என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பழனி பாதயாத்திரை பக்தர்கள் 2 பேர் விபத்தில் பலி பழனி பாதயாத்திரை பக்தர்கள் 2 பேர் விபத்தில் பலி](https://media.maalaimalar.com/h-upload/2025/02/09/9110798-dglsaravanan.webp)
பழனி பாதயாத்திரை பக்தர்கள் 2 பேர் விபத்தில் பலி
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg)
- போலீசார் இறந்தவரின் பிரேதத்தை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
புதுக்கோட்டை மாவட்டம் வலையபட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது31). இவர் புதுக்கோட்டை மின் வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனது ஊரிலிருந்து கிளம்பி பழனிக்கு பாதயாத்திரையாக வந்துகொண்டிருந்தார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மெய்யம்பட்டி பகுதியில் நேற்று இரவு நடந்து வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சரவணன் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம் போலீசார் இறந்தவரின் பிரேதத்தை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி பாரதியார் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (50). இவர் அதே பகுதியை சேர்ந்த குழுவினருடன் பழனிக்கு பாதயாத்திரையாக வந்துகொண்டிருந்தார். திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே ஸ்ரீராமபுரம் பகுதியில் வந்தபோது அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய பூத்தாம்பட்டியை சேர்ந்த வினோத்குமார் (32) என்பவரை வேடசந்தூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.