search icon
என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • மனலூர் பேட்டை ஆகிய குறு வட்டங்களில் விவசாயிகள் பதிவு செய்யலாம்.
    • 2 வாரங்க ளுக்குள் ஏற்படும் இழப்பு களுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் ரபி குறுவை கால தோட்டப்பயிரான மரவள்ளி, வெங்காயம், கத்திரி ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம். இதற்காக அறிவிக்கை செய்யப்பட்ட சின்னசேலம், நயினார்பாளையம், இந்திலி, வடக்கநந்தல், ஆலத்தூர், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், நாகலூர், அரியலூர், ரிஷிவந்தியம், வடபொன்பரப்பி, சங்கரா புரம், சேராப்பட்டு, திருக்கோவிலூர், திருப்பா லப்பந்தல், ஆவிகொளப் பாக்கம், எறையூர், உளுந்தூர் பேட்டை, செங்குறிச்சி, திரு நாவலூர், எலவனாசூர் கோட்டை, வெள்ளிமலை, களமருதூர், மனலூர் பேட்டை ஆகிய குறு வட்டங்களில் விவசாயிகள் பதிவு செய்யலாம்.

    மேலும், தலா ஒரு ஏக்கருக்கு வெங்காயம் ரூ.909.17 மற்றும் கத்திரி ரூ.817.51 தொகையை வரும் ஜனவரி மாதம் 31- ந் தேதிக்குள்ளும், மரவள்ளி ரூ.1,517.51 தொகையை வரும் பிப்ரவரி மாதம் 29- ந் தேதிக்குள்ளும் செலுத்தி விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும். எதிர்பா ராத திடீர் வெள்ளம் மற்றும் வறட்சி ஏற்படும் போது வழக்கத்தை விட 50 சதவீதம் பயிரின் மகசூல் குறைந்தி ருந்தால் காப்பீடு தொகை வழங்கப்படும். அறுவடை முடிந்த பின் 2 வாரங்க ளுக்குள் ஏற்படும் இழப்பு களுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படும்.

    எனவே கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் அடங்கல், இ-அடங்கல் நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்களை கொண்டு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பொது சேவை மையங்கள் மற்றும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணி செய்த பாலாஜி, கடந்த 18 மாதங்களாக பணிக்கு செல்லவில்லை.
    • தொட்டி குஞ்சரம் சாலையில் நிலை தடுமாறி கிழே விழுந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே குஞ்சரம் பகுதியை சேர்ந்தவர் அப்பாவு மகன் பாலாஜி (வயது 47). இவர் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதியாக செயல்பட்டார். இவரது மனைவி உமாமகேஸ்வரி குஞ்சரம் ஊராட்சி தலைவராக உள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணி செய்த பாலாஜி, கடந்த 18 மாதங்களாக பணிக்கு செல்லவில்லை. இந்நிலையில் எலவனாசூர்கோட்டையில் இருந்து குஞ்சரத்திற்கு நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பாலாஜி வந்து கொண்டிருந்தார். அப்போது தொட்டி குஞ்சரம் சாலையில் நிலை தடுமாறி கிழே விழுந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

    அவ்வழியே சென்றவ ர்கள் இவரை மீட்டு எலவனாசூர்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்த தகவலின்பேரில் விரைந்து சென்ற எலவனாசூர்கோட்டை போலீசார், பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ள க்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊராட்சி தலைவரின் கணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இந்த அணையில் இருந்து 11 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
    • மேலும், நீர் வரத்து படிப்படியாக குறைந்ததால், நீர் திறந்து விடப்படுவதும் படிப்படியாக குறைக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. 46 அடி உயரமுள்ள இந்த அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படும். உபரி நீரினை விவசாயத்திற்கு திறக்கப்படும். கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த அணையில் இருந்து 11 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் கல்வராயன்மலை பகுதியில் மழை பெய்து வருகிறது.

