search icon
என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • இதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றனர்.
    • உடலை மீட்டு பாசார் கிராம நிர்வாக அலுவலர் குழந்தைவேலுவிடம் ஒப்படைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து மகன் ராமலிங்கம் (வயது 38) விவசாயி. இவர் வயல்வெளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்தார். இதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் நீச்சல் தெரியாததால் ராமலிங்கம் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலைய வீரர் ராஜா மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி ராமலிங்கத்தின் உடலை மீட்டு பாசார் கிராம நிர்வாக அலுவலர் குழந்தைவேலுவிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இது குறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பகண்டை கூட்டு ரோடு அருகே சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் அவிரியூர் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் பகண்டை கூட்டு ரோடு போலீசாருக்கு அவிரியூர் பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் உதவி ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் போலீசார் அவிரியூர் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது எகால் கிராமத்தைச் சேர்ந்த ஜான் பீட்டர் (வயது 45) என்பவர் அவரது நிலத்தில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் ஜான் பீட்டரை கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரிடமிருந்து 75 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலையில் ஆலத்தூர் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியல் ஈடுபட்டனர்.
    • சாலையின் இருபுறமும் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர் கிராமத்தில் கடந்த செப்டம்பர் 10-ந் தேதி விடுதலை சிறுத்தை கட்சி கொடி கம்பம் நடப்பட்டது. அனுமதியின்றி நடப்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் கொடி கம்பத்தை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி யைச் சேர்ந்த பொதுமக்கள் கள்ளக்குறிச்சி தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் மனு அளித்தனர். ஆனால் இது நாள் வரை கொடிகம்பம் அகற்றா ததால் ஆத்திரமடைந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலையில் ஆலத்தூர் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியல் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த கச்சிராயபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பொதுமக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பத்தை அகற்றினால் மட்டுமே சாலை மறியல் கைவிடப்படும் எனக் கூறினர். சாலை மறியல் தொட ர்ந்து நடைபெறுவதால் சாலையின் இருபுறமும் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

    • ரூ.2.லட்சம் வரை கல்விஉதவித்தொகை தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
    • விண்ணப்பங்களை 15.1.2024-க்குள்ளும் அனுப்பி வைக்க வேண்டும் .

    கள்ளக்குறிச்சி, அக்.4-

    தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறு வனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலை கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ் நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவியர் ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2.லட்சம் வரை கல்விஉதவித்தொகை தமிழ்நாடு அரசால் வழங்கப் பட்டு வருகிறது. மேலும், கல்வி உதவித் தொகைக்கு 2023-2024-ம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பிக்க விரும்பும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான மாணவர்கள் பிற்படுத்த ப்பட்ட நல இயக்ககம், மிகப்பிற்படுத்தப் பட்டோர் நல இயக்ககம் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவல கத்தை அணு கியோ அல்லது இணைய தள முகவரியிலிருந்தோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மேலும், பிற்படுத்தப் பட்டோர், மிகப்பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மர பினர் மாணவர்கள் 2023-2024-ம் நிதி யாண்டிற்கான புதியது மற்றும் புதப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்விநிறு வனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதி யான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து, ஆணை யர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை என்ற முகவரிக்கு 15.12.2023 -க்குள்ளும் புதியது விண்ணப்பங்களை 15.1.2024-க்குள்ளும் அனுப்பி வைக்க வேண்டும் . இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வரகூர் கிராமத்திற்கு சென்று சோதனை செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த வர கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன் (வயது 53) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சாரயம் விற்பனை செய்வ தாக சங்கராபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி தலை மையிலான போலீசார் வரகூர் கிராமத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது வீரன் கள்ளச்சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. போலீ சார் வீரனை கைது செய்து, அவரிடமிருந்து 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • வாணாபுரம் அருகே லாரி மோதி முதியவர் பலியானார்.
    • பொறுபாலம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜான் போஸ்கோ என்பது தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா தொண்டனந்தல் அருகே 60 வயது மதிக்கத்தக்க அடை யாளம் தெரியாத நபர் லாரி மோதி இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த பகண்டை கூட்டு ரோடு போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த வரின் உடலை கைப்பற்றி அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்தியது பொறுபாலம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜான் போஸ்கோ (35) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.

