என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![அனுமதியின்றி மதுவிற்றவர் கைது அனுமதியின்றி மதுவிற்றவர் கைது](https://media.maalaimalar.com/h-upload/2023/05/16/1882343-47-arrest.webp)
X
அனுமதியின்றி மதுவிற்றவர் கைது
By
DPIVijiBabu16 May 2023 2:38 PM IST
![DPIVijiBabu DPIVijiBabu](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பாலக்கோடு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- கைதான முனியப்பனை பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் கள்ளத்தனமாக அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு டி.எஸ்.பி. சிந்துவுக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து அவர் உத்தரவின் பேரில் பாலக்கோடு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பாலக்கோடு அருகே கொல்லுப்பட்டியில் முனியப்பன் (வயது60) என்பவர் வீட்டில் வைத்து அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடம் இருந்து பிராந்தி, பீர் பாட்டில்கள் என 7ஆயிரத்து 800 ரூபாய் மதிப்புள்ள 60 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கைதான முனியப்பனை பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
X