    இதனால் நேற்று மாலை கோமுகி அணைக்கு 3 ஆயிரம் கன அடிநீர் வந்தது. இதையடுத்து நேற்று இரவு கோமுகி அணையில் இருந்து 2500 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. மேலும், நீர் வரத்து படிப்படியாக குறைந்ததால், நீர் திறந்து விடப்படுவதும் படிப்படியாக குறைக்கப்பட்டது. இன்று காலை 10 மணி நிலவரப்படி கோமுகி அணைக்கு 800 கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் முழுக்கொள்ளளவான 44 அடிக்கு நீர் உள்ளதால், உபரியாக வரும் 800 கன அடி நீர் மட்டும் திறந்து விடப்படுகிறது. இதனால் கோமுகி அணையின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    • ஆடுகளின் ரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது.
    • சந்தையில் காத்திருந்த வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமையன்று ஆட்டு சந்தை நடப்பது வழக்கம். இந்த சந்தையில் உளுந்தூர்பேட்டை மட்டும் தான் சுற்றுவட்டார பகுதிகளான கிளாப்பாளையம், ஆதனூர், ஆசனூர், குன்னத்தூர், எறையூர், கிளியூர், பாதூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

    இதனை திருச்சி, சேலம், மதுரை, தேனி, கம்பம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுவை மாநிலம் ஆகிய பகுதியிலிருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து ஆர்வமுடன் ஆடுகளை வாங்கிச் செல்வார்கள். வெள்ளாடு, செம்மறி ஆடுகள் இங்கு விற்பனை செய்யப்படும். மேலும், மலைக்கிராமங்களில் வளர்க்கப்படும் கொடி ஆடு இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

    கடந்த மாதம் புரட்டாசி மாதம் என்பதால் இங்கு ஆடுகளின் விற்பனை மந்தமாக இருந்தது. புரட்டாசி மாதம் முடிந்தவுடன் சந்தையில் ஆடுகளின் விற்பனை சூடுபிடித்தது. இந்நிலையில் வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் ஆட்டுக்கறி விற்பனை அதிகமாக இருக்கும் என்பதால் ஆடுகளை வாங்க ஏராளமான வியாபாரிகள் நேற்று நள்ளிரவு முதலே சந்தைக்கு வந்தனர்.

    அதே சமயம் இன்று அதிகாலை 3 மணி முதல் ஆடுகளின் வரத்து தொடங்கியது. உடனடியாக ஆடுகளின் விற்பனை களைக்கட்டியது. சந்தையில் காத்திருந்த வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

    ஆடுகளின் ரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது. மேலும், ஆட்டுக் கறியை விரும்பி சாப்பிடுபவர்கள் தங்களின் நண்பர்களுடன் உளுந்தூர்பேட்டைக்கு வந்து கொடி ஆட்டினை வாங்கி சென்றனர்.

    இவர்கள் வாங்கிய கொடி ஆட்டை, தங்களின் ஊருக்கு கொண்டு சென்று தீபாவளிக்கு முன்தினம் பங்கு போட்டு தீபாவளி நாளில் சமைத்து படையலிட்டு உண்பார்கள். இதற்காக பலரும் காரில் வந்து ஆடுகளை வாங்கி சென்றனர்.

    சந்தை தொடங்கி 3 மணி நேரத்திலேயே, அதாவது காலை 7 மணிக்குள் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து சந்தையில் காத்திருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், ஆடுகள் வர, வர வாங்கிச் சென்றனர். மொத்தத்தில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வார சந்தை ஒப்பந்ததாரர்கள் கூறினார்கள்.

    • வெள்ளிமலை, கரியாலூர், சேரப்பட்டு உள்ளிட்ட 20 கிராமங்களில் இன்று அதிகாலை 2 மணி முதல் மழை பெய்தது.
    • மலைக்கும்-கல்வராயன்மலைக்குமான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    வங்கக்கடலில் உருவாகி யுள்ள வளிமண்டல மேல டுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவ லாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் மற்றுமொரு வளிமண்ட மேலடுக்கு சுழற்சி நேற்று உருவாகியது. இதனால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கள்ளக் குறிச்சி மாவட்டம் கல்வரா யன்மலையில் உள்ள வெள்ளிமலை, கரியாலூர், சேரப்பட்டு உள்ளிட்ட 20 கிராமங்களில் இன்று அதிகாலை 2 மணிமுதல் மழை பெய்தது.