    • செந்தமிழ் செல்வன் நைனார்பாளையம் பஸ் நிலையம் அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார்.
    • செல்போன்களை திருடிச் சென்ற மர்நபர்களை தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார் பாளையம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் செந்தமிழ் செல்வன் (வயது 33). இவர் நைனார்பாளையம் பஸ் நிலையம் அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 8 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இன்று காலை கடையை திறந்த பார்த்த பொழுது கடையின் மேற்கூரை உடைத்து இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையினுள் இருந்த 4 செல்போன்கள், பேட்டரிகள், ஹெட் போன், சார்ஜர் ஒயர் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடு போனது தெரியவந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் மியோடிட் மனோ, தனிப்பிரிவு காவலர் சரவணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். செல்போன்களை திருடிச் சென்ற மர்நபர்களை தேடி வருகின்றனர்.

    • அப்போது வைக்கோல் போரில் இருந்த வந்த விஷ பாம்பு இவரை கடித்தது.
    • தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் மகன் நவீன் (வயது 11). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று மாண வர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டி ருந்தார். அப்போது வைக்கோல் போரில் இருந்த வந்த விஷ பாம்பு இவரை கடித்தது.

    இதனையடுத்து நவீனை கள்ளக்குறிச்சி அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனு மதித்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மாணவன் நவீன் இறந்து போனார். இது குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.
    • ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ.வுமான வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா பகண்டை கூட்ரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி தெற்கு தி.மு.க. மாவட்ட செயலாளரும், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ.வுமான வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதில் தனியார் கார், ஆட்டோ, வேன் டிரைவர்கள் கலந்து கொண்டு அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர். முகாமில் ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், நிர்வாகிகள் கோவிந்தராஜ், சாமி சுப்பிரமணியன், கே.அண்ணாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெரியசாமிக்கும் பூர்வீக விவசாய நிலத்தை பாகப்பிரிவினை செய்வதில் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது
    • இந்த நிலையில் காட்டனந்தல் ஏரிக்கரையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள காட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி. இவருடைய கணவர் செல்லப்பா (வயது 50). இவருக்கும் இவருடைய தம்பி பெரியசாமிக்கும் பூர்வீக விவசாய நிலத்தை பாகப்பிரிவினை செய்வதில் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நிலத்தை பாகப்பிரிவினை செய்யாமல் இருப்பதால் செல்லப்பா சரியாக சாப்பிடாமல், மன உளைச்சலிலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் காட்டனந்தல் ஏரிக்கரையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் செல்லப்பாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து செல்லப்பாவின் மனைவி கொளஞ்சி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் புக்கிரவாரி புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • விற்பனைக்காக அவர் வைத்திருந்த 19 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த னர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே வரஞ்சரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் புக்கிரவாரி புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கல்லுக்குட்டையில் உள்ள தனது வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் ராமலிங்கம் தப்பியோடினார். மேலும் அங்கு விற்பனைக்காக அவர் வைத்திருந்த 19 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய ராமலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • 30 கிராமங்களில் காய்ச்சல் மற்றும் மழைக்கால நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.
    • மழைக்காலங்களில் குடிநீரை கொதிக்க வைத்து, ஆறவைத்து பருகவும்.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 1,000 இடங்களில் டெங்கு மற்றும் மழைக்கால நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடை பெறும் என அறிவிக்க ப்பட்டிருந்தது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின்படி, வட்டாரத்திற்கு 3 காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் வீதம் 30 கிராமங்களில் காய்ச்சல் மற்றும் மழைக்கால நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றது. இந்த முகாமில் காய்ச்சல், சளி, உடல்வலி, வயிற்றுப்போக்கு போன்ற அனைத்து நோய்களுக்கும் மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர்கள் மூலம் 2,152 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் நிலவேம்பு குடிநீர், ஓ.ஆர்.எஸ் திரவமும் வழங்கப்பட்டது.

    காய்ச்சல் உள்ள நபர்களுக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனை செய்து மேல்சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.மேலும் முகாம் நடைபெற்ற அனைத்து கிராமங்களிலும் உள்ள மேல்நிலை நீர்த்தேக்த் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு குளோ ரினேசன் செய்யப்பட்டது. இதேபோல் சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் கிராமம் முழுவதும் டெங்கு கொசு புழுக்களை ஒழித்தல், தூய்மைப் பணியாளர்கள் மூலம் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துதல், கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

    மழைக்காலங்களில் குடிநீரை கொதிக்க வைத்து, ஆறவைத்து பருகவும், வீட்டில் தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள் மற்றும் தொட்டிகளை 3 நாட்களுக்கு ஒருமுறை நன்கு கழுவி பின் பயன்படுத்தவும், வீடு மற்றும் அருகில் உள்ள தேவையற்ற பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளில் தண்ணீர் தேங்கவிடாமல் அப்புறப்படுத்தவும், காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் கடைகளில் விற்கும் மாத்திரைகளை வாங்கி சாப்பிடாமல் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

    ×