search icon
என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • எனவே அதே பகுதியில் தனது தம்பி சங்கருடன் வசித்து வந்தார்.
    • சைகை மூலம் விஷ பூச்சி கடித்து விட்டதாக கூறியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே மடம் காட்டுக்கொட்டாய் பகுதி யைச் சேர்ந்தவர் நடேசன்.இவரது மகள் தெய்வானை (வயது 53) மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணம் ஆக வில்லை. எனவே அதே பகுதியில் தனது தம்பி சங்கருடன் வசித்து வந்தார். இந்நிலை யில் சம்பவத்தன்று இயற்கை உபாதை கழிப்பதற்காக மடம் ஏரிக்கரை பாதையில் சென்றார். அப்போது அவரை விஷ பூச்சி கடித்த தாக கூறப்படுகிறது. தொடர்ந்து வீட்டுக்கு வந்த அவர் வீட்டில் இருந்த வர்களிடம் சைகை மூலம் விஷ பூச்சி கடித்து விட்டதாக கூறியுள்ளார்.

    இதனைப் புரிந்து கொண்ட உறவி னர்கள் அவரை கள்ளக்கு றிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தெய்வானை நேற்று காலை இறந்து போனார். இது குறித்து அவரது தம்பி சங்கர் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
    • இது குறித்து திருநாவலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வண்டிப்பாளையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் (வயது 28). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்த இவர் இன்று காலை 7.30 மணியளவில் ரோட்டின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். வண்டிப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்ருந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அஜித் குமார் மீது மோதியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி ஆனார். இது குறித்து திருநாவலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் அசோகன், சப் - இன்ஸ்பெக்டர் ராம தாஸ் தனிபிரிவு போலீஸ் காரர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாகனம் மோதி பலியான அஜித்குமார் உடலை மீட்டு முண்டியம் பாக்கம் அரசு மருத்து வக்கல் லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பசுவை வாரிய பணியாளர் சந்துரு மற்றும் நகராட்சி பணியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
    • மேலும் சாதிக் பாஷாவுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி நகராட்சிக் குட்பட்ட பகுதியில் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படு கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய நகராட்சி ஆணையர் மகேஸ்வரி அலுவலர்களுக்கு உத்தர விட்டார். அதன்படி நகராட்சி துப்புரவு அலு வலர் ரவீந்திரன் தலைமை யில் துப்புரவு ஆய்வாளர் சையது காதர், களப்பணி யாளர் மகேஸ்வரி, பசுவை வாரிய மேலாளர் சேகர், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் சத்யராஜ், பாலகிருஷ்ணன், அன்புதுரை, தூய்மை இந்தியா திட்டம் மேற்பார் வையாளர் பரிமளா, பசுவை வாரிய பணியாளர் சந்துரு மற்றும் நகராட்சி பணியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது கள்ளக்குறிச்சி க.மாமனந்தல் ரோடு பகுதி யைச் சேர்ந்த சாதிக் பாஷா என்பவர் ஆட்டோவில் ஒருமுறை பயன்படுத் தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து ஆட்டோவில் இருந்த 750 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் சாதிக் பாஷாவுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி ஆணையர் மகேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது குறித்து ஆணையர் மகேஸ்வரி கூறுகையில், கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்து வதோ அல்லது மொத்த மாக விற்பனை செய்வதோ தெரிய வந்தால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக் கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

    • இங்குள்ள குன்று மேட்டுப்பகுதி தெருவில் 200 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.
    • மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    கச்சிராயப்பாளையம் அருகே வடக்கநந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட அக்கராயபாளையம் 17 வது வார்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள குன்று மேட்டுப்பகுதி தெருவில் 200 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் சாலை வசதிகள் இல்லாமல் மண்சாலையாகவே இருந்து வருகிறது. இதனால் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக சாலை சேரும் சகதிமாக மாறியது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமலும், வாகனங்களில் செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    சாலை வசதி அமைத்து தர வேண்டும் என வடக்கநந்தல் பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள் சேரும் சகதியுமாக இருந்த சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை வசதி அமைத்து தரவில்லை எனில், ஆதார் மற்றும் ரேஷன் அட்டைகளை பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் பொதுமக்கள் கூறினர்.

    • இவர்கள் இன்று காலை 6 மணிக்கு தங்களுக்கு சொந்தமான காரில் மருத்துவமனைக்கு புறப்பட்டனர்.
    • இதில் சென்னையில் இருந்து வந்த காரில் பயணித்த முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்தவாய்நத்தத்தில் வசித்து வரும் ஞானமூர்த்தி (வயது 40). இவரது மனைவி மகேஸ்வரி (36). இவ்விருவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் டாக்டர்களாக பணிபுரிகின்றனர். இவர்கள் இன்று காலை 6 மணிக்கு தங்களுக்கு சொந்தமான காரில் மருத்துவமனைக்கு புறப்பட்டனர். எலவனாசூர்கோட்டை அருகேயுள்ள கீரப்பாளையம் மேம்பாலத்தில் வந்தபோது, சென்னையில் இருந்து தாறுமாராக வந்த கார், டாக்டர்கள் வந்த காரின் முன்பக்கத்தில் மோதியது. இதில் சென்னையில் இருந்து வந்த காரில் பயணித்த முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் பலத்த காயமடைந்தார். மேலும், மருத்துவமனைக்கு சென்ற டாக்டர் தம்பதியர் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

