என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவில் விழாவில் போலீசை தாக்கிய தி.மு.க. பகுதி செயலாளர்- 3 பேர் மீது வழக்குப்பதிவு
- போலீஸ்காரர் கார்த்திக் தலைமை செயலக காலனி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
- தி.மு.க. நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை தலைமை செயலக காலனியில் குற்றப்பிரிவு போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் கார்த்திக்.
கடந்த 17-ந்தேதி கார்த்திக் மற்றும் அவரது உறவினர் பிரவீண் ஆகியோர் தலைமை செயலக காலனி பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்த போது திரு.வி.க.நகர் தொகுதி தெற்கு பகுதி தி.மு.க. செயலாளர் சாமிக் கண்ணு வீட்டு முன்பு இருந்த இரும்பு தடுப்பு வேலியை நகர்த்தி வாகனத்தில் செல்ல முயன்றனர். அப்போது கார்த்திக்கை, சாமிக்கண்ணு மற்றும் அவரது மகன்கள் மைனர் பாபு தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸ்காரர் கார்த்திக் தலைமை செயலக காலனி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சாமிக்கண்ணு, அவரது மகன்கள் மைனர் பாபு (38), ஸ்டாலின் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. காயம் ஏற்படுத்துதல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் தி.மு.க. நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.