search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் செல்ல நகரும் தளத்துடன் நவீன நடைபாலம்- லிப்ட், எஸ்கலேட்டரும் அமைக்கப்படுகிறது
    X

    கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் செல்ல நகரும் தளத்துடன் நவீன நடைபாலம்- லிப்ட், எஸ்கலேட்டரும் அமைக்கப்படுகிறது

    • கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டு வரும் ஜூன் மாதம் திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
    • புதிய நடை மேம்பாலம் அமைக்க வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு உள்ளது.

    இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு புறநகர் பஸ் நிலையம், வெளியூர் பஸ் நிலையங்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டு உள்ளன. ஆம்னி பஸ்களுக்காகவும் தனியாக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையம் பயன் பாட்டுக்கு வந்ததும் கோயம்பேட்டில் இருந்து செல்லும் 60 சதவீத பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு மாற்றி இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டு வரும் ஜூன் மாதம் திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    இந்த பஸ் நிலையத்தின் கட்டுமான பணிகள் முடிந்தாலும், பஸ் நிலையத்துக்கு பயணிகள் வந்து செல்வ தற்கான வசதிகளை செய்வதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.

    இப்போதைக்கு மாநகர பஸ்கள் மூலம் மட்டுமே இந்த பஸ் நிலையத்துக்கு பயணிகள் வந்து செல்ல முடியும். மின்சார ரெயில்களில் வரும் பயணிகள் வண்டலூர் அல்லது ஊரப்பாக்கம் ரெயில் நிலை யத்தில் இறங்கி 2 கி.மீ. தொலைவை கடந்துதான் இந்த பஸ் நிலையத்துக்கு வர முடியும். முதலில் வெளியூர் செல்லும் பயணிகள் தங்கள் உடமைகளுடன் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை அடைவதில் சிரமம் உள்ளது.

    எனவே பஸ் நிலையத்துக்கு பயணிகள் எளிதாக வந்து செல்ல வசதியாக வண்டலூர்-ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்கான நிலத்தை பெற சி.எம்.டி.ஏ. நடவடிக்கை எடுத்து உள்ளது.

    இந்நிலையில் கிளாம்பாக்கம் ரெயில் நிலையம், ஜி.எஸ்.டி. சாலை, மாநகர போக்குவரத்து கழக பஸ் நிறுத்தம், புறநகர் பஸ் நிலையத்தின் நுழைவு வாயில் ஆகியவற்றை இணைக்கும் வகையில் புதிய நடை மேம்பாலம் அமைக்க வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்துடன், கிளாம்பாக்கம் ரெயில் நிலையம், ஜி.எஸ்.டி. சாலையை இணைக்கும் வகையில் புதிய நவீன நடை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. 'ராவலேட்டர்' எனப்படும் நகரும் மின் தரை, லிப்ட், எஸ்கலேட்டர் ஆகிய வசதிகளுடன் இந்த நவீன நடை மேம்பாலம் அமைகிறது.

    இந்த பணிகளுக்கான ஒப்பந்ததாரர் தேர்வு, நிலம் கையகப்படுத்துதல், வடிவமைப்பை இறுதி செய்தல் ஆகிய பணிகள் முடியும் நிலையில் உள்ளது. விரை வில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×