    அவ்வழியே சென்றனர்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார், பலியான முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில் பலியான முதியவர், திருச்செங்கோடு கைலாசபாளையத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் (67) என்பதும், இவர் அதே பகுதியை சேர்ந்த டிரைவர் கார்த்திகேனுடன் (30) சென்னைக்கு சென்று திரும்பியதும் தெரியவந்தது. மேலும், அதிகாலை நேரம் என்பதால் தூக்ககலக்கத்தில் டாக்டர்கள் வந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது காஜி நியமனம் செய்வதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    • பேராசிரியர் அல்லது ஆசிரியராக பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது காஜி நியமனம் செய்வதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட காஜி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் மற்றும் மாவட்ட காஜி நியமன தேர்வுக்குழு இடம் பெற விண்ணப்பிப்பவர்கள், தனியர் ஆலிம் அல்லது பாசில் ஆக இருப்பதுடன் இஸ்லாம் மார்க்க கல்வியில் புலமைப்பெற்றவராகவும் அரபு கல்லூரி அல்லது கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் அல்லது ஆசிரியராக பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

    இக்குறிப்பிடப்பட்ட தகுதியுடையவர்கள் தங்களது எல்லைக்குட்பட்ட தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • பட்டாசு கடைகளை தாசில்தார் கோபாலகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • ஜெயலட்சுமி, தீபா, கீதா, முருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள பட்டாசு கடைகளை தாசில்தார் கோபாலகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சங்கராபுரம், பூட்டை சாலை, கள்ளக்குறிச்சி மெயின் சாலை, திருக்கோவிலூர் மெயின் ரோடு, அரசம்பட்டு, வடசெட்டியந்தல், மூரார்பாளையம் ஆகிய இடங்களில் தீபாவளியை முன்னிட்டு அனுமதி பெற்று அமைந்துள்ள பட்டாசு கடைகளையும், அது அமைந்துள்ள இடத்தையும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது வருவாய் ஆய்வாளர்கள் கல்யாணி, ருத்ரகுமார், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயலட்சுமி, தீபா, கீதா, முருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • லாரியில் மணல் கடத்துவதாக வரஞ்சுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே கூத்தக்குடி மணிமுக்தா ஆற்று பகுதியில் அரசு அனுமதியின்றி லாரியில் மணல் கடத்துவதாக வரஞ்சுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அப்போது மணிமுக்தா ஆற்றின் கரைப்பகுதியில் அரசு அனுமதி இன்றி மினி லாரியில் அரை யூனிட் மணல் கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் குமார் (வயது 30) என்பவரை கைது செய்தனர்.

    • திருநாவலூர் அருகே விவசாய தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    • இதனை அறிந்த அவரது மனைவி ரத்தினவேலுவை கடுமையாக கண்டித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட ம் திருநாவலூர் அருகே தேவியானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 45). கூலித் தொழிலாளியான இவர், அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனை அவரது மனைவி மற்றும் மகன், மகள் கண்டித்த நிலையில், தான் சேமித்து வைத்திருந்த ரூ.1 லட்சத்தை அந்த பெண்ணிடம் கொடு த்துள்ளார். இதனை அறிந்த அவரது மனைவி ரத்தினவேலுவை கடுமையாக கண்டித்தார்.

    இதனால் மனமுடைந்த ரத்தினவேல், குடிபோதை யில் நிலத்திற்கு போட வை த்திருந்த கலைக்கொள்ளி மருந்தினை குடித்து தற்கொ லைக்கு முயற்சித்தார். இதில் மயங்கி கிடந்த ரத்தினவேலு வை அவரது குடும்பத்தார் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில், திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவருக்கு எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது.
    • நீலாம்பாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு (வயது 60 )கூலி தொழிலாளி.இவர் கடந்த 20-ந் தேதி சொந்த வேலையின் காரணமாக தனது இருசக்கர வாகனத்தில் சின்ன சேலம் சென்று மீண்டும் நல்லாத்தூர் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு செல்ல கச்சிராயபாளையம் சாலையில் உள்ள ரைஸ் மில் அருகே சென்று கொண்டிருந்த போது இவருக்கு எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதி யது. இதில் தங்கராசு தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த அடிப்பட்டு கோயமுத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் தங்கராசு பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது மனைவி நீலாம்பாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சர்க்கரை நோயினாலும் பாதிக்கப் பட்டுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
    • அனைத்து மாவட்டங்க ளிலும் இத்திட்டம் செயல்படுத்தபடவுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தமிழக பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை சார்பில் தமிழகம் முழுவதும் 18 முதல் 69 வயதுடைய மக்களிடையே நடத்தப்பட்ட களஆய்வின் இறுதி அறிக்கையின்படி, 23.4 சதவீதம் பேர் உயர் ரத்த அழுத்தத்தினாலும், 7.1 சதவீதம் பேர் சர்க்க ரை நோயினாலும், 10.5 சத வீதம் பேர் உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயினாலும் பாதிக்கப் பட்டுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இளம் தலைமுறையின ரை பாதிப்பிலிருந்து காத்தி டும் பொருட்டு, தமிழக சுகாதாரதுறை சார்பில் வருகிற 4.11.2023 அன்று முதல்- அமைச்சர் நடப் போம் நலம் பெறு வோம் திட்டத்தை தொடங்கி வைக்க வுள்ளார். இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்க ளிலும் இத்திட்டம் செயல்படுத்தபடவுள்ளது.

