search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் தட்டுப்பாடு- பொதுமக்களுக்கு தாராளமாக கிடைப்பது இல்லை
    X

    சென்னையில் ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் தட்டுப்பாடு- பொதுமக்களுக்கு தாராளமாக கிடைப்பது இல்லை

    • பெட்டிக்கடைகள், மளிகை கடைகளில் ஆவின் பால் பாக்கெட்டிற்கு ரூ.2 வரை கூடுதலாக விற்றாலும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கிடைக்கிறது.
    • 6 நாட்களாக பச்சை நிற பால் பாக்கெட் தட்டுப்பாடாக வருகிறது.

    சென்னை:

    தனியார் பாலை விட ஆவின் பால் விலை குறைவாக இருப்பதால் கடைகளில் உடனே விற்றுவிடுகின்றன. பெட்டிக்கடைகள், மளிகை கடைகளில் ஆவின் பால் பாக்கெட்டிற்கு ரூ.2 வரை கூடுதலாக விற்றாலும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கிடைக்கிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆவின்பால் விலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து பச்சை நிற பால் பாக்கெட் தொடர்ந்து தட்டுபாடாக இருந்து வருகிறது. பச்சை நிறபாக்கெட் உற்பத்தியை குறைத்துவிட்டு அதற்கு பதிலாக ஆரஞ்சு நிற பாக்கெட்டை அதிகமாக உற்பத்தி செய்வதாகவும் அதனால்தான் தட்டுபாடு ஏற்படுவதாகவும் ஆவின் முகவர்கள் தெரிவித்தனர். ஆனால் இதற்கு ஆவின் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் சென்னையில் ஒரு சில பகுதிகளில் ஆவின்பால் பச்சை நிற பாக்கெட்டிற்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாதவரம் பால்பண்ணையில் இருந்து வினியோகிக்கப்படும் பச்சை நிற பால் பாக்கெட் ஆவின் பால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் குறைவாக வருவதாக முகவர்கள் தெரிவிக்கின்றனர். 20 டப் பச்சைநிற பாக்கெட் கேட்டால் 15 டப் தருகிறார்கள். 10 டப் கேட்டால் 7, 8 டப் வழங்குகிறார்கள். 6 நாட்களாக பச்சை நிற பால் பாக்கெட் தட்டுப்பாடாக வருகிறது. இதனால் கடைகாரர்கள் கேட்கும் அளவிற்கு பாலை கொடுக்க முடியிவல்லை. குறைந்த அளவில்தான் வினியோகிக்கிறோம் என்று தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×