என் மலர்
எகிப்து
- பிரதமர் மோடியை யோகா பயிற்சியாளர்களான ரீம் ஜபக், நாடா அடெல் ஆகியோர் சந்தித்து பேசினர்
- இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்
பிரதமர் மோடி அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு எகிப்து நாட்டுக்கு சென்றார். எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல்சிசி அழைப்பின் பேரில் அரசு முறை பயணத்தை மேற்கொண்டார். நேற்று தலைநகர் கெய்ரோவுக்கு சென்ற பிரதமர் மோடியை எகிப்து பிரதமர் முஸ்தபா மட்புலி வரவேற்றார்.
பிரதமர் மோடி எகிப்தின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசினார். மிகப்பெரிய எகிப்திய நிறுவனங்களில் ஒன்றான ஹசன் ஆலம் ஹோல்டிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹசன் ஆலம் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரதமர் மோடியை யோகா பயிற்சியாளர்களான ரீம் ஜபக், நாடா அடெல் ஆகியோர் சந்தித்து பேசினர். அதேபோல் முக்கிய நிறுவன அதிகாரிகளையும் மோடி சந்தித்தார்.
எகிப்தின் தலைமை முப்தி ஷவ்கி இப்ராஹிம் அப்தெல், கரீம் அல்லாமையும் மோடி சந்தித்து பேசினார்.
இதற்கிடையே எகிப்து பிரதமர் முஸ்தபா மட்புலி மற்றும் உயர்மட்ட கேபினட் அமைச்சகர்களுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வர்த்தக உறவுகளை ஆழப்படுத்துவது, இரு நாட்டு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினர்.
பின்னர் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். ரிட்ஸ் கார்ல்டன் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய தேசிய கொடியை அசைத்து மோடியை பார்த்து வந்தே மாதரம் கோஷங்களை எழுப்பினர்.
ஜெனா என்ற எகிப்தியப் பெண், சேலை அணிந்து வந்திருந்தார். அவர் ஷோலே இந்தி திரைப்படத்தின் பிரபல பாடலை மோடியிடம் பாடி காட்டினார்.
அப்போது அப்பெண்ணிடம் மோடி, நீங்கள் எகிப்தின் மகளா அல்லது இந்தியாவின் மகளா என்பதை யாராலும் சொல்ல முடியாது என்றார்.
பின்னர் இந்தியாவை சேர்ந்த தாவூதி போரா சமூகத்தினர் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது ஒருவர் மோடியிடம், நீங்கள் இந்தியாவின் ஹீரோ என்று பாராட்டினார்.
இதற்கு மோடி கூறும்போது, இந்தியா முழுவதும் அனைவரும் ஹீரோக்கள்தான். நாட்டு மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள். இதனால் தேசம் முன்னேறுகிறது. இது உங்கள் கடின உழைப்பின் பலன் என்றார்.
இந்த நிகழ்ச்சி தொடர்பாக மோடி டுவிட்டரில் கூறும்போது, எகிப்தில் உள்ள புலம் பெயர்ந்த இந்தியர்களின் அன்பான வரவேற்பால் மகிழ்ச்சி அடைந்தேன். அவர்களின் ஆதரவும், பாசமும் நம் தேசங்களின் காலத்தால் அழியாத பிணைப்பை உண்மையாகவே உணர்த்துகின்றன. எகிப்தியர்கள் இந்திய ஆடைகளை அணிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. உண்மையாகவே இது நமது பகிரப்பட்ட கலாச்சார இணைப்புகளின் கொண்டாட்டம் என்றார்.
பிரதமர் மோடி இன்று எகிப்து அதிபர் அப்தெல் பட்டாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
- பிரதமர் மோடி 5 நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா, எகிப்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
- எகிப்து நாட்டிற்கு முதல் முறையாக பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் சர்வதேச யோகா தினம் சிறப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அமெரிக்கா பாராளுமன்றத்திலும் சிறப்புரை ஆற்றினார்.
இதற்கிடையே, அமெரிக்காவில் தனது பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி 2 நாள் பயணமாக எகிப்து புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில், எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு சென்றடைந்தார் பிரதமர் மோடி. விமான நிலையத்தில் எகிப்து பிரதமர் முஸ்தபா மாட்போலி உற்சாகமாக வரவேற்றார்.