    இதனால் இன்று காலை 5 மணியளவில் வெள்ளி மலை பெரியார் நீர்வீழ்ச்சி அருகேயுள்ள சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. அவ்வழியே இன்று காலை 6 மணிக்கு அவ்வழியே வந்த கார், மண் சரிவால் சாலையில் இருந்த சேற்றில் சிக்கியது. இதனால் வெள்ளி மலைக்கும்-கல்வராயன்மலைக்குமான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. அந்த சாலையின் இருபுற மும் அரசு, மற்றும் தனியார் பஸ்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் அணிவகுத்து நின்றன. அப்போது அங்கு விரைந்து வந்த அப்பகுதி இளைஞர்கள், சேற்றில் சிக்கியிருந்த காரினை மீட்டு சாலையோரம் நிறுத்தினர். தொடர்ந்து சாலையில் இருந்த சேற்றினை அகற்றி னர். மேலும், மரக்கிளை களையும் அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் போக்குவரத்து நெரிசலை இளைஞர்களும், பொதுமக்களும் சரி செய்த னர்.

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 411 மனுக்களை பொது மக்கள் வழங்கினர்
    • ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், ஏரி, குளம் தூர் வாருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், நில அளவை தொடர்பான மனுக்கள், வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 411 மனுக்களை பொது மக்கள் வழங்கினர்.

    இதேபோல் மாற்றுத்திற னாளிகள் 14 மனுக்களை வழங்கினர். மாவட்ட மாற்றுத்தி றனாளி நல த்துறை சார்பில் தசை சிதைவு நோயினால் பாதிக்க ப்பட்ட 2 மாற்றுத்தி றனாளி களுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியும், மடக்கு சக்கர நாற்காலி 2 நபர்களுக்கும், இயற்கை மரணம் ஈமச்ச டங்கு காசோலை 5 நபர்க ளுக்கும், காதெலிக்கருவி ஒரு நபருக்கும் என மொத்தம் 10 மாற்றுத்திற னாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் யோகஜோதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) இராஜலட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • இவர் பலரிடம் ஆடுகளை ஓப்படைத்து மேய்ச்சலுக்கு அனுப்பி வைப்பார்.
    • இது குறித்து கேள்வி கேட்ட ஓடையாருக்கு, கருணைகுமார் சரியாக பதில் கூறவில்லை

    கள்ளக்குறிச்சி:

    திருநெல்வேலி மாவட்டம் இளையான்குடி அருகில் உள்ள பிரம்மச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஒடையார் (வயது 53). செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர் பலரிடம் ஆடுகளை ஓப்படைத்து மேய்ச்சலுக்கு அனுப்பி வைப்பார். அதற்கு அவர்களுக்கு கூலிப் பணம் கொடுத்துவிடுவார். இவர் திருவாரூர் மாவட்டம் கிடார் கிராமத்தை சேர்ந்த கருணைகுமார் (23) என்பவரிடம் 200 ஆடுகளை ஓப்படைத்து மேய்ச்ச லுக்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டைக்கு வந்த ஆட்டின் உரிமையாளர் ஒடையார், கருணை குமாரை தொடர்பு கொண்டு ஆடுகள் எங்குள்ளன என்று கேட்டார்.

    உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள சேந்தநத்தத்தில் பட்டி போட்டு ஆடுகளை மேய்த்து வருவதாக கருணைகுமார் கூறியுள்ளார். அங்கு சென்ற ஒடையார், ஆடுகளை எண்ணிப்பார்த்தார். 10 ஆடுகள் குறைவாக இருந்தது. இது குறித்து கேள்வி கேட்ட ஓடையாருக்கு, கருணைகுமார் சரியாக பதில் கூறவில்லை. இது குறித்து திருநாவலூர் போலீசாரிடம் ஆட்டின் உரிமையாளர் ஒடையார் புகார் கொடுத்தார். அதன்பேரில் கருணை குமாரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில் கருணைகுமாரும், ராமநாதபுரம் மாவட்டம் சந்திரகுடியை சேர்ந்த கலைச்செல்வனும் ஆடுகளை திருடி விற்றது தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், கருணைகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாகவுள்ள கலைச்செல்வனை போலீசார் தேடி வருகின்றனர்.

    கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள அருவங்காடு தெற்கு ஓடை யில் சாராய ஊறல்கள் உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை கிரா மங்களில் சாராயம் காய்ச்சி விற்கும் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் குடிநீரை பேரல்களில் நிரப்புகின்றனர் யூரியா, மரப்பட்டை, வெல்லம் போன்ற பல்வேறு பொருட் களை பேரல் நீரில் ஊற வைக்கின்றனர்.சில நாட்கள் கழித்து பேரல்களில் ஊறிய நீரினை அடுப்பில் வைத்து காய்ச்சுகின்றனர். இது நாட்டுச் சரக்கு என்ற பெயரில் மதுப்பிரியர்களி டம் விற்கின்றனர். இது அப்பகுதியில் மட்டு மின்றி அரியலூர், விழுப்புரம், சேலம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுவை மாநிலத்தின் ஒரு சில இடங்க ளிலும் விற்கப்படு கிறது.

    இது தொடர்பாக கள்ளக் குறிச்சி மாவட்ட போலீசா ருக்கும், கல்வராயன்மலை போலீசாருக்கும் புகார் வருவதும், இதையடுத்து அவர்கள் விரைந்து சென்று சாராய ஊறல்களை அழிப்ப தும் தொடர் நிகழ்வாக உள்ளது. இருந்தபோதும் இந்த சாராய ஊறல்களை வைத்திருந்தவர்கள் யார் என்பதும், அவர்கள் இன்று வரையில் கைது செய்யப் படாததும் மர்மமாகவே உள்ளது.இந்நிலையில் கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள அருவங்காடு தெற்கு ஓடை யில் சாராய ஊறல்கள் உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மோகன்ராஜ் உத்தர வின்பேரில் கல்வராயன் இன்ஸ்பெக்டர் பால கிருஷ் ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடாத் திற்கு விரைந்து சென்றனர்.அங்கு 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 பேரல்களில் 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள் இருந்ததை கண்டறிந்தனர். உடனடியாக அதனை அங்கேயே கொட்டி அழித்தனர். மேலும், இதனை காய்ச்சு வதற்காக வைக்கப்பட்டி ருந்த அடுப்பு, ஊறல்கள் செய்வதற்கான மூலப் பொருட்கள் போன்ற வற்றையும் அழித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சாராய ஊற லை வைத்திருந்தவர்யார் என்பது குறித்து விசா ரணை நடத்தி வருகின்ற னர். மேலும், அடையாளம் தெரியாத அந்த நபரை வலை வீசி தேடி வருகின்ற னர்.

    கெடிலம் ஆற்றிலிருந்து மணலை ஏற்றிக்கொண்டு 3 மாட்டு வண்டிகள் வந்தது.

    கள்ளக்குறிச்சி:

    திருநாவலூர் பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றில் மணல் கொள்ளை யடிக்கப்ப டுவதாக உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிர ண்டு மகேஷிற்கு தகவல் கிடைத்தது. இதையடு த்து திருநாவலூர் இன்ஸ்பெ க்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் கெடிலம் ஆற்றுப் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கெடிலம் ஆற்றிலிருந்து மணலை ஏற்றிக்கொண்டு 3 மாட்டு வண்டிகள் வந்தது. இதனை போலீசார் மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்தனர். மேலும், மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த உடையாந்தல் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 38), முருகேசன் (40), கணபதி (41) ஆகிய 3 பேரை கைது செய்தனர். திருநாவலூர் போலீசார் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் வெளிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கள்ளக்குறிச்சி:

