என் மலர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
- நடைமுறையின் படி சிறப்பு காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்ய வேண்டும்.
- காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் அமல்படுத்த வேண்டும்.
திருப்பூர்:
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை சமூகநீதி கொள்கைகளுக்கு எதிராகவும் பெண்கள் நலனுக்கு எதிராகவும் 3,000 தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
ஏற்கனவே நடைமுறையின் படி சிறப்பு காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்ய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறுகின்ற வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவதைப் போல அகவிலைபடியுடன் கூடிய மாதாந்திர ஓய்வூதியம் 6750 ரூபாய் குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் பெண் சத்துணவு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் சந்திர கலா, முன்னாள் மாவட்ட பொருளாளர் மகேந்திர பூபதி , மாவட்ட செயலாளர் மோகன சுந்தரராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.