என் மலர்
உள்ளூர் செய்திகள்

அம்மா உணவகத்தில் சமையல் பாத்திரங்களை அள்ளிச்சென்ற கொள்ளை கும்பல்
- அம்மா உணவகத்தில் கல்லா பெட்டியில் வைத்து இருந்த ரூ.1500 ரொக்கம் கொள்ளை போய் இருந்தது.
- அம்மா உணவகத்தில் இருந்த சமையல் பாத்திரங்கள் அனைத்தையும் மர்ம கும்பல் சுருட்டி சென்று இருப்பது தெரிய வந்தது.
போரூர்:
சென்னை கே.கே. நகர் ஏ.பி பத்ரா சாலையில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.
நேற்று இரவு 11 மணி அளவில் வழக்கம் போல பணி முடிந்து ஊழியர்கள் உணவகத்தை பூட்டிவிட்டு சென்றனர்.
இன்று காலை 5.30 மணி அளவில் உணவகத்தை திறக்க சூப்பர்வைசர் ரேகா வந்தார் அப்போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டியில் வைத்து இருந்த ரூ.1500 ரொக்கம் கொள்ளை போய் இருந்தது. மேலும் அங்கிருந்த சமையல் பாத்திரங்கள் அனைத்தையும் மர்ம கும்பல் சுருட்டி சென்று இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து ரேகா கே.கே. நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Next Story