என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![சாலை வசதி கேட்டு விவசாய குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் சாலை வசதி கேட்டு விவசாய குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2024/04/23/2100613-pdyfarmer.webp)
சாலை வசதி கேட்டு விவசாய குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg)
- கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் வீட்டிற்கு செல்ல வழியில்லாமல் தவித்து வருகிறோம்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த மூங்கில்மடுவு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் மணிகண்டன் இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் திடீரென குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
மூங்கில் மடுவு பகுதியில் உள்ள எங்கள் வீட்டிற்குச் செல்லும் ஓடை புறம்புக்கு வழியை அதே பகுதியை சேர்ந்த நபர் ஆக்கிரமித்துள்ளார். இந்த நிலையில், ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கடந்த ஜனவரி, 23-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் இதேபோல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது அதிகாரிகள் பேசும்போது ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் நம்பிக்கையுடன் சென்றோம். ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு ஓடை புறம் போக்கை மீட்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் வீட்டிற்கு செல்ல வழியில்லாமல் தவித்து வருகிறோம்.
வாக்குறுதி தந்த அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கண்டித்து குழந்தைகள் உட்பட குடும்பத்துடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டு உள்ளோம் என அவர் கூறினார். இதனை அடுத்து அங்கு வந்த டி.ஆர்.ஓ பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், தர்ணாவில் ஈடுபட்டிருந்த மணிகண்டனின் குடும்பத்திடம் விசாரனைக்கு உத்திரவிடுவதாக உறுதியளித்தார். அதனை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.