search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி ரெயிலில் கடத்தி வரப்பட்ட 13 கிலோ கஞ்சா பறிமுதல்
    X

    கன்னியாகுமரி ரெயிலில் கடத்தி வரப்பட்ட 13 கிலோ கஞ்சா பறிமுதல்

    • எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இரவு கன்னியாகுமரி ரெயில் நிலையத்தை வந்தடையும்.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பும் ரெயிலில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நாகர்கோவில்:

    அசாம் மாநிலம் திப்ருகாரில் இருந்து கன்னியாகுமரிக்கு தினமும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இரவு கன்னியாகுமரி ரெயில் நிலையத்தை வந்தடையும்.

    நேற்று இரவு வழக்கம்போல் கன்னியாகுமரி ரெயில் நிலையத்திற்கு விவேக் எக்ஸ்பிரஸ் வந்து சேர்ந்தது. கன்னியாகுமரிக்கு சென்ற ரெயில் பராமரிப்பு பணிக்காக நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது.

    ரெயில் நிலையத்தில் ஊழியர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முன்பதிவு பெட்டியான எஸ்-3, எஸ்-4 பெட்டிகளில் உள்ள கழிவறையில் பராமரிப்பு பணியை மேற்கொண்டனர். அப்போது கழிவறையின் மேற்கூரையிலுள்ள ஸ்க்ரூக்கள் கழற்று இருந்தன.

    அதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனால் அந்த ஸ்க்ரூவை அவர்களால் மாட்ட முடியவில்லை. சந்தேகம் அடைந்த ஊழியர்கள் அந்த ஸ்க்ரூவை கழற்றி பார்த்தபோது மேற்கூரையில் சில பார்சல்கள் இருந்தன. ஒவ்வொரு பெட்டியிலும் 7 பார்சல் இருந்தது.

    அதுகுறித்து ரெயில்வே ஊழியர்கள் ரெயில்வே போலீசாருக்கும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால், ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து பார்த்தனர்.

    அப்போது அந்த பார்சல்களில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. 14 பார்சல்களில் மொத்தம் 13 கிலோ கஞ்சா இருந்தது. போலீசார் அதை பறிமுதல் செய்தனர். அதை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரெயில் பெட்டியின் மேற்கூரையில் பாதுகாப்பாக மறைத்து வைத்து கஞ்சாவை கடத்தி வந்துள்ளனர்.

    கடத்தி வந்த நபர் ரெயில்வேயில் போலீசார் ரோந்து பணியில் இருந்ததால் கஞ்சா பார்சலை எடுக்காமல் சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. கஞ்சா பார்சலை கடத்தி வந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பும் ரெயிலில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் தற்போது 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ரெயிலில் 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகி றார்கள்.

    Next Story
    ×