எகிப்து நாட்டிற்கு முதல் முறையாக பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- எகிப்து நாட்டின் அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசியை சந்தித்து பேச உள்ளார்.
- கெய்ரோவில் உள்ள போர் நினைவிட கல்லறையை பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக கடந்த செவ்வாய்கிழமை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பை ஏற்று அமெரிக்கா சென்ற மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு அவர் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி, இரு தரப்பு பேச்சுவார்த்தை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அமெரிக்க பாராளுமன்ற கூட்டமர்வில் உரையாற்றினார். வெள்ளை மாளிகையில் அதிபர் விருந்து அளித்து கவுரவித்தார்.
இந்நிலையில் அமெரிக்காவில் தனது பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர், 2 நாள் பயணமாக எகிப்து புறப்பட்டு சென்றார். பிரதமராக பதவி ஏற்ற பிறகு எகிப்து நாட்டிற்கு முதல் முறையாக பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் எகிப்து நாட்டின் அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசியை சந்தித்து பேச உள்ளார். இதுதவிர எகிப்து அரசின் மூத்த தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் இந்திய சமூகத்தினரையும் மோடி சந்திக்க உள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் எகிப்து அதிபரின் அரசுமுறைப் பயணத்தின் போது, இரு நாடுகளும் தங்கள் உறவை மேலும் வலுப்படுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்த சுற்றுப்பயணத்தின்போது கெய்ரோவில் உள்ள ஹெலியோபோலிஸ் காமன்வெல்த் போர் கல்லறைத் தோட்டத்தை பிரதமர் மோடி பார்வையிடுகிறார். இது முதல் உலகப் போரின்போது எகிப்து மற்றும் பாலஸ்தீனத்தில் போரிட்டு உயிரிழந்த 4,000 இந்திய ராணுவ வீரர்களின் நினைவிடமாக உள்ளது. உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்த உள்ளார்.
- சுற்றுலா சென்றிருந்த இளைஞரை அவரது தந்தை கண் முன்னே சுறா மீன் விழுங்கியது.
- விளாடிமிரைக் கொன்ற சுறா மீனை பிடித்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கெய்ரோ:
ரஷ்யாவை சேர்ந்தவர் விளாடிமிர் போபோவ் (23). இவர் தனது தந்தையுடன் எகிப்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
ஹர்கடா என்னும் பகுதியில் உள்ள கடற்கரைக்கு விளாடிமிர் சென்றிருந்தார். கடலில் நீந்திக் கொண்டிருந்த அவரை, கரையிலிருந்து தந்தை கவனித்துக் கொண்டிருந்திருந்தார்.
அப்போது திடீரென அங்கு வந்த ஒரு சுறா, விளாடிமிரை கடுமையாகத் தாக்கியது. இதைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் அலறி கூச்சலிட்டனர். சில நிமிடங்களில் தந்தையின் கண் முன்னேயே விளாடிமிரை முழுங்கியது சுறா.
இதுதொடர்பான் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விளாடிமிரைக் கொன்ற சுறா மீனை பிடித்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- விபத்து நடந்த இடத்திற்கு சுமாா் 26 ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- விபத்துக்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் விவரிக்கவில்லை.
தென்மேற்கு எகிப்தில் நியூ பள்ளத்தாக்கு மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் 45 பேரை ஏற்றிக் கொண்டு தலைநகர் கெய்ரோவுக்கு பயணிகள் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, மெதுவாக ஊர்ந்து சென்றுக் கொண்டிருந்த லாரி மீது இந்த பேருந்து பயங்கரமாக மோதியது. இதில் 17 பேர் உயிரிழந்தனர்.
மேலும் இந்த விபத்தில் இருபத்தி ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களை மீட்பதற்காக விபத்து நடந்த இடத்திற்கு சுமாா் 26 ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் விவரிக்கவில்லை.
