருக்கும் ரச்சிதா, போலீஸ் உடையில் கம்பீரம் காட்ட முயற்சி செய்து இருக்கிறார். புல்லட் பைக் ஓட்டி ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். கொலையாளியை பிடிக்க முயற்சிக்கும் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார்.
பாதிக்கப்பட்ட பெண்ணாக அபி நட்சத்திராவின் நடிப்பு பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. கொலையாளிகளிடம் இருந்து தப்பிக்க கதறி துடிக்கும் காட்சிகளில் நெகிழ வைத்து இருக்கிறார். ஏழை பெண்ணின் உணர்வை நடிப்பு மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
மாடர்ன் பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் அம்ரிதா ஹல்டர். அப்பாவி பெண்ணின் அவல நிலைக்கு தான் காரணமானதை எண்ணி வருத்தப்படும் காட்சியில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
இயக்கம்
மாடர்ன் என்ற பெயரில் நாகரிகம் இன்றி சில பெண்கள் அணியும் ஆடைகளால் ஆபத்தில் சென்று முடிவதை விழிப்புணர்வு படைப்பாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா. கொலை மற்றும் அதன் பின்னணி என கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார். திரைக்கதையில் சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம்.
இசை & ஒளிப்பதிவு
எம்.எஸ்.ராஜ் பிரதாப் பின்னணி இசை மற்றும் டி.ஜே. பாலாவின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறது.
தயாரிப்பு
சீகர் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.