என் மலர்
வணிகம் & தங்கம் விலை

SHARE MARKET TODAY: நேற்றைய சரிவிலிருந்து மீண்ட சென்செக்ஸ், நிஃப்டி
- சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவன பங்குகள் உயர்ந்தது.
- நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 35 நிறுவன பங்குகள் உயர்ந்தது.
தொடர்ந்து 7 நாட்களாக ஏற்றம் கண்டு வந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி நேற்று சரிவை சந்தித்தது. இந்நிலையில், இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சற்று உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று 77,288.50 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 77,087.39 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.
அதன்பின் படிப்படியாக சென்செக்ஸ் ஏறத்தொடங்கியது. இன்று குறைந்தபட்சமாக 77,082.51 புள்ளிகளிலும் அதிகபட்சமாக 77,747.46 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 317.93 புள்ளிகள் சரிந்து 77,606.43 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவன பங்குகள் உயர்ந்தது. 10 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தை போன்று இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று சற்று உயர்ந்தது.
நேற்று நிஃப்டி 23,486.85 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 23,433.95 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.
அதன்பின் நிஃப்டி ஏறுமுகமாக இருந்தது. இன்று குறைந்தபட்சமாக 23,412.20 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 23,646.45 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக நிஃப்டி 105.10 புள்ளிகள் சரிந்து 23,591.95 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 35 நிறுவன பங்குகள் உயர்ந்தது. 15 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.