என் மலர்
உள்ளூர் செய்திகள்
லண்டனில் இருந்து இன்று சென்னை திரும்புகிறார் அண்ணாமலை: நாளை கமலாலயத்தில் வரவேற்பு
- லண்டனில் இருந்து நேற்று இரவு சென்னை புறப்பட்டார்.
- கட்சியின் மையக்குழு கூட்டமும் நடக்கிறது.
சென்னை:
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் படிப்பை படிக்க கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி லண்டன் சென்றார்.
3 மாத படிப்பை முடித்து விட்டு அவர் இன்று சென்னை திரும்புகிறார். லண்டனில் இருந்து நேற்று இரவு சென்னை புறப்பட்டார்.
இன்று பிற்பகலில் சென்னை விமான நிலையம் வரும் அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.
அதை தொடர்ந்து கோவை புறப்பட்டு செல்கிறார். அங்கு வாய்ஸ் ஆப் கோவை என்ற அமைப்பு சார்பில் கொடீசியா அரங்கில் இன்று 2-வது நாளாக நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொண்டு 'எழுந்திரு விழித்திரு, உறுதியாயிரு' என்ற தலைப்பில் மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார்.
நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மீண்டும் சென்னை திரும்புகிறார். கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் பகல் 12 மணிக்கு அமிஞ்சிகரையில் உள்ள அய்யாவு மகாலில் நடைபெறும் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
அதைதொடர்ந்து கட்சியின் மையக்குழு கூட்டமும் நடக்கிறது.