இங்கு விபத்துகள் பெரும்பாலும் வேகம், மோசமான சாலைகள் அல்லது போக்குவரத்து சட்டங்களை சரியாக செயல்படுத்தாததால் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
- படுகாயமடைந்தவர்களை மீட்க சம்பவ இடத்திற்கு சுமார் 20 ஆம்புலன்ஸ்கள் விரைந்தன.
- ரெயில் தடம் புரண்டதற்கான காரணத்தைக் கண்டறிய குழு அமைக்க உத்தரவு.
எகிப்தின் கெய்ரோவில் நேற்று ரெயில் ஒன்று தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், 16 பேர் காயமடைந்துள்ளாதகவும் எகிப்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே படுகாயமடைந்தவர்களை மீட்க சம்பவ இடத்திற்கு சுமார் 20 ஆம்புலன்ஸ்கள் விரைந்தன. மேலும், ரெயில் தடம் புரண்டதற்கான காரணத்தைக் கண்டறியவும், இதற்கு பொறுப்பானவர்களைக் கண்டறியவும் ஒரு குழுவை அமைக்குமாறு எகிப்து போக்குவரத்து அமைச்சர் கமெல் எல்-வசீர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக எகிப்து போக்குவரத்து அமைச்சகம், கலியுப்பில் உள்ள ரெயில் நிலைய நடைமேடை அருகே ரெயில் தடம்புரண்டு ஏற்பட்ட விபத்தை அறிக்கையின் மூலம் உறுதி செய்துள்ளது.
- இரு நாடுகளும் இந்த ஆண்டு தூதரக உறவுகளை நிறுவியதன் 75வது ஆண்டு விழாவை கொண்டாடுகின்றன.
- மக்களிடையேயான உறவுகளின் அடிப்படையில் அன்பான மற்றும் நட்புறவை அனுபவிக்கின்றன.
இந்திய குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எகிப்து அரபுக் குடியரசின் அதிபர் 2023ம் ஆண்டின் இந்திய குடியரசு தினத்தில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்வது இதுவே முதல் முறை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அல்-சிசிக்கு அனுப்பிய முறையான அழைப்பிதழை, கடந்த அக்டோபர் 16ம் தேதி அன்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எகிப்திய அதிபரிடம் அளித்தார். இரு நாடுகளும் இந்த ஆண்டு தூதரக உறவுகளை நிறுவியதன் 75வது ஆண்டு விழாவை கொண்டாடுகின்றன.
மேலும், இந்தியாவும் எகிப்தும் நாகரீக மற்றும் ஆழமான வேரூன்றிய மக்களிடையேயான உறவுகளின் அடிப்படையில் அன்பான மற்றும் நட்புறவை அனுபவிக்கின்றன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- வாடகைக்கு எடுத்து கூட்ட நெரிசல் இல்லாமல் நகரில் வலம் வருவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- பொது போக்குவரத்தை ஊக்குவிப்பதன் மூலம் வாகன பயன்பாட்டால் ஏற்படும் கார்பன் வெளிப்பாட்டை குறைக்க திட்டம்.
எகிப்து நாடு சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்த சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்கும் முயற்சியாக கெய்ரோ நகர முக்கிய சாலைகளில் சைக்கிள் ஓட்டிகளுக்கு தனிப்பாதை அமைத்து கொடுத்துள்ளது.
விருப்பம் உள்ளவர்கள் செல்போன் செயலி மூலம் சைக்கிளை வாடகைக்கு எடுத்து கூட்ட நெரிசல் இல்லாமல் நகரில் வலம் வருவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில் சேவைகளை மேம்படுத்தி பொது போக்குவரத்தை ஊக்குவிப்பதன் மூலம் வாகன பயன்பாட்டால் ஏற்படும் கார்பன் வெளிப்பாட்டை குறைக்க எகிப்து அரசு திட்டமிட்டுள்ளது.
- எகிப்து நாட்டில் பேருந்து ஒன்று பயணிகளுடன் கவிழ்ந்து விழுந்தது.
- இதில் 3 குழந்தைகள் உள்பட 21 பேர் பரிதாபமாக பலியாகினர்.