    தீபாவளி பண்டிகையை யொட்டி கள்ளக்குறிச்சி நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் காவல்துறை சார்பில் பஸ் நிலையம் வெளிப்பகுதியிலும், மணிக்கூண்டு பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதியில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் வெளிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து தீபாவளி பண்டிகையை யொட்டி மளிகை பொருட்கள், பட்டாசுகள், துணிகள் ஆகியவற்றை வாங்க வரும் பொது மக்கள் நகர பகுதியில் அதிக அளவில் கூடுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், இவர்கள் சாலைகளில் தாறுமாறாக மோட்டார் சைக்கிளை நிறுத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவே துருகம் சாலை, சேலம் மெயின் ரோடு, கச்சிராயபாளையம் சாலை, சங்கராபுரம் சாலை ஆகிய 4 சாலைகளிலும் தற்காலிக வாகனங்கள் நிறுத்தும் இடங்களை ஏற்படுத்த போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

    இவ்வாறு அமைப்பதன் மூலம் அங்கு வாகனங்களை பொதுமக்கள் நிறுத்திவிட்டு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு மீண்டும் வந்து தங்களது வாகனங்களை எடுத்துச் செல்லலாம் என கூறினார். தொடர்ந்து குற்ற சம்பவங்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.அப்போது கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் உள்ளிட்ட போலீசார் பலரும் உடன் இருந்தனர்.

    • கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் 10,90,021 வாக்காளர்கள் உள்ளனர்.
    • பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டு கொண்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குச்சா வடி மையத்தில் வாக்களர் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெறு கிறது. அதன்படி கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஷ்ரவன் குமார் ஆய்வு மேற்கொண் டார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்திய தேர்தல் ஆணை யம் மற்றும் சென்னை தலை மை தேர்தல் அலுவலர் அறி வுரைகளின்படி கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் கடந்த 5.1.2023 முதல் சிறப்பு சுருக்க திருத்த பணியின் கீழ் 18 வயது (1.1.2024 தகுதி நாளாக கொண்டு) நிரம்பி யவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பாக பணி மேற்கொள்ளப்பட்டு, கடந்த மாதம் 27-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டது. இவ்வரைவு வாக்காளர் பட்டியலில் 27.10.2023 ன்படி கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் 10,90,021 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, இந்த மாதம் 4,5, 18, 19 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி அமை விடங்களிலும் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் நடைபெறும். இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டு கொண்டார். அப்போது வாக்குச்சாவடி மைய அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வரு கிறது.
    • பொதுமக்கள் பாது காப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி, நவ.5-

    கள்ளக்குறிச்சி மின்சார வாரிய மேற்பார்வை பொறி யாளர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வரு கிறது. எனவே பொது மக்கள் பருவ மழையாலும், பெருங் காற்றாலும் அல்லது வேறு இயற்கை சீற்றத்தா லோ அறுந்து விழுந்துள்ள மின்சார கம்பி அருகே செல்லக் கூடாது. மேலும் அவ்வாறு மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு உடனடி யாக தகவல் தெரிவிக்க வேண்டும். மின்கம்பங்கள் பழுதடைந்து இருந்தாலோ அல்லது அதிலிருந்து போகும் மின்கம்பிகள் பூமியில் இருந்து 15 அடிக்கு கீழ் தொங்கிக்கொண்டு இருந்தாலோ அதனை கடந்தோ அல்லது அருகிலோ செல்ல வேண்டாம். இதுகுறித்து மின்சாரவாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின் கம்பத்திலோ, அதனை தாங்கும் (ஸ்டே) கம்பிகளிலோ கால்நடை களை கட்டாதீர்கள். மழைக் காலங்ளில் மின் மாற்றிகள், மின்கம்பங்கள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகே செல்லாதீர்கள். மேற்கண்ட எச்சரிக்கை நடவடிக்கைகளை கடை பிடித்து பொதுமக்கள் பாது காப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×