என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![ஒகேனக்கல் மலைபாதை வளைவுகளில் விபத்தை தடுக்க குவிய கண்ணாடி அமைக்க வேண்டும் ஒகேனக்கல் மலைபாதை வளைவுகளில் விபத்தை தடுக்க குவிய கண்ணாடி அமைக்க வேண்டும்](https://media.maalaimalar.com/h-upload/2023/05/16/1882332-0001.webp)
ஒகேனக்கல் மலைபாதை வளைவுகளில் விபத்தை தடுக்க குவிய கண்ணாடி அமைக்க வேண்டும்
![DPIVijiBabu DPIVijiBabu](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அலுமினிய தற்காலிக தடுப்புகள், தடுப்பு சுவர்கள் இடிந்துள்ளது.
- ஆபத்தான வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவி பகுதிக்கு விடுமுறையை கொண்டாடுவதற்காக நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்து செல்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் பகுதிக்குச் செல்ல பென்னாகரம் பகுதியில் இருந்து சுமார் 11 கிலோ மீட்டர் அடர்ந்த வனப் பகுதிக்குள்ளும், நான்கு கிலோமீட்டர் ஆபத்தான பள்ளம் கொண்ட கணவாய் பகுதியை கடந்து செல்ல வேண்டியுள்ளது.
ஒகேனக்கல் கணவாய் சாலை தொடக்கத்தில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் எச்சரிக்கை பலகை கள், வளைவுப் பகுதிக்கான குறியீடு பலகை, வளைவுகளில் சாலையோர தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஒகேனக்கல் கணவாய் பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தால் சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அலுமினிய தற்காலிக தடுப்புகள், தடுப்பு சுவர்கள் இடிந்துள்ளது.
மேலும் ஆபத்தான வளைவுகள் என நெடு ஞ்சாலை துறையினரால் கண்டறிய ப்பட்ட இரண்டு இடங்களில் வைக்கப்பட்டிருந்த குவிய கண்ணாடிகளை வனவில ங்குகள் முற்றிலுமாக சேதப்படுத்தியது.
மேலும் ஒகேனக்கல் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆபத்தான மற்றும் குறுகிய நிலையிலான வளைவுகள் உள்ளதால் ஏற்பட்டுள்ளது.
இதில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. தற்போது ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கணவாய் பகுதியில் இடைவிடாது வாகனங்கள் சென்றவாறு உள்ளதால் குறுகிய வளைவுகள் மற்றும் ஆபத்தான வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே ஒகேனக்கல் கணவாய் சாலையில் ஆபத்தான இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ள தடுப்புகளை சரி செய்தும் மற்றும் வாகன விபத்துகளை தடுக்கும் வகையில் குறுகிய வளைவுகளில் குவிய கண்ணாடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நெடுஞ் சாலைத்துறையினருக்கு சுற்றுலா வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.