கெய்ரோ:
எகிப்து நாட்டின் தஹ்லியா மாகாணத்தில் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 3 குழந்தைகள் உள்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடம் சென்ற மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- ஐ.நா. பருவநிலை மாநாட்டில் பங்கேற்க உலக தலைவர்கள் எகிப்து நாட்டில் குவிந்து வருகின்றனர்.
- 2 வாரம் நடைபெறும் இந்த மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
கெய்ரோ:
ஆர்டிக், அண்டார்டிகா கண்டங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருவதால் உலக நாடுகள் இதுவரை கண்டிராத பெரும் அபாயத்தை எதிர்கொள்ள இருப்பதாக விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இதனால் பருவநிலை மாற்றத்தை சமாளிக்கவும், அதன் தீவிரத்தை குறைக்கவும் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, ஐ.நா. பருவநிலை மாற்ற பணித்திட்டம் கடந்த 1992-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 1994-ம் ஆண்டில் அது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது. இந்த பணித்திட்டத்தில் கையெழுத்திட்டுள்ள 198 நாடுகளும், 1995 முதல் ஆண்டுதோறும் பருவநிலை மாநாட்டை கூட்டி, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்து வருகின்றன.
இதற்கிடையே, ஐ.நா. பருவநிலை மாற்ற பணித்திட்டத்தின் 27-வது மாநாடு எகிப்து நாட்டின் ஷார்ம் எல் ஷேக் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது.
50-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் வரும் 18-ம் தேதி வரை 2 வாரங்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் பங்கேற்று பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான தங்களின் பரிந்துரைகளையும், முன்னெடுப்புகளையும் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள். நேற்று முதல் எகிப்தில் உலக தலைவர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றைய மாநாட்டில் பங்கேற்ற இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பேசுகையில், கால நிலை மாற்றம் குறித்து விரைவாக செயல்பட வேண்டிய நேரம் இது என தெரிவித்தார். மேலும், காலநிலை நிதியத்திற்கு நாட்டின் அர்ப்பணிப்பாக 11.6 பில்லியன் பவுண்டுகளை வழங்கினார்.
- இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் எகிப்துக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
- அதிபர் அப்துலை சந்தித்த அவர் பிரதமர் மோடியின் தனிப்பட்ட செய்தியை அவரிடம் வழங்கினார்.
கெய்ரோ:
எகிப்து நாட்டுக்கு இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் கெய்ரோ சென்ற அவர் அல்-ஹொரேயா பூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்துவதில் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், எகிப்தில் அதிபர் அப்துல் பத்தா எல்-சிசியை மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று சந்தித்து பேசினார்.
இதுதொடர்பாக, மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், எகிப்து அதிபர் சிசியை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரிடம், பிரதமர் மோடியின் தனிப்பட்ட செய்தியையும் ஒப்படைத்துள்ளேன். இந்தியா மற்றும் எகிப்து ஆகிய சுதந்திர எண்ணம் கொண்ட இரு நாடுகளும், அரசியல், சர்வதேச உறவுகள் மற்றும் சமூக கொள்கைகளில் சர்வதேச பங்காற்றி வருகின்றன. அமைதி, வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்கான முகாந்திரங்களை இரு நாடுகளும் ஊக்குவித்து வருகின்றன என பதிவிட்டுள்ளார்.
- இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக எகிப்து நாட்டிற்கு சென்றார்.
- கெய்ரோவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு வெளியுறவுத்துறை மந்திரி மரியாதை செலுத்தினார்.
கெய்ரோ:
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக எகிப்து நாட்டிற்குச் சென்றுள்ளார்.
எகிப்து தலைநகர் கெய்ரோவிற்குச் சென்ற அவர் அல்-ஹொரேயா பூங்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
இதுதொடர்பாக ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கெய்ரோவின், அல்-ஹொரேயா பூங்காவில் காந்திக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலம் இன்றைய நாள் தொடங்கி உள்ளது. இது சுதந்திரத்திற்கான காரணத்துடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடையது. அனைவருக்குமான நீதி மற்றும் சமத்துவத்திற்காக பாடுபட அவரது செய்தி உலகை ஊக்குவிக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.
இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்துவதில் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 2019-ல் அல்-ஹொரேயா பூங்காவில் காந்திக்கு மார்பளவு சிலை திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.