என் மலர்
உள்ளூர் செய்திகள்
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை கஸ்தூரி மீது புதிய புகார்- மேலும் 2 வழக்குகள் பாய்கிறது
- தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.
- கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்களுக்கு எதிராக கருத்துக்களை கூறியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
சென்னை:
பிராமணர்களுக்கும் தனி வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்களுக்கு எதிராக கருத்துக்களை கூறியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து கஸ்தூரி மீது தெலுங்கு அமைப்புகள் சார்பில் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை எழும்பூரில் தெலுங்கு அமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோயம்பேடு போலீசிலும் கஸ்தூரி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அகில பாரத இந்து மக்கள் அமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கஸ்தூரி மீது சென்னையில் மேலும் 2 வழக்குகள் பாய உள்ளன.
இந்நிலையில் ரெட்டி நல சங்கத்தின் செயலாளர் செல்வராஜ், திருச்சி குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதில் யூடியூப் சேனலில், வெளியான கஸ்தூரியின் கருத்துகள் மனதை புண் படுத்தும் வகையில் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இதன் பேரில் கஸ்தூரி மீது 196, 352, 353 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்திந்திய போயர் பெண்கள் நலச் சங்கத்தின் தொழிற்சங்க நிர்வாகி விஜயலட்சுமி உப்பிலிய புரம் போலீஸ் நிலையத்தில் கஸ்தூரி மீது புகார் அளித்து உள்ளார்.