search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்- ஊரப்பாக்கம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு சேலை
    X

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்- ஊரப்பாக்கம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு சேலை

    • ஊரப்பாக்கம் ஊராட்சி தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் கொண்டாடப்பட்டது.
    • மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு 70 கிலோ கேட் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர்.

    வண்டலூர்:

    ஊரப்பாக்கம் ஊராட்சி தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் கொண்டாடப்பட்டது. கிளாம்பாக்கம் தி.மு.க. கிளை செயலாளர் சி.ஜே.கார்த்தி தலைமையில் நடந்த விழாவுக்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஜான்தினகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வி தமிழ்ச்செல்வன், மோகனாகண்ணன், பி.எஸ்.மலைராஜா, ஜே.கே.தினேஷ், ஒன்றிய துணை செயலாளர் பிரதீபாஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளர்களாக காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு துணை தலைவருமான வி.எஸ்.ஆராமுதன், ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி ஆகியோர் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு 70 கிலோ கேட் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர். பின்னர் 1000 பெண்களுக்கு சேலை மற்றும் பிரியாணி வழங்கப்பட்டது.

    இதில் கிளை செயலாளர்கள் மெய்யழகன், சாய்ராம், முருகன், வாசு, கமலநாதன், புஷ்பராஜ், சண்முகம், ரமாதேவி, எஸ்.எம்.சேகர், இன்பசேகர், டெக்ஸ்பாபு, கிறிஸ்டோபர், தமிழ்ச்செல்வன், வார்டு உறுப்பி னர்கள் மலர்தனசேகரன், மஞ்சுளா புஷ்பராஜ், தமிழ்செல்வம், தேவிநேரு, சாந்திகார்த்தி, பார்த்திபன், கலைவாணி வினோத் உட்பட 1000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் 3-வது சேதுமாதவன், விளம்பர செய்தி இளைஞரணி அமைப்பாளர் சி.ஜெ.ராஜா நன்றி கூறினார்.

    Next Story
    ×