    அதன்படி கள்ளக்குறிச்சி சுகாதாரதுறை சார்பில், 4.11.2023 அன்று மாவட்ட கலெக்டர் தலைமையில், எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலகத்திலிருந்து தொடங்கி கச்சிராப்பாளை யம் சாலையில் குதிரைச்சந் தல் பஸ் நிறுத்தம் வரை 4 கி.மீ தொலைவிற்கு நடந்து சென்று மீண்டும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தடையும் நடைபயிற்சி யினை தொடங்கி வைக்க உள்ளனர். இத்திட்டத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் தலை மையில் அனைத்து துறை அலுவலர்கள் கூட்டம் நடை பெற்றது. இதையொட்டி நடப்போம் நலம்பெறு வோம் திட்டம் குறித்து மாவட்ட நடைப்பயண குழுவின் ஆலோசனைபடி, கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் ராஜா கள ஆய்வு மேற்கொண்டதன்படி நடைபயிற்சிக்கான பாதை முடிவு செய்யப்பட்டது.

    நடப்போம் நலம்பெறு வோம் திட்டத்தில் பொது மக்கள் தங்களது உடல்நலம் காக்கும் பொருட்டு நடை பயிற்சி மேற்கொள்ள முன்வர வேண்டும். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் தன்னார்வத்தோடு இதில் கலந்து கொண்டு இதய நோய், ரத்தழுத்த நோய், நீரிழிவு நோய், மன அழுத்த நோய் போன்ற வற்றிலிருந்து தற்காத்து கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரி வித்துள்ளார்.

    • 2000-ம் ஆண்டு முதல் தமிழக அரசு பரிசுத்தொகையும், சான்றிதழ்களையும் வழங்கி வருகிறது.
    • உலகத்திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்படுகிறது .

    கள்ளக்குறிச்சிடு

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் இலவச திருக்குறள் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசியதாவது:- திருக்குறளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, 1,330 திருக்குறளை மனப்பாடமாக கூறும் மாணவர்களுக்கு 2000-ம் ஆண்டு முதல் தமிழக அரசு பரிசுத்தொகையும், சான்றிதழ்களையும் வழங்கி வருகிறது. உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம் என்ற அமைப்பு தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 5 ஆண்டுகளுக்கு 2,000 திருக்குறள் புத்தகங்களை விலையில்லாமல் வழங்க முன்வந்துள்ளது. அதன்படி,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிக ளுக்கு உலகத்திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்படுகிறது . இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கள்ளக்குறிச்சி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கள்ளக்குறிச்சி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சின்னசேலம்,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சின்னசே லம்,பெரிய சிறுவத்தூர் மேல்நிலைப்பள்ளி, பெரிய சிறுவத்தூர் மாதிரி பள்ளி, தாகம்தீர்த்தாபுரம் மேல்நிலைப்பள்ளி, நயினார்பாளையம் மேல்நிலைப்பள்ளி, அரங்கநாதபுரம் உயர்நிலை ப்பள்ளி, மூரார்பாது மகளிர் உயர்நிலை ப்பள்ளி, சேஷச முத்திரம் உயர்நிலைப்பள்ளி, சித்தால் அரசு மாதிரிப் பள்ளி, சித்தேரிப்பட்டு மேல்நிலைப்பள்ளி, அரசம்பட்டு மேல்நிலைப்ப ள்ளி, ஏமப்போர் உயர்நிலைப்பள்ளி எனமொத்தம் 15 அரசு பள்ளி மாணவர்களுக்கு 750 திருக்குறள் புத்தகம் ரூ.7 ஆயிரம் மதிப்பீட்டில் மாவட்ட கலெக்டர் வழங்கி னார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாரா யணன், முன்னாள் இணை இயக்குநர் (நலப்பணிகள்) உதயகுமார், பாரதியார் தமிழ்ச்சங்கம் தலைவர் தியாகதுருகம் துரைமுருகன், சின்னசேலம் திருக்குறள் பேரவை தலைவர்பாசுகரன் என்ற பூங்குன்றன், முன்னாள் துணை கலெக்டர் கிருட்டிணசாமி,மாவட்டத் தொடர்பாளர் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் புலவர் அய்யா மோகன்,அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    ×