என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
பக்ரீத் பண்டிகை- ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள் வந்தன
BySuresh K Jangir8 July 2022 2:47 PM IST
- பக்ரீத் பண்டிகை வருகிற 10-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
- கடந்த சில தினங்களாக ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து ஏராளமான ஆடுகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டன.
சென்னை:
பக்ரீத் பண்டிகை வருகிற 10-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உறவினர்கள் மற்றும் ஏழைகளுக்கு இஸ்லாமியர்கள் குர்பானி தானமாக கொடுத்து பண்டிகையை கொண்டாடுவார்கள்.
இதையொட்டி கடந்த சில தினங்களாக ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து ஏராளமான ஆடுகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டன. சென்னையில் செங்குன்றம், புளியந்தோப்பு, வில்லிவாக்கம், ராயபுரம், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களில் குவியல் குவியலாக ஆடுகள் வந்திறங்கின. இந்த ஆடுகள் ரூ.10 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை விற்பனையானது. இதை ஏராளமானோர் ஆர்வமுடன் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக மந்தமாக இருந்த குர்பானி ஆடுகள் விற்பனை இந்த ஆண்டு கூடுதலாக களை கட்டியது.
Next Story
×
X