search icon
என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக சேத்தியாத்தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • காக்கா வலிப்பு நோய் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரகுடி வெள்ளாற்றங்கரையில் 30 வயது மதிக்கத்தக்க பெண் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக சேத்தியாத்தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், பாப்பாக்குடி கிராமத்தைச் சேர்ந்த ரத்தினசாமி மகள் சூர்யா (வயது 30) என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இவருக்கு காக்கா வலிப்பு நோய் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சூரியாவின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோகதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சூரியாவின் உடலை அவரது பெற்றோரிடம் ஓப்படைத்தனர்.

    • காலை வீட்டின் பின்புறமிருந்து கரும்புகை வந்துள்ளது.
    • குளிர்சாதனப்பெட்டி முற்றிலும் எரிந்து சேதமானது.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டி புதுநகரை சேர்ந்தவர் சீனுவாசன் (வயது 59). வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிக்கெட் பரிசோகராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு, சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டு பணிக்கு சென்று விட்டார். இந்நிலையில் இன்று காலை வீட்டின் பின்புறமிருந்து கரும்புகை வந்துள்ளது. இது தொடர்பாக சீனுவாசனிடம் தகவல் கொடுத்துவிட்டு, பக்கத்து வீட்டுக்காரர் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது சமையலறையில் இருந்த குளிர்சாதனப்பெட்டி எரிந்து கொண்டிருந்தது. இத்தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இதில் குளிர்சாதனப்பெட்டி முற்றிலும் எரிந்து சேதமானது. மின்அழுத்தம் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நல்லாசிரியர் விருது எனப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி வருகிறது.
    • கலைவாணர் அரங்கில் கடந்த 5- ந் தேதி நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு அரசு ஆண்டு தோறும் கல்விச்சேவையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது எனப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் 2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 5- ந் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களில் சித்தலூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசேகரன், தேவ பாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தண்டபாணி, வடதொ ரசலூர் அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் துரைசாமி, திருக்கோவிலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் வில்வபதி ஆகியோரும், தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளிலிருந்து கீழ்ப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி, கச்சிராயபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி, நைனாக்கு ப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன், சின்னமாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் ராஜேந்திரன் ஆகிய ஆசிரியர்களுக்கும், மெட்ரிக் பள்ளிகளிலிருந்து உளுந்தூர்பேட்டை சாரதா வித்யாலயா பள்ளி முதல்வர் சந்திரா என 9 ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ராதா கிருஷ்ணன் விருதுகளை வழங்கி, வெள்ளிப் பதக்கம் அணிவித்து தலா ரூ.10,000 ரொக்கப் பரிசு வழங்கி கவு ரவித்தார்.

    இதனைத் தொடர்ந்து, இவ்விருது பெற்ற கள்ள க்குறிச்சி மாவட்ட த்தைச் சேர்ந்த 9 ஆசிரியர்களும் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்கு மாரை நேரில் சந்தித்து சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்ச்சியில், கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ண ப்பிரியா, மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) ஆரோக்கியசாமி, மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) ஜோதிமணி, மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) துரைராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (இடைநிலை) ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • இளைஞர் திறன் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • வேலைவாய்ப்பை பெற்று பயனடையலாம்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலை தேடுபவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாக மாவட்ட வேலைவாய்ப்பு துறை அலுவலகம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கமும் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி வருகிற 23-ந் தேதி கள்ளக்குறிச்சி ஏ.கே.டி பள்ளி வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 150 க்கும் மேற்பட்ட பிரபல முன்னனி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் பள்ளி படிப்பு முதல் பட்டப் படிப்பு வரை பயின்றுள்ள இளைஞர்கள் கலந்து கொண்டு, வேலைவாய்ப்பை பெற்று பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • வனப்பகுதியில் தீவிர சாராய சோதனையில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் அருகில் உள்ள ஓடையில் வண்டைக்காப்பாடி கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் கள்ளச்சாரயம் காய்ச்சுவத ற்காக சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் உத்தரவின் பேரில் கரியாலூர் சப்- இன்ஸ்பெ க்டர் குணசேகரன் வண்டை க்காப்பாடி வனப்பகுதியில் தீவிர சாராய சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 200 லிட்டர் பிடிக்கக் கூடிய 4 பிளாஸ்டிக் பேரல்களில் 800 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டுபிடித்து அழித்தனர். கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக சாராயம் பதுக்கி வைத்த நபர் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    • ஆர்பாட்டம், சாலை மறியல் நடைபெற்றது.
    • 39 பேர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அனைத்து பொது சேவை கூட்டமைப்பு சார்பில், சங்கராபுரம் 3 முனை சந்திப்பில் வாணாபுரம் தாலுகா பிரித்ததை மறுவரையறை செய்யக்கோரி கடையடைப்பு, ஆர்பாட்டம், சாலை மறியல் நடைபெற்றது. இதில் வடபொன்பரப்பி குறுவட்டத்துக்குட்பட்ட 23 கிராமங்களை சங்கராபுரம் தாலுகாவில் இனணக்கக் கோரி சங்கராபுரம்-கள்ளக்குறிச்சி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதில் அனுமதியின்றி, போக்குவரத்துக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்ட அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் சேகர் உள்பட 39 பேர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    • விவசாய நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிர் செய்து விவசாயம் செய்து வருகிறார்.
    • பயிரில் ஊடுபயிராக கஞ்சா பயிரிட்டு வந்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் பெரிய பலாப்பூண்டி பகுதியில் உள்ள வெள்ளையன் மகன் ஆண்டிர் அவருடைய விவசாய நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிர் செய்து விவசாயம் செய்து வருகிறார். அந்த மரவள்ளிக்கிழங்கு பயிரில் ஊடுபயிராக கஞ்சா பயிரிட்டு வந்துள்ளார். இது குறித்து கரியாலூர் சப்- இன்ஸ்பெக்டர் குணசேகரன் ரகசிய தகவல் கிடைத்தது .அவர் தலைமையிலான போலீசார் ஆண்டி விவசாய நிலத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது அங்கு சட்ட விரோதமாக மரவள்ளிக்கிழங்கு பயிர் இடையே கஞ்சா பயிரிட்டுள்ளதை கண்டுபிடித்து அழித்தனர்.

    • மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வந்தனர்.
    • சூர்யாவை கைது செய்து அவரிடமிருந்து திருடிய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே ரங்கப்பனூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது47). இவர் சம்பவத்தன்று தனது விவசாய நிலத்தின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து குமார் கொடுத்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வந்தனர். விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடியவர் திருவண்ணாமலை மாவட்டம், அகரம்பள்ளிப்பட்டு முஸ்லிம் தெருவை சேர்ந்தபழனி மகன் சூர்யா(22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்பெஸ்க்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் அகரம்பள்ளிப்பட்டுக்கு விரைந்து சென்று சூர்யாவை கைது செய்து அவரிடமிருந்து திருடிய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.
    • ஜெயவர்ஷினி அனைத்து இடங்களையும் தேடி பார்த்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள தென் சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 50) கூலி வேலை செய்து வருகிறார்.இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் ராஜேஷ் (22) பி.ஏ. பட்டதாரியான இவருக்கு திருக்கோவிலூரை சேர்ந்த ஜெய வர்ஷினி (20) என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் சின்னசேலம் அருகே உள்ள மூங்கில் பாடி கிராமத்தில் தனியாக வசித்து வருகின்றனர். பின்னர் கணவன் ராஜேஷ் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்த மனைவி ஜெயவர்ஷினி வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளார்.

    இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி அன்று வீட்டை விட்டு வெளியே சென்ற ராஜேஷ் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த மனைவி ஜெயவர்ஷினி அனைத்து இடங்களையும் தேடி பார்த்தார். எங்கேயும் கிடைக்காததால் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்து சின்னசேலம் போலீசார் காணாமல் போன ராஜேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
    • அந்தந்த துறையின் லோகோ ஸ்டிக்கர்கள் மற்றும் எழுத்துக்களை ஒட்டி உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் துணை போலிஸ் சூப்பிரண்டு மனோஜ் குமார் கூறியதாவது;-

    திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள், கார்கள் உள்ளிட்டவைகளில் போலீஸ், பிரஸ், வக்கீல் மற்றும் அரசு துறையின் கீழ் பணியாற்றுபவர்கள் அந்தந்த துறையின் லோகோ ஸ்டிக்கர்கள் மற்றும் எழுத்துக்களை ஒட்டி உள்ளனர். இது முற்றிலும் சட்டத்திற்கு புறம்பானதாகும். அரசு வாகனங்களில் மட்டுமே அந்தந்த துறையின் சார்பில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம். தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட கண்டிப்பாக அனுமதி கிடையாது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றமும் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறது.

    எனவே, திருக்கோவிலூர் பகுதியில் வாகனங்களில் ஒட்டப்பட்டு இருக்கும் ஸ்டிக்கர்களை உடனடியாக தாங்களாகவே அகற்ற வேண்டும். அரசு அறிவித்துள்ளபடி நம்பர் பிளேட்டுகளில் நம்பர் தெரியும்படி இருக்க வேண்டும். வருகிற 20-ந்தேதியில் இருந்து திருக்கோவிலூர் நகரப் பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவார். வீதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    • சதீஷ்குமார் கூலி வேலை செய்து வருகிறார்.
    • போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    கள்ளக்குறிச்சி:  

    சின்னசேலம் அருகே உள்ள தொட்டியம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 30) கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மணிமேகலை (25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று மணிமேகலை மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பாததால் கணவன் சதீஷ்குமார் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கை பதிவு செய்து சின்னசேலம் போலீசார் மணிமேகலையை தேடி வருகின்றனர்

    • மது போதையில் தினமும் ரேகாவிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
    • வழக்கு பதிவு செய்து துரைசாமியை கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பாண்டியன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த முருகன். அவரது மனைவி ரேகா (வயது 30) இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த துரைசாமி (50) என்பவர் மது போதையில் தினமும் ரேகாவிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று ரேகாவை துரைசாமி கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் ரேகா புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து துரைசாமியை கைது செய்தனர். பின்னர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×