search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 3500 கனஅடியாக சரிவு
    X

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 3500 கனஅடியாக சரிவு

    • நீர்வரத்து குறைந்தபோதிலும் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • பிலிக்குண்டுலுவில் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    தமிழகம்-கர்நாடகா எல்லை பகுதியில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வரை அதிகரித்து சென்றது.

    இந்த நிலையில் மழையின் அளவு குறைந்ததால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறையத் தொடங்கியது. இதனால் நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை சற்று சரிந்து வினாடிக்கு 3500 கன அடியாக குறைந்துள்ளது.

    நீர்வரத்து குறைந்தபோதிலும் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    தமிழக-கர்நாடகா எல்லை பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருவதால், பிலிக்குண்டுலுவில் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×